என் மலர்
இந்தியா
- தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் பசுவை ஒரு விலங்காக கருதுவதில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
விஞ்ஞான் பவனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுய மோடி, "சமீபத்தில், நான் சில விலங்கு பிரியர்களைச் சந்தித்தேன்" என்று கூற அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து பிரதமர் மோடி சிறிது நேரம் நின்று கூட்டத்தினரிடம், "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? நம் நாட்டில் பல விலங்கு பிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பசுவை ஒரு விலங்காகக் கருதுவதில்லை" என்று கூறினார்.
- மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வெப்ப காற்று பலூனில் சென்றார்.
- இந்த பலூனில் திடீரென தீப்பிடித்தது. இதில் நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார்.
போபால்:
மத்திய பிரதேசத்தின் சுற்றுலா தலமான காந்திசாகருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் சென்றுள்ளார். மாண்ட்சோர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் வெப்ப காற்று பலூன் ஒன்றில் அவர் பறக்க விரும்பினார்.
இதற்காக மோகன் யாதவ் பலூனில் ஏறினார். அடுத்த சில நிமிடங்களில் பலூன் தயாராக இருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.
பலத்த காற்றினால் பலூன் மேலே எழும்ப முடியாமல் தடுமாறியது. இதையடுத்து, சமயோசிதமாக செயல்பட்ட பாதுகாவலர்கள் முதல்மந்திரி மோகன் யாதவை காப்பாற்றினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில், முதல் மந்திரி மோகன் யாதவ் கூறுகையில், சுற்றுலா பயணிகளை கவர இங்கு பல அம்சங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையமாக இந்தப் பகுதி உள்ளது என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து காங்கிரஸ் கட்சி ஏஐ வீடியோ வெளியிட்டது.
- இதன்மூலம் அவதூறு பரப்பியதாக பீகார் காங்கிரஸ் ஐடி பிரிவு மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுடெல்லி:
பீகார் மாநில காங்கிரசார் கடந்த 10-ம் தேதி தங்களது எக்ஸ் வலைதளத்தில் 36 வினாடி ஓடும் ஒரு வீடியோவை பகிர்ந்தது. ஏ.ஐ. வடிவிலான அந்த வீடியோவில் பிரதமரின் அரசியல் பயணத்தை, அவரது தாயார் கண்டிப்பது போன்று பிரதமர் கனவு காண்பதாக அமைந்துள்ளது.
இந்த வீடியோ பிரதமர் மோடியின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
ஆனால், இந்த வீடியோவில் யாருக்கும் அவமரியாதை இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், டெல்லி வடக்கு அவென்யூ போலீஸ் ஸ்டேஷனில் பா.ஜ.க. டெல்லி தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கேத் குப்தா, காங்கிரஸ் கட்சி மீது புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், பிரதமர் மோடி மற்றும் அவரது தாயின் கண்ணியத்தைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
புகாரின்பேரில், பெண்களின் கண்ணியத்தை சீர்குலைத்ததாகக் கூறி, 18(2), 336(3), 336(4), 340(2), 352, 356(2) மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, பீகாரில் நடந்து வரும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான யாத்திரையின்போது, பிரதமர் மோடி, அவரது இறந்த தாயாரை குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் அவதூறு பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- உணவு பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
- பாகனுடன் யானையைக் காணவில்லை என உரிமையாளர் புகார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் யானையைக் காணவில்லை என ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது, வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்பவர், பலமு மாவட்டத்தில் உள்ள ஜார்காட் பகுதியில் இருந்து யானையையும், பாகனையும் காணவில்லை. யானையைத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார். மேலும், யானைக்கான உரிமை எண்ணையும் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வன அதிகாரி "பலமுவில் உணவு பற்றாக்குறை காரணமாக, அதன் உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு கொண்டு வந்தார். அங்கிருந்து மர்சாபூருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். பலமுவில் யானையை பாகனிடம் ஒப்படைத்தார். அதன்பின் யானையுடன் பாகன் மாயமானார். வன சரக அதிகாரி இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
- மோட்டார் சைக்கிளில் இருவருடன் சந்தைக்கு சென்று திரும்பிய போது உறவினர்கள் பார்த்து ஆத்திரம்.
- மாமியாருக்கு சொந்தமான நபருடன் சென்ற போதிலும், உறவினர்கள் கள்ளக்காதல் என சந்தேகப்பட்டு தாக்குதல்.
ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் இரண்டு ஆண்களுடன் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மார்க்கெட்டுக்கு சென்று சொந்த கிராமத்திற்கு திரும்பியபோது, பெண்ணின் உறவினர்கள் அவர்களை பார்த்துள்ளனர். அப்போது அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கும் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி தகராறு செய்தனர்.
அப்போது கிராம மக்கள் ஒன்று கூடினர். அவர்கள் மூன்று பேரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அத்துடன் அவர்களை கடுமையாக தாக்கினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்களில் ஏற்றிச் சென்ற இரண்டு பேர்களில் ஒருவர், அந்த பெண்ணின் மாமியாருக்கு நெருங்கிய நபரும், சகோதரன் போன்றவர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவருடைய தந்தை வழி மாமா உள்பட சிலர் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டினர்.
- தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.249 ரீசார்ஜ் இருந்தது.
- ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது ஜியோ, ஏர்டெல்-ன் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
ஜியோவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஏர்டெலும் குறைந்தபட்ச மாதாந்திர பேக்கை நிறுத்தியுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 மாதாந்திர பேக் திட்டத்தை ஏர்டெல் நீக்கியுள்ளது. இனிமேல் ரூ.299 (1.5GB/Day) குறைந்தபட்ச மாதாந்திர பேக்காக இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் முடிவில் தலையிட இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு நிறுவனங்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது.
- இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
- கனமழையால் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் ஹெலிகாப்டரில் செல்வது பாதுகாப்பானது அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், சூரசந்த்பூரில் மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி திட்டவட்டாக தெரிவித்துள்ளார். இதனால் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. அதேவேளையில் சாலை வழியாக சென்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனால் சாலை வழியாக பிரதமர் மோடி சூரசந்த்பூர் சென்றார். அவருக்கு சாலையின் இரு பக்கமும் மக்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்று அளித்தனர். மேலும், பேரணி நடைபெற்ற இடத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில் "மணிப்பூர் மக்களின் உறுதிக்கு சல்யூட். கனமழை பெய்த போதிலும் கூட, மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளனர். உங்களுடைய அன்புக்காக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹெலிகாப்டர் கனமழை காரணமாக இங்கு வர முடியவில்லை. இதனால் நான் சாலை மார்க்கமாக வர முடிவு செய்துள்ளேன். இன்று சாலையில் நான் கண்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஹெலிகாப்டர் மூலம் இல்லாமல், நான் சாலை வழியாக வந்தது நல்லது என்று என் மனம் சொல்கிறது.
வழியெங்கும் மூவர்ணக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி அனைவரும் எனக்கு அன்பும் பாசமும் அளித்த இந்த தருணத்தை என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாது. மணிப்பூர் மக்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- 2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா?
- Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் லோகா' படத்தின் போது திரையரங்கிற்குள் அமர்ந்து மடிக்கணினியில்
வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா? Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
- மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* 21 ஆம் நூற்றாண்டு வடகிழக்குக்கு சொந்தமானது.
* வாய்ப்புகளின் நகரம் இம்பால். இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தும் இடங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன்
* மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மணிப்பூர் பெண்கள் முன்னணியில் உள்ளனர்
* மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது
* மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்
* ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்
* நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றதற்கு சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகள். இது பெண்கள் அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
* மணிப்பூரில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அசு பல திட்டங்களில் செயல்படுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.
- மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.
இந்த நிலையில் 8500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மற்றும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான இன்று மணிப்பூர் சென்றார். சூரசந்த்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
* மணிப்பூர் வீர் நிறைந்த பூமி.
* இம்பாலில் இருந்து சாலை வழியாக சூரசந்த்பூருக்குச் செல்லும் வழியில் எனக்குக் கிடைத்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
* இன்று திறக்கப்பட்ட திட்டங்கள் மணிப்பூரில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
* 2014 முதல், மணிப்பூரில் இணைப்பை மேம்படுத்துவதற்கு நான் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.
* இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
* மணிப்பூரில் ரெயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது:
* வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியம்
* உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
* வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.
* மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுடன் இருக்கிறேன்.
* மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.
* முன்னதாக, டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவுகள் மணிப்பூரை எட்ட பல தசாப்தங்கள் ஆனது, ஆனால் இப்போது மணிப்பூர் நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- நீங்கள் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.
- உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு 2 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
"மணிப்பூரில் உங்கள் 3 மணி நேர வருகை இரக்கம் அல்ல. இது கேலிக்கூத்து, அடையாளவாதம் மற்றும் காயமடைந்த மக்களுக்கு ஒரு பெரிய அவமானம்.
இன்று இம்பால் மற்றும் சூரசந்த்பூரில் உங்கள் ரோடு ஷோ என்று அழைக்கப்படுவது, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் அழுகையைக் கேட்பதிலிருந்து கோழைத்தனமாக தப்பிப்பதைத் தவிர வேறில்லை!
864 நாட்கள் தொடரும் வன்முறையில் 300 உயிர்களை இழந்தோம். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 67,000 இடம்பெயர்ந்தனர்.
நீங்களோ 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டீர்கள், ஆனால் உங்கள் சொந்த குடிமக்களுடன் அனுதாபத்துடன் இரண்டு வார்த்தைகள் பேச ஒரு முறை கூட செல்லவில்லை.
மணிப்பூருக்கு உங்கள் கடைசி வருகை ஜனவரி 2022. அதுவும் தேர்தலுக்காக!. உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.
நீங்களும் அமித் ஷாவும் காட்டிய திறமையின்மை மற்றும் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.
வன்முறை இன்னும் தொடர்கிறது.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருந்தது. இப்போது மத்திய அரசு மீண்டும் தடுமாறி வருகிறது.
மறக்க வேண்டாம், தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை கண்காணிப்புக்கு உங்கள் அரசுதான் பொறுப்பு.
தற்போது செல்லும் வழியில் பெட்ரோல் நிரப்புவதற்கான நிறுத்ததிற்கு நிற்பது போல் மணிப்பூர் வந்திருப்பது உங்கள் வருத்தத்தை காட்டவில்லை. குறைந்தபட்சம் இது குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு கூட இல்லை.
நீங்கள் உங்களுக்காக ஒரு மகத்தான வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்கிறீர்கள். அடிப்படை அரசியலமைப்பு பொறுப்புகளை நீங்கள் கைவிட்டதால் இன்னும் துன்பப்படுபவர்களின் காயங்களுக்கு இது ஒரு கொடூரமான அடியாகும்!" என்று தெரிவித்துள்ளார்.






