என் மலர்
சென்னை
- 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.8,990-க்கும், ஒரு சவரன் ரூ.71,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை.
தங்கம் விலை கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது. 22-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 975-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
23-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.8,990-க்கும், ஒரு சவரன் ரூ.71,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை இதே விலையில் விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
23-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
22-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800
21-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-05-2025- ஒரு கிராம் ரூ.111
24-05-2025- ஒரு கிராம் ரூ.111
23-05-2025- ஒரு கிராம் ரூ.111
22-05-2025- ஒரு கிராம் ரூ.112
21-05-2025- ஒரு கிராம் ரூ.111
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
- தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் மழை பரவத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.
- இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை சென்னை விமான நிலையாயத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.
2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
- திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கொங்கன் கடற்கரையை கடந்து, படிப்படியாக வலு குறைந்து, வடக்கு உள் கர்நாடகாவில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. இது மேலும் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.இதுமட்டுமல்லாமல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் மழை பரவத் தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பெய்து இருந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிக கனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்துள்ளது.
- ரூ.12 கோடி செலவில் புதிய SKY WALK நடைபாதை அமைய உள்ளது
- இந்த ஸ்கை வால்க் நடைபாதை 130 மீட்டர் நீளத்தில் 6-10 மீட்டர் அகலத்தில் அமைகிறது.
வடபழனியில் புதிதாக அமையவுள்ள மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் பழைய மெட்ரோ நிலையத்தை இணைக்கும் வகையில், ரூ.12 கோடி செலவில் புதிய SKY WALK நடைபாதை அமைய உள்ளது
இந்த ஸ்கை வால்க் நடைபாதை 130 மீட்டர் நீளத்தில் 6-10 மீட்டர் அகலத்தில் கண்ணாடி மற்றும் இரும்பினால் அமைகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இதற்கான பணிகளை முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், SKY WALK-ன் மாதிரி படங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் என 54 கி.மீ தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் வரவுள்ளது. 3 ஆவது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4 ஆவது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5 ஆவது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் பணிகள் நடந்து வருகின்றன.
- கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- தென் மேற்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதீத கனமழையை கொடுக்கும்.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியிருப்பதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோன்று குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பாபநாசம் பகுதிகளில் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கடந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பது பற்றியும் தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் ரத்னகிரி அருகே நேற்று கரையை கடந்து, மகா ராஷ்டிரா மாநிலத்தில் ஒரே இடத்தில் மையம் கொண்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளிலும், கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும்.
வடமேற்கு வங்ககடலில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 27-ந் தேதி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக 31-ந்தேதி வரை மகா ராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதீத கனமழையை கொடுக்கும்.
குறிப்பாக மும்பை முதல் ரத்னகிரி வரையிலான கொங்கன் கடற்கரை பகுதி களில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியான முல்லை பெரியார், சிறுவாணி, பரம்பிக்குளம் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பதிவாகும். மேட்டூர் அணை இம்மாத இறுதியில் நிரம்பி ஜூன் முதல் வாரத்தில் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட குறைந்து காணப்படும், மாலை, இரவு நேரங்களில் கடலோர பகுதி களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி, கேட்டி, கோவை மாவட்டம வால் பாறை, கேரளா மாநிலம் இடுக்கி, வயநாடு, மூனாறு, கர்நாடகாவின் குடகு, சிக்மங்களூர், ஹசன் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள், நீர் வீழ்ச்சிகளுக்கு 31-ந்தேதி வரை பொதுமக்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, சிறு மலை, மேகமலை போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.
- தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.
சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.
சென்னையில் தேர்வு நடைபெறும் 69 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மண்ணடியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இந்தியில் மட்டுமே வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தகவல்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை பார்த்து தேர்வு எழுத சென்றவர்கள் குழப்பம் அடைந்தனர்.
தேர்வு முடிவடைந்த நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.
சுயமரியாதை இயக்கம் தொடங்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கேள்வித்தாளில் 4 விடைகளில் ஒன்றில் பெரியார் பெயருடன் அவரது சாதி பெயரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களையும் வரவேற்றிட, முதல்வர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினார்.
- டெல்லி பயணம் பற்றி கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு அரசியல் எதிரிகள் அலாதி இன்பம் கண்டனர்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்," 3 ஆண்டுகள் தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தவர் முதலமைச்சர். 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் நிதியை பெற்றிருக்கலாம்.
அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்" என்றார்.
இந்நிலையில், டெல்லி பயணம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"எனது டெல்லி பயணம் குறித்து ஏதேதோ அளந்து விட்டதை ரசித்தபடியே டெல்லிக்கு புறப்பட்டேன்.
பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களையும் வரவேற்றிட, முதல்வர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினார்.
ஆதரவு, எதிர்ப்பு என எதுவாயினும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இயக்கம் திமுக என இந்திரா காந்தியே சொல்லியுள்ளார்.
டெல்லி பயணம் பற்றி கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு அரசியல் எதிரிகள் அலாதி இன்பம் கண்டனர்.
யாருக்கும் தெரியாமல் அவசரமாக டெல்லிக்குப் பறந்து சென்றவர் இபிஎஸ். டெல்லியில் மீடியாக்கள் சூழ்ந்ததும் கட்சி அலுவலகம் வந்ததாக கூறியவர் இபிஎஸ்.
கட்சியை அடமானம் வைத்து கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. மாநில உரிமைகளை திமுக ஒரு போதும் விட்டுக்கொடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரித்தது. இந்த விசாரணையின்போது, ஞானசேகரன் ஏற்கனவே திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. இதைத்தொடர்ந்து, அந்த வழக்குகளையும் போலீசார் தூசி தட்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என தமிழக டி.ஜி.பி., ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே.28ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்றம் அிறவித்துள்ளது. கடந்த டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- மருத்துவர் அய்யா அவர்களால் கண்டெடுக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்ட வைரம்.
- காடுவெட்டி குரு ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
காடுவெட்டி குருவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாவீரன் ஜெ.குரு நமது போற்றுதலுக்குரியவர்; அவரது நோக்கத்தை நிறைவேற்ற உழைப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை!
ஒரே சொல்லின் மூலம் லட்சக்கணக்கானவர்களை உணர்ச்சிப் பெருக்குக்கு உள்ளாக்க முடியும் என்றால், அந்த சொல் மாவீரன் ஜெ.குரு என்பதாகத் தான் இருக்க முடியும்.
அவர் மருத்துவர் அய்யா அவர்களால் கண்டெடுக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்ட வைரம். என் மீது எல்லையில்லான அன்பு காட்டிய எனது மூத்த சகோதரன். அவர் நமது போற்றுதலுக்குரியவர்.
அவரது ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
மாவீரன் இல்லாத இந்த ஏழு ஆண்டுகளும் வெறுமையாகத் தான் கழிந்தன. அவரது நினைவுகள் மட்டும் தான் ஆறுதலைத் தந்தன.
பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதையே தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர் மாவீரன்.
மாவீரனின் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர்.
- தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் (84) நேற்று காலமானார். வயது முப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று இரவு 9 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சம்ஜூதீன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை காஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.
அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந் தேதி புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வழக்கம் போல் இயக்கப்படும்.
- நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து வருகிற ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691), நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் நாகர்கோவில் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந் தேதி புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வழக்கம் போல் இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321) நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ரெயில் வழக்கம் போல் நாகர்கோவிலில் இருந்தே புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






