என் மலர்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவம னையில் டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காதொலி கருவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்பவர்கள் எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்தது. தற்போது தமிழக அரசு எடுத்த முயற்சியில் ஆயிரம் டயாலிசிஸ் மிஷின்கள் மாவட்ட முதல் தாலுகா மருத்துவமனை வரை வழங்கியதன் அடிப்படையில் டயாலிசிஸ் செய்வோரின் எண்ணிக்கை 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிநீர் பிரச்சினை என்பது கிடையாது. இதனால் டயாலிசிஸ் செய்வதில் எந்தவிதமான சிரமமும் இல்லை.
அனைத்து மருத்துவமனைகளிலும் தனி பிரிவு அமைக்கப்பட்டு டயாலிசிஸ் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை:
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் பாதித்த பகுதிகளில் கடந்த ஆண்டு ஆய்வு நடத்திய அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மரங்கள் சாய்ந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என்றார்.
ஆனால், சமீபத்தில் அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் நிவாரணம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அத்து மீறல்களை கண்டிக்காமல், ஆதரவளித்து நடிகர் ரஜினி காந்த் பேசி வருவது வேதனையாக உள்ளது. அரசியலில் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை, அவரது பேச்சு தெளிவாக்குகிறது.
லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றியது வர வேற்கத்தக்கதாக இருந்தாலும் சிறப்பு அந்தஸ்தில் இருந்து குறைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கட்டுமாவடியை சேர்ந்தவர் ராஜாராம். இவர் அங்கு மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்றிரவு விற்பனை முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று அதிகாலை அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக ராஜாராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனே கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது கடைக்குள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
தீ மளமளவென பற்றி அருகில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் அருகில் இருந்த கண்ணாடி கடைக்கும் பரவியது. உடனே இது குறித்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி மோகன்தாஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மோட்டார் வாகன உதிரிபாக கடையில் ஆயில்கள் இருந்ததால் தீ வேகமாக பற்றி எரிந்தது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இருப்பினும் மோட்டார் உதிரிபாக கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும். மேலும் மற்ற கடைகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க., தொடர்ந்து மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க மறுத்து வருகிறது. எந்த மரபையும் கடைபிடிக்காமல் நிலை குழுக்களை அமைக்காமல் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மசோதாக்களை தாக்கல் செய்து அதை அமல்படுத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்தில் பா.ஜ.க., எதிர்ப்பு நிலையை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. மற்ற கட்சிகள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றன.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க.வை மட்டுமே பாராளுமன்றத்தில் விமர்சித்திருக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு காங்கிரஸ் கட்சி குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது அவர் தனது எதிர்ப்பு நிலையை மாற்றி கொண்டுள்ளார். இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது.

அதில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளின் இணைப்புக்கு பின்னரே காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தந்தை ப.சிதம்பரத்தின் செய்தி தொடர்பாளராக நான் பணியாற்றவில்லை. அவரது தகுதியை அடிப்படையாக கொண்டு என்னை யாரும் எடைபோட மாட்டார்கள். எனது செயல்பாடுகள்தான் எனது தகுதியை நிர்ணயிக்கும். அவருடைய நிலையும், எனது நிலையும் வெவ்வேறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உடையாண்டிப்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார்.
புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் செல்லும் போது , காரின் முன்புற வலது பக்க டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார், நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.
அப்போது திருச்சி மற்றும் புதுக்கோட்டையை நோக்கி சென்ற 6 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்த கார் மீது மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் கார்களின் கண்ணாடிகள், கதவுகள், மேற்கூரை உள்ளிட்ட பல பாகங்கள் சிதைந்தது.
இதனால் காரில் இருந்த நபர்கள் காயமடைந்து அலறினர். இந்த விபத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே கீரனூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் துடையூரை சேர்ந்த சிதம்பரம் (50), கார் டிரைவர் உடையான்பட்டியை சேர்ந்த ரெங்க ராஜ் (32), திருமயம் அருகே வேகுப்பட்டியை சேர்ந்த ராமநாதன் மனைவி நாகரத்தினம் (78), காரைக்குடியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நாகலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த 18 பேரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற விபத்துக்கள் இதுவரை நடந்ததில்லை. விபத்து நடந்த சாலை நேரான சாலையாகும். அப்படியிருந்தும் 7 கார்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. இது தொடர்பாக போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள புத்தாம்பூர் பூசாரித்தெருவை சேர்ந்தவர் வீரையா(வயது45).இவர் பெயிண்டர்.
தொழில் காரணமாக மாந்தங்குடி வந்துள்ளார்.அங்குள்ள கடையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புத்தாம்பூர் திரும்பும்போது தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் செல்லும் போது சாலையில் வேகமாக வந்தகார் வீரையா மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வீரையாவுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. அக்கம் பக்கத்தினர் வீரையாவை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஆனால்அங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதுகுறித்து சம்பட்டிவீடுதி போலீசார் வழக்குப்பதி செய்து விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுந்தர் மகன் சுந்தர்ராம் என்பவர் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






