என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டி சென்றார்.
    • ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டியதை கண்ட ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

    அதன் பின் ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

    தண்டவாளத்தில் காட்டிய பெண் குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே அவ்வழியே வந்து கொண்டிருந்த பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரெயிலை ரெயில்வே அதிகாரிகள் நடு வழியிலேயே நிறுத்தினர். மேலும் இந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த 15 ரெயில்கள் திருப்பி விடப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காதலுக்கு இடையூறாக உள்ள தாயை கொலை செய்ய முடிவு செய்தார்.
    • மாணவி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அஞ்சலி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஜுடி மெட்லா ஷிபூர் நகரை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 39).

    இவர் தெலுங்கானா கலாச்சார கலைஞர் குழுவில் நடன கலைஞராக இருந்து வந்தார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமானது. முதல் கணவருக்கு ஒரு மகள் பிறந்தார். முதல் கணவர் இறந்த பிறகு ரவி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் பிறந்தார். கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்தில் ரவி இறந்தார்.

    முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவிக்கு நலகொண்டாவை சேர்ந்த டி.ஜே மாஸ்டர் சிவா (19) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து நட்பாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. மகளின் காதல் விவகாரம் அவரது தாய் அஞ்சலிக்கு தெரியவந்தது. காதலை கைவிடுமாறு மகளிடம் அஞ்சலி வற்புறுத்தி வந்தார். இதனால் தாய்க்கும் மகளுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    காதலுக்கு இடையூறாக உள்ள தாயை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி காதலன் சிவாவுக்கு போன் செய்த மாணவி தாயை கொலை செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

    இதற்கு சிவா மறுப்பு தெரிவித்தார். காதலி மிரட்டியதால் சிவா அவரது தாயாரை கொலை செய்ய ஒப்புக்கொண்டார்.

    நேற்று முன்தினம் காதலனுக்கு போன் செய்து தாய் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். சிவா 17 வயதுடைய தனது சகோதரருடன் அஞ்சலி வீட்டுக்கு வந்தார்.

    அப்போது மாணவி தனது தாய் வீட்டில் உள்ளே இருக்கிறார். சென்று கொலை செய்யுங்கள் என தெரிவித்தார். காதலனை வீட்டிற்குள் அனுப்பிய மாணவி யாரும் வராமல் கண்காணிக்க வீட்டிற்கு வெளியே நின்று இருந்தார்.

    சகோதரருடன் வீட்டுக்குள் சென்ற சிவா அஞ்சலியின் கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கினார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அஞ்சலி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது சிவாவும் அவரது சகோதரரும் அஞ்சலியின் கழுத்தை கயிற்றால் இறுக்கினர்.

    அப்போது பள்ளிக்கு சென்ற இளைய மகள் வீட்டுக்கு வந்தார். அவரிடம் மாணவி தாய் வீட்டுக்குள் யாரையும் அனுப்ப வேண்டாம் என கூறி பக்கத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    அஞ்சலி இறந்து விட்டதாக கருதிய சிவா வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். மாணவி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அஞ்சலி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி மீண்டும் காதலனுக்கு போன் செய்து தாய் இன்னும் சாகவில்லை. வந்து கொலை செய்துவிட்டு போ என தெரிவித்தார்.

    மீண்டும் வீட்டிற்கு வந்த சிவா அஞ்சலியின் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் மாணவி தங்களது உறவினர்களுக்கு போன் செய்து தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜுடி மெட்லா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது மாணவி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாணவியை பிடித்து விசாரித்த போது தங்களது காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் மற்றும் அவரது சகோதரரை வரவைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி அவரது காதலன் சிவா, அவரது சகோதரரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • ஆண்கள், பெண்கள் என தனி, தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
    • சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு அவர்களது தலையில் ஒரு விதமான எண்ணெய்யை தடவி விட்டனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பழைய நகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.

