என் மலர்tooltip icon

    இந்தியா

    • நீங்கள் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.
    • உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு 2 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். 

    இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

    "மணிப்பூரில் உங்கள் 3 மணி நேர வருகை இரக்கம் அல்ல. இது கேலிக்கூத்து, அடையாளவாதம் மற்றும் காயமடைந்த மக்களுக்கு ஒரு பெரிய அவமானம்.

    இன்று இம்பால் மற்றும் சூரசந்த்பூரில் உங்கள் ரோடு ஷோ என்று அழைக்கப்படுவது, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் அழுகையைக் கேட்பதிலிருந்து கோழைத்தனமாக தப்பிப்பதைத் தவிர வேறில்லை!

    864 நாட்கள் தொடரும் வன்முறையில் 300 உயிர்களை இழந்தோம். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 67,000 இடம்பெயர்ந்தனர்.

    நீங்களோ 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டீர்கள், ஆனால் உங்கள் சொந்த குடிமக்களுடன் அனுதாபத்துடன் இரண்டு வார்த்தைகள் பேச ஒரு முறை கூட செல்லவில்லை.

    மணிப்பூருக்கு உங்கள் கடைசி வருகை ஜனவரி 2022. அதுவும் தேர்தலுக்காக!. உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.

    நீங்களும் அமித் ஷாவும் காட்டிய திறமையின்மை மற்றும் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.

    வன்முறை இன்னும் தொடர்கிறது.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருந்தது. இப்போது மத்திய அரசு மீண்டும் தடுமாறி வருகிறது.

    மறக்க வேண்டாம், தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை கண்காணிப்புக்கு உங்கள் அரசுதான் பொறுப்பு.

    தற்போது செல்லும் வழியில் பெட்ரோல் நிரப்புவதற்கான நிறுத்ததிற்கு நிற்பது போல் மணிப்பூர் வந்திருப்பது உங்கள் வருத்தத்தை காட்டவில்லை. குறைந்தபட்சம் இது குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு கூட இல்லை.

    நீங்கள் உங்களுக்காக ஒரு மகத்தான வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்கிறீர்கள். அடிப்படை அரசியலமைப்பு பொறுப்புகளை நீங்கள் கைவிட்டதால் இன்னும் துன்பப்படுபவர்களின் காயங்களுக்கு இது ஒரு கொடூரமான அடியாகும்!" என்று தெரிவித்துள்ளார். 

    • கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
    • அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அடுக்குமாடி வீட்டில் நடந்த கொலை கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    சைபராபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் 50 வயதான ரேணு அகர்வால் ஸ்டீல் பிஸ்னஸ் செய்யும் தனது கணவர் மற்றும் 26 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் ரேணு அகர்வால் தனியாக இருந்தபோது இருவர் அவரை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் பாஸ்வேர்டை கேட்டு சித்ரவதை செய்தனர்.

    பின்னர் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 40 கிராம் தங்கம், 1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.

    வேலைக்கு சென்ற மகனும், கணவனும் வந்து பார்த்தபோது ரேணு அகர்வால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 

    சம்பவத்தன்று 13 வது மாடியில் இருந்து இருவரும் வெளியேறும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் அவர்களை அடையாளம் கண்டு தேடி வந்தது.

    இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து குற்றவாளிகளை கைது செய்தனர். இருவரும் ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

    அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான். அதே குடியிருப்பின் அடுத்த தலத்தில் மற்றொரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவனுடன் சேர்ந்து இந்த கொலை கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது.   

    • மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்? என்று கேட்டார்.
    • ரேபரேலி எம்.யுமான ராகுல் காந்திக்கும், உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு  கூட்டம் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் ரேபரேலி எம்.யுமான ராகுல் காந்திக்கும், உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கூட்டத்தின் நடுவில் அமைச்சர் தினேஷ் பேசியதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

    கூட்டத்திற்கு தான் தலைமை தாங்குவதாகவும், கூட்டத்தில் பேச விரும்பினால் முதலில் அனுமதி பெற வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், மக்களவையில் சபாநாயகருக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இப்போது நான் ஏன் உங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்? என்று கேட்டார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

    • மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இனக்கலவரம் நடந்தது.
    • மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து, மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 

    • இந்த சம்பவம் ரெயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
    • இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் உடனடியாக அப்பெண்ணை பத்திரமாக காப்பாற்றினர்.

    இந்த சம்பவம் ரெயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார்.
    • கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

    கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த சிக்க ஹெஜ்ஜுவை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 54). விவசாயி. இவரது மனைவி சல்லாபுரி (48).

    இவர்களின் கிராமத்தை சேர்ந்த சிலர் வனவிலங்குகள் தாக்கி இறந்தால் அரசிடமிருந்து அதிக அளவில் இழப்பீடு தொகை கிடைக்கும் என பேசிக்கொண்டு இருந்தனர்.

    இதனைக்கேட்ட சல்லாபுரி தனது கணவரை கொலை செய்து காட்டில் வீசி விட்டால் பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டார்.

    அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார். கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் ஹினாசுரு போலீஸ் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் தனது கணவரை காணவில்லை எனவும், வயலில் வேலை செய்து கொண்டு இருந்தபோது புலி அவரை கடித்துக்கொன்று வனப்பகுதியில் இழுத்துச் சென்று இருக்கலாம் என தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடசாமியை தேடி வந்தனர். வயல்வெளியில் புலி வந்து சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை.

    கிராம மக்களுடன் சேர்ந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் வெங்கடசாமியின் உடல் கிடந்தது.

