என் மலர்tooltip icon

    சென்னை

    • முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.
    • விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    சென்னை:

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.

    2-ம் கட்ட பரிசளிப்பு அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற இருக்கிறது.

    மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் 3 கட்டங்களாக பரிசளிப்பு விழாவை நடத்த கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். பரிசளிப்பு விழாவுக்கு பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் தகுந்த பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு அனைத்து வசதிகளும் த.வெ.க. சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களது கல்வி ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மத்தியில் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவுபடி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    • ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவமழை இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது.

    மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை மறுதினம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே?
    • உங்கள் வீட்டுத் "தம்பி" ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது?

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    "நானும் டெல்லிக்கு போனேன்... நானும் தலைவர் தான்" என்று இத்தோடு 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள்

    மு.க.ஸ்டாலின் போதும்ம்ம்ம்ம்!

    "மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்?

    தமிழ்நாட்டுக்கான நிதி"க்காகவா இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி"-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்…?

    அதற்க்கான உண்மை பதில் என்ன?

    ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே?

    உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள "நிதி"களையும், அவர்களுக்கு துணையான "தம்பி"களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே?

    நான் தான் சொன்னேனே... மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல- உங்கள் ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது என்று!

    பின்னால் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் "#MissionSuccess" என்ற உங்கள் கூவலுக்கு பின்னால்,

    உங்கள் #MissionFailure ஆன கண்ணீர் நன்றாகப் புரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். (முன்னாலும் சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்திருந்தால் Nostalgia-வாக இருந்திருக்கும்.)

    அப்புறம், எதிர்க்கட்சித் தலைவராகிய நான் எங்கு, எப்படி செல்கிறேன் என்று கண்காணிக்க செலவிட்ட நேரத்தை, தங்கள் அவல ஆட்சியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதில் செலவிட்டு இருக்கலாம். ஏதேனும் பயன் இருந்திருக்கும்.

    எப்போது பார்த்தாலும் "ரெய்டுகளுக்கு பயந்து" என்று சொல்கிறீர்களே? உள்ளபடியே கேட்கிறேன்- எந்த ரெய்டைப் பார்த்து எனக்கு பயம்? இந்த ரெய்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

    நீங்கள் குறிப்பிடும் உறவினர்கள் எனக்கு உறவினர் ஆகும் முன்னரே பல தொழில்களை செய்து வந்தவர்கள்- இரு முறை வருமான வரி சோதனைகளைக் சந்தித்தவர்கள். Discrepancies இருப்பின், முறையாக கணக்கு காட்டி, அதற்கான விளக்கத்தை அளிக்கப் போகிறார்கள்.

    இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல் இது போன்ற போலி குற்றச்சாட்டுகளை அள்ளி தெளிப்பது வெட்கக்கேடானது.

    மாறாக, உங்கள் வீட்டுத் "தம்பி" ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது? என்ன தொழில் செய்தார்? எவ்வளவு லாபம் பார்த்தார்? இன்று ரத்தீஷ் மற்றும் அவரைச் சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன? எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர்? இதையெல்லாம் நேரடியாகப் பேச நீங்கள் தயாரா மு.க.ஸ்டாலின்? #யார்_அந்த_தம்பி ?

    இத்தனை நாட்கள் உங்கள் அமைச்சர்கள் கதறியது போதாதென்று, இப்போது நீங்களே களத்தில் இறங்கிக் கதறுவதை நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன.
    • மே 30ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க கடைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

    தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் சென்னையில் பல பகுதிகளில் காணப்படுகிறது. கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் சிறிய அளவில் போடப்பட்டும், பிற மொழிகளில் பெரிதாகவும் வைக்கப்பட்டு இருப்பது குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.

    சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து மே 30ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்தது.

    இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க கோரி மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், அதுவரை தமிழில் பெயரை பலகை வைக்காத கடைகள் கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதுஎன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    • திருவான்மியூரில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன கொள்ளை முயற்சியில் 3 பேர் ஈடுபட்டனர்.
    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை திருவான்மியூரில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து நூதன கொள்ளை முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட உ.பி.யை சேர்ந்த குல்தீப் சிங், சுமித் யாதவ், பிரிஜ் பான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதியில் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் 390 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட உள்ளன.

    சென்னையில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு, அவற்றை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதியில் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் அடையார் ஆற்றை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில், அனகாபுத்தூரை அடுத்த காயிதே மில்லத் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் 390 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட உள்ளன.

    வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார்.

    50 ஆண்டு வாழ்க்கையை 5 நிமிடத்தில் இழந்தோம் என்று வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது.
    • சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் அடங்கிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது.

    சென்னை மாநகருக்கு என தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் அடங்கிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாநகராட்சி துணை ஆணையர், மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, தலைமைப் பொறியாளர் இடம் பெற்றுள்ளனர்.

    • தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • அவலாஞ்சி அணை, அப்பர் பவானி, குன்னூர் ரேலியா அணை உள்பட அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உயர்ந்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக மாவட்ட முழுவதுமே பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நீடித்தது.

    இந்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.

    தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குட்டைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி அணை, அப்பர் பவானி, குன்னூர் ரேலியா அணை உள்பட அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நீலகிரியில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.
    • தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக விஜய் விமர்சித்துள்ளார்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், கடந்த காலங்களில் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது குறித்து முதலமைச்சர் கூறிய காரணங்கள் அனைத்தும் தற்போதும் தொடர்வதாகவும் டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் காரணமாகவே, நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.

    அமலாக்கத்துறை சோதனை, வழக்குகள் குறித்து பிரதமரிடம் எதுவுமே பேசவில்லை என முதலமைச்சரால் வெளிப்படையாக கூற முடியுமா எனவும், நிதி ஆயோக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம், தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் விஜய் விமர்சித்து உள்ளார்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், தி.மு.க.வை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் கூறிய கருத்துக்கு தனது பாணியில் பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பச்சா இன் பாலிடிக்ஸ்" என்று தக் லைப் பாணியில் அவர் பதில் அளித்தார்.

    • 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.8,990-க்கும், ஒரு சவரன் ரூ.71,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை.

    தங்கம் விலை கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது. 22-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 975-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

    23-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.8,990-க்கும், ஒரு சவரன் ரூ.71,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை இதே விலையில் விற்பனையானது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920

    24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920

    23-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520

    22-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800

    21-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-05-2025- ஒரு கிராம் ரூ.111

    24-05-2025- ஒரு கிராம் ரூ.111

    23-05-2025- ஒரு கிராம் ரூ.111

    22-05-2025- ஒரு கிராம் ரூ.112

    21-05-2025- ஒரு கிராம் ரூ.111

    • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் மழை பரவத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.
    • இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை சென்னை விமான நிலையாயத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    ×