    அதில் குலி குதுப் ஷாஹி மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழுக்கை தலையில் முடி வளர வைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு தலையில் மொட்டை அடித்துக் கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.

    டெல்லியை சேர்ந்த சல்மான் டெல்லி வாலா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் காலை குலி குதுப் ஷாஹி மைதானத்திற்கு வந்தனர். விளம்பரத்தைக் கண்ட ஆண்கள், பெண்கள் என 6 ஆயிரம் பேர் மைதானத்தில் குவிந்தனர்.

    ஆண்கள், பெண்கள் என தனி, தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சிகிச்சைக்காக வந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டு வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் பதிவு கட்டணமாக ரூ.700 எண்ணெய் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்பட்டது.

    சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு அவர்களது தலையில் ஒரு விதமான எண்ணெய்யை தடவி விட்டனர்.

    இந்த எண்ணெயை 15 நாட்களுக்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு தடவி வந்தால் அடர்த்தியான முடி வளரும் என உத்தரவாதம் அளித்தனர். இதனை நம்பி பணத்தை கட்டிய பொதுமக்கள் தலையில் எண்ணெய் தடவி விட்டு சென்றனர்.

    சிகிச்சை அளித்து முடிந்ததும் சல்மான் குழுவினர் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்று விட்டனர்.

    ஏற்கனவே இந்த குழுவினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உப்பலில் இதே போல் விளம்பரம் செய்து பொதுமக்களிடம் பணத்தை வசூலித்துக் கொண்டு ஏமாற்றி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து உப்பல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் கும்பல் தலைமறைவாகி விட்டனர்.

    சதுரங்க வேட்டை சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
    • ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர்.

    தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    சமீபத்திய மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த அந்த இளைஞர்கள் ஆழம் தெரியாமல் ஆற்றுக்குள் சென்றதே விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    கோதாவரி படித்துறையில் தொடர்ச்சியான இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த ஜனவரியில் கொண்டபோச்சம்மாவிலும், ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.

    • டாடா நிறுவனம் ஐதராபாத்தில் ஒரு அதிநவீன தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
    • உற்பத்தி தொடங்கி வருகிற 2028-ம் ஆண்டு விமானத்திற்கான பாகங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ரபேல் போர் விமானத்தின் உடற்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியஸ்னுடன், டாடா அட்வான்ஸ் சிஸ்டத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இதற்காக டாடா நிறுவனம் ஐதராபாத்தில் ஒரு அதிநவீன தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

    ரபேல் போர் விமானத்தில் உடற்பகுதியான பக்கவாட்டு ஓடுகள் பின்புறப்பகுதி மத்திய உடற்பகுதி மற்றும் முன்பகுதியை தயாரிக்க உள்ளது.

    இந்த தொழிற்சாலை மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயார் செய்யும் திறனை கொண்டதாக இருக்கும். உற்பத்தி தொடங்கி வருகிற 2028-ம் ஆண்டு விமானத்திற்கான பாகங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரெஞ்சு நாட்டிற்கு வெளியே ரபேல் போர் விமான பாகங்கள் ஐதராபாத்தில் முதல் முறையாக தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலேஷ்வரம் திட்டம் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கே.சி.ஆர்-க்கு சம்மன்.
    • சந்திரசேகர ராவ் பெயரை கெடுக்கவே இந்த சதி தீட்டப்பட்டுள்ளது என கவிதா குற்றச்சாட்டு.

    காலேஷ்வரம் திட்டம் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர கே. சந்திரசேகர ராவுக்கு நீதித்துறை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் நாளை ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    சந்திரசேகர ராவ் நாளை ஆஜராகுவதற்குப் பதிலாக வருகிற 11ஆம் தேதி ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திரசேகர ராவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதித்துறை ஆணையம் காங்கிரஸ் ஆணையம் என்று அழைக்கப்படுகிறது என சந்திரசேகர ராவ் மகளும், பிஆர்ஆஸ் கட்சி தலைவருமான கே. கவிதா கடுமையாக சாடியுள்ளார்.

