என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம் வீரர் பலி"

    • ஹர்த்திக் ரதி, விளையாட்டு மைதானத்தில் தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
    • ஹர்த்திக் ரதி மீது கம்பம் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    அரியானா மாநிலம் ரோக்தக் பகுதியை சேர்ந்தவர் ஹர்த்திக் ரதி (வயது 16). இவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர்.

    இந்த நிலையில் ஹர்த்திக் ரதி, விளையாட்டு மைதானத்தில் தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கூடைப்பந்து வளையத்தில் தொங்க முயற்சித்தார்.

    இதில் அந்த கம்பம் திடீரென்று வளைந்து சரிந்து ஹர்த்திக் மீது விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஹர்த்திக் ரதி மீது கம்பம் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும், தடகள வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரியானா ஒலிம்பிக் சங்கம் அடுத்த மூன்று நாட்களுக்கு விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்தி வைத்துள்ளது.

    மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் கிரிக்கெட் பயிற்சியின் போது திடீரென மின்சாரம் தாக்கி கிரிக்கெட் வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Lightning
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் தேபாபிரதா பால். இவர் கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா பூங்காவில் உள்ள கொல்கத்தா கிரிக்கெட் அகாடாமியில் பயின்று வந்தார்.

    நேற்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கி தேபாபிரதா கீழே விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #Lightning
    ×