என் மலர்
நீங்கள் தேடியது "pudukkottai accident"
- ராஜேந்திரன் கவுண்டர் தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
- இந்த விபத்தில் ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுதமன் (வயது 20), பிரவீன் (24) மற்றும் சூர்யபிரகாஷ் (24).
இவர்கள் மூன்று பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் கொடும்பாளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வரும் திருவிழாவை பார்ப்பதற்காக நேற்று இரவு புறப்பட்டனர்.
அதேபோல் கொடும்பாளூரை சேர்ந்த டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் ரெங்கசாமி (45), வடகாட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (25) இருவரும் கொடும்பாளூரில் இருந்து மூவர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ராஜேந்திரன் கவுண்டர் தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கவுதமன் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்த நடுரோட்டில் உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் செல்லும் வழியிலேயே கவுதமன் இறந்தார். மற்ற இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் பலியான மூன்று பேரின் உடல்களும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கோர விபத்து குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவிழாவுக்கு சென்ற 3 பேர் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வம்பன்காலனி பாப்பன் பட்டியைச் சேர்ந்தவர் சிவானந்தன் (வயது 35). இவர் சொந்த வேலை காரணமாக ஆலங்குடிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆலங்குடி- புதுக்கோட்டை சாலையில் ஆலங்குடி அருகே முந்திரி பருப்பு தயாரிக்கும் தொழிற் சாலை அருகே வந்த போது செங்கல்லோடு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் லாரி டயரில் சிக்கி சிவானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குடி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். இறந்த சிவனாந்தத்திற்கு மகேஷ்வரி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 30). இவரது நண்பர்கள் புத்தாம்பூர் கார்த்திகேயன் (25), லேணா விலக்கு செல்வ கணபதி. 3 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அறந்தாங்கி அருகே இவர்களின் கல்லூரி நண்பர் சந்திரசேகரன் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 பேர் நேற்று இரவு காரில் சென்றனர். மீண்டும் அவர்கள் புதுக்கோட்டை நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர்களது கார் புதுக்கோட்டையை அடுத்த குளவாய்பட்டி அருகே வந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த பஷீர் அகமது, கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்கு சிக்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடன் பயணம் செய்த முருகானந்தம், மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க வீட்டுக்கு சென்று திரும்பிய போது நண்பர்கள் 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் பார்த்தீபன் (வயது 52). நேற்றிரவு விராலிமலை சூரியூர் பஞ்சாயத்து வில்லாரோடை கிராமத்தில் உள்ள கோரையாற்றில் மர்மநபர்கள் சிலர் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் விராலிமலை வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோருடன் காரில் வில்லாரோடை பகுதிக்கு சென்றார். அங்கு சென்று பார்த்த போது மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் இல்லை. இதையடுத்து அவர்கள் இன்று அதிகாலை அலுவலகத்திற்கு திரும்பினர்.
விராலிமலை ராஜகிரி குளவாய்ப்பட்டி பகுதியில் வரும் போது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரமுள்ள மரத்தில் மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தாசில்தார் பார்த்தீபன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாசில்தாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொலை செய்யும் நோக்கில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் விரட்டியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது.
விபத்தில் பலியான தாசில்தார் பார்த்தீபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். புதுக்கோட்டை காந்திநகரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற அவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PudukkottaiAccident
புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு ஜல்லி மற்றும் பாறாங்கற்களாக அனுப்பப்படுகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்பட்டன. அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக அந்த வெடிகள் வெடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று மாலை குவாரிக்கு வந்த மேற்பார்வையாளரான முத்துடையான்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) அந்த வெடிக்காத வெடியை கையில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் மற்ற தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை பழனிவேல் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மற்றவர்கள் தொடர்ந்து சிசிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குவாரி வெடி விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்களிடம் பீதியை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த செய்தியை கேட்டு முத்துடையான்பட்டியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் தாய் தீர்த்தாயி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.