என் மலர்
செய்திகள்

கைது
புன்னம்சத்திரம் அருகே மது விற்றவர் கைது
புன்னம்சத்திரம் அருகே முட்புதரில் வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்பாறை அருகே கெங்கானம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது25). இவர் கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே அதியமான் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள முட்புதரில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வன் சென்று பார்த்த போது மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே மது பாட்டில்களை விற்பனை செய்த மணிமுத்து என்பவரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