    மேலும் அவரது உடலின் தோலின் நிறம் மாறி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சல்லாபுரியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காட்டு விலங்கு தாக்கி இறந்தால் அதிக அளவு அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என நம்பி கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை வனப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சல்லாபுரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
    • எந்த ஆட்சேபனையும் கூறவில்லை என்பதால் பாலம் டிப் டாப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அசோக் சவுக் பகுதி பக்கம் செல்பவர்களுக்கு தலையை சொரிந்து யோசிக்கும் ஒரு காட்சி காணக்கிடைக்கும்.

    அங்கு வீட்டின் பால்கனி வழியாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் இந்தோரா- திகோரி இடையே கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மோசமான திட்டமிடலுக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த NHAI அதிகாரிகள், அந்த வீட்டின் பகுதி சட்டவிரோத ஆக்கிரமிப்பில் அமைந்துள்ளதாகவும், மேம்பால கட்டுமானத்தில் போதே இதுபற்றி நாக்பூர் நகராட்சியிடம் தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.

    இருப்பினும் நாக்பூர் நகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டின் உரிமையாளருடன் பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தனர். அந்த நபர் தனது வீட்டின் பால்கனி வழியாக மேம்பாலம் செல்ல எந்த ஆட்சேபனையும் கூறவில்லை என்பதால் பாலம் டிப் டாப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி மேம்பாலம் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

    • மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
    • குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகளை வைக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் யுகந்தர். இவருடைய மனைவி மவுனிகா இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். தம்பதியின் ஒன்றரை வயது மகன் ரக்ஷித்ராம்.

    மவுனிகா இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய மகனை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு தண்ணீர் பாட்டில் மூடியை குழந்தை எடுத்து விழுங்கியது.

    பாட்டில் மூடி தொண்டையில் சிக்கியதால் குழந்தை அலறியது. சத்தம் கேட்டு மவுனிகா மற்றும் அலுவலக ஊழியர்கள் ஓடி வந்தனர். குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரக்ஷித்ராம் இறந்தது.

    இதைக் கண்டு அவருடைய தாய் கதறி அழுதார். குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகளை வைக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    • மிசோரம் தலைநகர் முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    மிசோரம் தலைநகரை முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் ரூ.8,070 கோடிக்கு மேல் மதிப்புள்ள பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதனையடுத்து, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 

    • இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர்.
    • இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.

    ஜூலை 11, 2006 அன்று மும்பை புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர். இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.

    இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    கடந்த ஜூலை மாதம் அந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு தரப்பு இந்த வழக்கை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பங்களுக்கும் 2015 தீர்ப்பில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட 13வது சந்தேக நபரான அப்துல் வாஹித்துக்கும் நிவாரணமாக அமைந்தது.

    இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் 2006 முதல் போலீஸ் காவலில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும், சமூகத்தில் தன் பெயர் மீதாக தவறாக கற்பிக்கப்பட்ட களங்கத்துக்கும் ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மனித உரிமை ஆணையத்தில் அவர் மனு செய்துள்ளார். மேலும் தனது மறுவாழ்வுக்கும் வழிவகை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    2006 இல் மும்பை பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்ட அப்துல் 9 வருடங்கள் சிறையில் இருந்தார். கடந்த 2015 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த 9 வருட சிறைவாசம், தனது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையை பாதித்ததாகவும், போலீஸ் கஸ்டடியில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகளால் தனக்கு கடுமையான உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    • போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது.
    • புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர்.

    தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சப்ஷா பள்ளியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி மம்தா. தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகன் சரண்(வயது 4) மகள் தனுஸ்ரீ (3). கருத்து வேறுபாடு காரணமாக மம்தா அவருடைய கணவரை பிரிந்தார்.

    தனது மகன் மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் அவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. அவருடன் வாழ முடிவு செய்தார்.

    கடந்த ஜூன் மாதம் மம்தா தனது மகனை தாய் வீட்டில் விட்டு விட்டு மகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.

    அப்போது கள்ளகாதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி குழந்தை தனுஸ்ரீயை மம்தா மற்றும் பயாஸ் இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். யாருக்கும் தெரியாமல் குழந்தை உடலை புதைத்து விட்டனர். இதற்கிடையே மனைவி குழந்தை காணாமல் மாயமானது குறித்து பாஸ்கர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் விசாரணையில் மம்தா, பயாஸ் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். மம்தா, பயாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தமுனி என்பவர் 30 வருடங்களாக ஒரு கிளியை வைத்து ஜோதிடம் கூறி வந்தார்.
    • ஒருவர் எலி ஜோதிடம் சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலத்தில் உள்ள எஸ்.வி.புரம் அஞ்சேரம்மா கோவிலில் எலி ஜோதிடம் சொல்லுதல் பலரையும் கவர்ந்து வருகிறது.

    நாராயணவனம் கிராமத்தில் வசிக்கும் சித்தமுனி என்பவர் 30 வருடங்களாக ஒரு கிளியை வைத்து ஜோதிடம் கூறி வந்தார். ஒரு வருடம் முன்பு சென்னைக்கு சென்றபோது அங்கு ஒருவர் எலி ஜோதிடம் சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

    எனவே அங்கிருந்து பயிற்சி பெற்ற எலியை வாங்கி வந்தார். சிறிது காலம் பிறகு உள்ளூர் கோவிலில் எலியைக் கொண்டு ஜோதிடம் சொல்லத் தொடங்கினார். இந்த எலியின் பெயர் கணேஷ். எலி விநாயகரின் வாகனம் என்பதால் பலரும் ஜோதிடம் பார்க்க வருவதாக தெரிவித்தார்.

    ×