திருவான்மியூரில் கடைகளில் சோதனை - 200 கிலோ குட்கா பறிமுதல்

திருவான்மியூரில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூரில் கடைகளில் சோதனை - 200 கிலோ குட்கா பறிமுதல்
Published on

சோழிங்கநல்லூர்:

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதைப் பொருட்களை திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.

இதையடுத்து போலீசார் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்தி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவான்மியூர் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அடையாறு துணை கமி‌ஷனர் தலைமையில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கதிரேசன், சுப்பிரமணி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com