என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காடுவெட்டி குரு நினைவு நாள்: மாவீரனின் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைப்போம்- அன்புமணி
- மருத்துவர் அய்யா அவர்களால் கண்டெடுக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்ட வைரம்.
- காடுவெட்டி குரு ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
காடுவெட்டி குருவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாவீரன் ஜெ.குரு நமது போற்றுதலுக்குரியவர்; அவரது நோக்கத்தை நிறைவேற்ற உழைப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை!
ஒரே சொல்லின் மூலம் லட்சக்கணக்கானவர்களை உணர்ச்சிப் பெருக்குக்கு உள்ளாக்க முடியும் என்றால், அந்த சொல் மாவீரன் ஜெ.குரு என்பதாகத் தான் இருக்க முடியும்.
அவர் மருத்துவர் அய்யா அவர்களால் கண்டெடுக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்ட வைரம். என் மீது எல்லையில்லான அன்பு காட்டிய எனது மூத்த சகோதரன். அவர் நமது போற்றுதலுக்குரியவர்.
அவரது ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
மாவீரன் இல்லாத இந்த ஏழு ஆண்டுகளும் வெறுமையாகத் தான் கழிந்தன. அவரது நினைவுகள் மட்டும் தான் ஆறுதலைத் தந்தன.
பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதையே தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர் மாவீரன்.
மாவீரனின் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






