என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

3 கட்டங்களாக மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார் விஜய்
- முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.
- விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை:
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.
2-ம் கட்ட பரிசளிப்பு அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற இருக்கிறது.
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் 3 கட்டங்களாக பரிசளிப்பு விழாவை நடத்த கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். பரிசளிப்பு விழாவுக்கு பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் தகுந்த பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு அனைத்து வசதிகளும் த.வெ.க. சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களது கல்வி ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மத்தியில் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவுபடி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.






