என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  சேலம் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  சேலம்:

  பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர்  கண்ணன்.  இவரது மகன் மாரிமுத்து (வயது 29). 

  இவரை ஒரு திருட்டு வழக்கில் கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் ஓலைப்பட்டி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

  சிறையிலிருந்த மாரிமுத்து நேற்று இரவு 11.30 மணி அளவில் தற்கொலை செய்து கொள்வதற்காக   கொசுவை விரட்ட பயன்படுத்தும் ஆல்அவுட் மருந்தை குடித்து மயங்கினார்.

  இதை கண்ட சிறைக்காவலர்கள் மாரிமுத்துவை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர்.அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  Next Story
  ×