    இது தொடர்பாக கே. கவிதா கூறுகையில் "காலேஷ்வரம் திட்டம் முடிவடைந்த பின்னர் மொத்தமாக 40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதெல்லாம் புறந்தள்ளப்பட்டுள்ளது. சந்திரசேகர ராவ் பெயரை கெடுக்கவே இந்த சதி தீட்டப்பட்டுள்ளது.

    200 டிஎம்சி கோதாவரி ஆற்றின் நீரை பயன்படுத்துவது தொடர்பான போலாவரம்-பனகச்செர்லா திட்டத்தை ஆந்திர அரசு முன்மொழிந்துள்ள நிலையில், ரேவந்த் ரெட்டி அமைதியாக இருந்து வருகிறார்.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் மகள் கே. கவிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    போலாவரம்- பனகச்செர்லா திட்டம் முக்கிய குறிக்கோள் கோதாவரி ஆற்றின் உபரி நீரை, வறட்சியான பிராந்திகளுக்கு மாற்றுவதாகும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று உலக அழகி இறுதி போட்டி நடந்தது.
    • தாய்லாந்தை சேர்ந்த ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீக்கு வைரம் பதித்த கிரீடமும் அணிவிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று உலக அழகி இறுதி போட்டி நடந்தது. இதில் தாய்லாந்தை சேர்ந்த 21 வயதான ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழிகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவருக்கு உடனடியாக ரூ. 8.50 கோடி, வைரம் பதித்த கிரீடமும் அணிவிக்கப்பட்டது.

    உலக அழகி ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ சமூக நிகழ்வுகளில் பங்கேற்க உலகம் முழுவதும் பயணம் செய்யலாம். அவருக்கு ஆண்டு முழுவதும் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் தொழில்முறை வடிவமைப்பாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் வசதி கிடைக்கும்.

    விலை உயர்ந்த ஒப்பனை கருவிகள், உடைகள், நகைகள் போன்றவை அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும். எங்கு சென்றாலும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும்.

    உலக அழகி பட்டம் வென்ற அவருக்கு விலைமதிப்பற்ற வைரங்கள் மற்றும் பல சிறப்பு அம்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் வழங்கப்பட்டது.

    கிரீடத்தின் ஒவ்வொரு அம்சமும் உலக அழகி போட்டியின் முக்கியத்துவத்தையும் பெண்களின் சக்தியையும் பிரதிபலிக்கிறது.

    தற்போதைய கிரீடத்தின் மதிப்பு தோராயமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.85.56 லட்சம் ஆகும். இது 4-வது உலக அழகி கிரீடம் ஆகும். கிரீடங்கள் மிகிமோட்டோ என்ற ஜப்பானிய நகை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

    தற்போது பயன்பாட்டில் உள்ள கிரீடம் 2017-ல் வடிவமைக்கப்பட்டது. இந்த கிரீடம் ஒருபோதும் வெற்றியாளருக்குச் சொந்தமாகாது.

    அடுத்த ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தற்போதைய உலக அழகி கிரீடத்தை அணிவிப்பார்.

    • சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
    • இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடைபெற்றது,

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.

    108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர்.

    அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.

    1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.

    இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

    ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்றுள்ளனர்.

    இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், 2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்.

    • 1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.
    • இறுதிப்போட்டி நடைபெறும் ஹைடெக்ஸ் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடக்கிறது.

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது.

    108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர்.

    அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.

    1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.

    இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

    ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்றுள்ளனர்.

    இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இறுதிப்போட்டி நடைபெறும் ஹைடெக்ஸ் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு உலக அழகி மனிதாபிமான விருது வழங்கப்பட உள்ளது.

    • சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன
    • காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக செய்தி பரவியது.

    2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து தொடர்ந்து 9 வருடங்கள் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவரின் கட்சி பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்).

