என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த மக்களுக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்
- அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதியில் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
- சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் 390 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட உள்ளன.
சென்னையில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு, அவற்றை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதியில் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் அடையார் ஆற்றை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அனகாபுத்தூரை அடுத்த காயிதே மில்லத் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் 390 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட உள்ளன.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார்.
50 ஆண்டு வாழ்க்கையை 5 நிமிடத்தில் இழந்தோம் என்று வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






