என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ச்சைக்குரிய கருத்து"

    • சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.
    • தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

    சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.

    சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

    சென்னையில் தேர்வு நடைபெறும் 69 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

    மண்ணடியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இந்தியில் மட்டுமே வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தகவல்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை பார்த்து தேர்வு எழுத சென்றவர்கள் குழப்பம் அடைந்தனர்.

    தேர்வு முடிவடைந்த நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    யுபிஎஸ்சி தேர்வில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.

    சுயமரியாதை இயக்கம் தொடங்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    கேள்வித்தாளில் 4 விடைகளில் ஒன்றில் பெரியார் பெயருடன் அவரது சாதி பெயரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவில் குறிப்பிட்ட வழக்கில் 5 பேருக்கு சர்ச்சைக்குரிய வகையில் ஜாமீன் வழங்கிய பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WomenJudge #Threats #Bail
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நியூமிக்சிகோ மாகாணத்தில் டாவோஸ் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழந்தைகளை பிடித்து அடைத்து வைத்துக்கொண்டு, பட்டினி போடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் 11 குழந்தைகள் இப்படி பட்டினி போடப்பட்டிருந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பின்னர் அங்கு ஒரு குழந்தையின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 5 பேர் மீது சிறுவர்களை தவறாக பயன்படுத்தியதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பயிற்சி அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 2 ஆண்கள், 3 பெண்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆனால் சர்ச்சைக்கு உரிய அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கேட்டு டாவோஸ் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் சிறுவர்களை தவறாக பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரத்தை போலீசார் தாக்கல் செய்வதற்கு தவறி விட்டதாக கருதி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சாரா பாக்கஸ் என்ற பெண் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அந்த நீதிபதி குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

    இதையடுத்து அந்த பெண் நீதிபதியை ஒருவர் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து, “உங்களை கழுத்தை அறுத்து கொலை செய்வோம்” என மிரட்டல் விடுத்து உள்ளார். இன்னொருவர், “ உங்கள் தலையை நசுக்கி விடுவோம்” என மிரட்டி இருக்கிறார். அவருக்கு இப்படி எண்ணற்ற மிரட்டல்கள் தொலைபேசி, இ மெயில் வழியாக வந்து உள்ளது. இதைத் தொடர்ந்து கோர்ட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   #WomenJudge #Threats #Bail 
    ×