என் மலர்tooltip icon

    இந்தியா

    2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தை சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீ
    X

    2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தை சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீ

    • சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
    • இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடைபெற்றது,

    சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.

    108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர்.

    அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.

    1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.

    இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

    ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்றுள்ளனர்.

    இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், 2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்.

    Next Story
    ×