என் மலர்
நீங்கள் தேடியது "கோதாவரி"
- ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
- ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர்.
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சமீபத்திய மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த அந்த இளைஞர்கள் ஆழம் தெரியாமல் ஆற்றுக்குள் சென்றதே விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கோதாவரி படித்துறையில் தொடர்ச்சியான இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் கொண்டபோச்சம்மாவிலும், ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.
- காஞ்சி வைணவ சமயத்தின் இருக்கையாகும் கச்சி அட்டபுயகரம் புகழ் மிக்கது.
- சோழர்கள் காஞ்சியைத் தமது வடபுலத் தலைநகராகக் கொண்டிருந்தனர்.
கரிகாலன் இமயமலையில் புலிச்சின்னத்தைப் பொறிக்க வடதிசை சென்ற போது இந்நகரின் வளமையைக் கேட்டு,
நான்கு காலங்கள் சதுரத்திற்குக் காஞ்சி மாநகருக்கு குன்று போல் மதில் அமைத்து, குடி அமர்த்தினான் என்பார் சேக்கிழார்.
இந்த வரலாற்றுச் செய்தியைச் சோழர் செப்பேடுகளும் கூறுகின்றன.
கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பல்லவர், 900 முதல் 1300 வரை சோழப் பேரரசர் ஆளுகையின் கீழ் இவ்வூர் இருந்தது.
கோதாவரி ஆறு வரையும் அதற்கப்பாலும் பரந்த அவர்கள் ஆட்சிப் பகுதியில் வடபகுதிக்கு அது துணைத் தலைநகராய் இவ்வூர் அமைந்திருந்தது.
அக்காலக் காஞ்சியில் யோக முனிவர்களும், யோகினிகளும் போற்றும் யோகபீடம் இருந்தது என்பர் சேக்கிழார்.
அங்கு உருத்திரசோலை, தவசிகள் தொட்டால் யாவற்றையும் பொன்னாக மாற்றும் சிலை. அந்தணர் இருக்கை
, அரசர் குலப்பெருந்தெருக்கள், ஆயுதங்கள் பயிலும் இடங்கள், யானை, குதிரை ஏற்றம் பயிலிடங்கள்,
வணிகர் வாழ் மாநகர்கள், வேளாண் குடிப் பெருஞ்செல்வர் வாழ் இடங்கள் அனுஸோமர்,
பிரதிலோமர் ஆகிய குடி மக்கள் தொழில் புரிந்து வாழும் பகுதிகள் தனித்தனியாக இருந்த குறிப்புகள் உள்ளன.
சோழர்கள் காஞ்சியைத் தமது வடபுலத் தலைநகராகக் கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரத்தில் அசோகன் எடுத்த பௌத்த ஸ்தூபம் ஒன்று இருந்தது.
அது சுமார் 100 அடி உயரத்திற்கு மேல் இருந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்தப் பள்ளிகள் இருந்தன.
இவற்றில் பவுத்த சமயத்தில் தீவிரப்பிரிவைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பிக்குகள் வசித்தார்கள் என்று ஹூவான் 'சுவாங்' குறிப்பிடுகிறார்.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இங்கு பவுத்தமும் சிறந்திருந்தது. இங்கு வசுந்தரா என்னும் பெயர் பெற்ற தாராதேவிக்கு ஒரு கோவில் இருந்தது.
காஞ்சி வைணவ சமயத்தின் இருக்கையாகும் கச்சி அட்டபுயகரம் புகழ் மிக்கது.
அலகளந்த பெருமாள் கோவில், பரமேச்சுர விண்ணகரம் என்னும் வைகுந்த பெருமாள் கோவில், பச்சைவண்ணன் கோவில் முதலிய கோவிந்தன் கோவில்கள் புகழ் மிக்கவை.
அருளாளப் பெருமாள் கோவில் என்னும் வரதராசர் கோவில் வைணவப் பெரியார் ராமானுஜரின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றது.
தொண்டை மண்டலத்துக்கே சிறந்த தலைவராகக் காஞ்சிமாநகர், 18-ஆம் நூற்றாண்டு வரை சீரும் சிறப்புமாகத் திகழ்ந்தது.






