search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvanmiyur"

    • தேவாரப் பாடல் பெற்ற 275 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று.
    • திருவான்மியூர் பகுதியில் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    சென்னை திருவான்மியூர் பகுதியில் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நோய் தீர்க்கும் தெய்வமாக `மருந்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அகத்திய முனிவருக்கு தெய்வீக மருத்துவ முறைகளை உபதேசித்ததால், இத்தல இறைவனுக்கு `மருந்தீஸ்வரர்' என்ற பெயர் வந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    தேவாரப் பாடல் பெற்ற 275 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. அந்த காலத்தில் சோழ நாட்டை பல்லவம், ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோவில் இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக் கடற்கரைச் சாலையாக உருமாறியுள்ளது.

    தினமும் இங்கிருக்கும் இறைவனுக்கு கோ பூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் கர்ப்பகிரகத்திற்கு மேலிருக்கும் விமானம் சதுர்வஸ்தம் என்ற முறையில் கட்டப்பட்டது. இங்கு கோவில் கொண்டிருக்கும் மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு, பிரசாதமாக தரப்படும்.

    விபூதியை உண்பதால் எப்படிப்பட்ட தீராத நோய்களும் குணமாகி விடுமாம். மேலும், இத்தல விருட்சமான வன்னி மரத்தைச் சுற்றி வந்து வழிபடுவதால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்திக்கான வழி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருவான்மியூரில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சோழிங்கநல்லூர்:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதைப் பொருட்களை திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.

    இதையடுத்து போலீசார் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்தி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவான்மியூர் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அடையாறு துணை கமி‌ஷனர் தலைமையில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கதிரேசன், சுப்பிரமணி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×