    கடந்த வாரம் இந்த கட்சியின் வெள்ளி விழா நடைபெற்றது. எம்எல்சியாக உள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதா அப்போது தந்தைக்கு எழுதிய கடிதம் பொது வெளியில் கசிந்தது. அதில் சந்திரசேகர ராவ் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை என கவிதா அதிருப்தி தெரிவித்தார்.

    இதுகுறித்த பேட்டியில், சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன என்று கவிதா பேசினார். அவர் எம்.பியாக உள்ள தனது அண்ணன் கே.டி.ராமா ராவை மறைமுகமாக விமர்சித்ததாக ஊகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கவிதா, 'கட்சியில் உள்ள சில தலைவர்கள் பிஆர்எஸ்-ஐ பாஜகவுடன் இணைக்க விரும்புகிறார்கள். நான் சிறையில் இருந்தபோது கட்சியில் இதுபோன்ற விவாதம் நடந்தது. நான் சிறையில் இருந்திருக்கலாம், ஆனால் கட்சியை பாஜகவுடன் இணைக்கக்கூடாது என்று நான் சொன்னேன்' என்று தெரிவித்தார்.

    மேலும் தந்தை சந்திரசேகர் ராவை தன்னிடமிருந்து பிரிக்க வேலைகள் நடந்து வருவதாகவும் கவிதா குற்றம்சாட்டினார். அதேசமயம் ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக வந்த செய்தியை கவிதா மறுத்தார்.

    கவிதா தொடர்ந்து போர் கொடி தூக்கி வருவது பிஆர்எஸ் கட்சி மற்றும் அண்ணன், தங்கை இடையே பூசலை அதிகரித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதாயம் அளித்ததாக கூறப்படும் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கவிதா கடந்த வருடம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை.
    • எங்களுக்கு கணக்கு கொடுங்கள் என ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக குறிவைத்து தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. அதில் ரஃபேல் விமானங்களும் அடங்கும் எனக் குறிப்பிட்டிருந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் கூறியதை மறுத்தது.

    தற்போது இந்திய பிரதமர் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பேசுகிறார்.

    இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் சண்டையில் பாகிஸ்தான் எத்தனை ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    செகந்திராபாத் கண்டோன்மென்ட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் பங்கேற்றனர். தெலுங்கானாவில் தயாரிக்கப்படும் போர் விமானங்கள் நம் நாட்டின் மீதான மரியாதையை நிலைநிறுத்துகின்றன. நரேந்திர மோடி கொண்டு வந்த ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை.

    சமீபத்திய சண்டையின்போது பாகிஸ்தானால் எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு கணக்கு கொடுங்கள்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர்.
    • அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

    தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடந்து வருகிறது.  

    இந்நிலையில் போட்டியாளர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி இங்கிலாந்து அழகி மில்லா மேகி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

    மே 7 ஆம் தேதியில் வந்தடைந்த மில்லா, மீண்டும் மே 16 ஆம் தேதியிலேயே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார்.

    போட்டி தொடர்பாக அந்நாட்டில் நேர்காணலில் பேசிய மில்லா மேகி, "போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், கண்கவர் ஆடைகளுடனும்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

    தொடர்ந்து, போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம்.

    வித்தைக் காட்டும் குரங்குகளைப்போல அங்கு அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை.  

    உலக அழகிப் பட்டத்துக்கென ஒரு தனிமதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அங்கு நான் ஒரு பாலியல் தொழிலாளி போல உணர்ந்தேன். இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மில்லாவின் குற்றச்சாட்டை மறுத்த மிஸ் வேர்ல்டு அமைப்பு, ஆதாரமற்ற, பொய்க் குற்றச்சாட்டுகளை மில்லா பரப்பி வருகிறார் என்றும் குடும்ப சூழ்நிலையை கூறி அவர் விலகியதகவும் தெரிவித்தது.

    மில்லாவுக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது அழகியான சார்லோட் கிராண்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ×