என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'பச்சா இன் பாலிடிக்ஸ்' - விஜயை விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்
- நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.
- தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக விஜய் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், கடந்த காலங்களில் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது குறித்து முதலமைச்சர் கூறிய காரணங்கள் அனைத்தும் தற்போதும் தொடர்வதாகவும் டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் காரணமாகவே, நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாகக் கூறி டெல்லி சென்ற முதலமைச்சர், பிரதமரையும் தனியே சந்தித்துள்ளதாக விஜய் குற்றம் சாட்டி இருந்தார்.
அமலாக்கத்துறை சோதனை, வழக்குகள் குறித்து பிரதமரிடம் எதுவுமே பேசவில்லை என முதலமைச்சரால் வெளிப்படையாக கூற முடியுமா எனவும், நிதி ஆயோக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம், தி.மு.க.-பா.ஜ.க. இடையேயான மறைமுக கூட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் விஜய் விமர்சித்து உள்ளார்.
இந்த நிலையில் ராணிப்பேட்டையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், தி.மு.க.வை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் கூறிய கருத்துக்கு தனது பாணியில் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பச்சா இன் பாலிடிக்ஸ்" என்று தக் லைப் பாணியில் அவர் பதில் அளித்தார்.






