என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் இன்று தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது. மீண்டும் அதே தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இறுதி செய்யப்படும். கடந்த தேர்தலின் போது நடந்த பகிர்வு முறையை இந்த முறையும் விசிக ஏற்றுக்கொண்டது. தென்னிந்திய மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடுகிறோம். விசிக தனி சின்னத்தில் போட்டியிட தி.மு.க. உடன்பாடு. தேர்தல் ஆணையத்திடம் பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். உயர்நிலை கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.
தி.மு.க. கூட்டணியில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
- சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
- சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இதன் காரணமாக கடலூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுச்சேரிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் கடலூரில் வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவசர அவசரமாக சென்றதை காண முடிந்தது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- அஜித் முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது.
- சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.
சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். இதனையடுத்து நடிகர் அஜித் இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
- டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார்.
இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்த பிரபல நடிகையான டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் டோலி சோஹி சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். 'கலாஷ்', 'ஹிட்லர் திதி', 'டெவோன் கே தேவ் மகாதேவ்', 'ஜனக்' போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அடுத்த நாளே டோலிசோஹி மரணம் அடைந்திருப்பது இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- 6 இடங்களை விருப்ப தொகுதியாக ம.தி.மு.க. கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மாநிலங்களவை சீட் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், ம.தி.மு.க.- தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் வைத்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்..
தி.மு.க., ம.தி.மு.க. இடையே மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 இடங்களை விருப்ப தொகுதியாக ம.தி.மு.க. கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, நிரந்தரமாக தி.மு.க.வுக்கு பக்க பலமாக இருப்போம். ஒதுக்கப்படும் தொகுதி குறித்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது மனநிறைவு தான். தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் முதல்வரும், நானும் கையெழுத்து இட்டுள்ளோம். மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை. மாநிலங்களவை சீட் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என்றார்.
- இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
- பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.
தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.
தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவோடு, அன்றைய முதலமைச்சர், காமராஜரால் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலக்கரி உற்பத்தி, மின்சார உற்பத்தி என தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது.
தற்போது 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள். அதில் உற்பத்தியாகிற மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 70 சதவிகிதம் வழங்கப்படுகிறது. பா.ஜ.க. அரசின் லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தனது 7 சதவிகித பங்குகளை விற்று ரூபாய் 2,000 கோடி முதல் ரூபாய் 2200 கோடி வரை மார்ச் 7-ல் இருந்து 11-ந்தேதிக்குள் நிதி திரட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
குறைந்தபட்ச பங்குகளின் விலையாக ரூபாய் 212 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விற்பனைக்கு வழங்கவுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை 6 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரத்து 830. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 93.5 சதவிகித பங்குகள் இருந்தன. அது தற்போது 79.2 சதவிகித பங்குகளாக குறைந்து வருகின்றன.

கடந்த டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட லாபமாக ரூபாய் 250 கோடி பெற்றுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூபாய் 30,901 கோடியாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை பா.ஜ.க. அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க. அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது. அப்படி விற்குமேயானால், அந்த பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.
என்.எல்.சி நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை பொருட்படுத்தாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.
இதன்மூலம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்ப்பது தடுத்து நிறுத்த முடியும். இக்கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மாநிலங்களவை சீட் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படாத செய்தி.
- எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை அமைக்க அ.தி.மு.க. திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
இதையொட்டி பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அ.தி.மு.க. சார்பில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. 14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தரும் கட்சியுடன்தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று பிரேமலதா ஏற்கனவே கூறியிருந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. கூட்டணியில் 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சென்று முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம்.
* மாநிலங்களவை சீட் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படாத செய்தி.
* அ.தி.மு.க., பாஜக என இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
* எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
* பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை என ஒன்றுமில்லை. கூட்டணி இருந்தால் அறிவிப்போம் என்றார்.
- கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன.
- அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்வற்றை மும்முரமாக செய்து வருகின்றன. வேட்பாளர் தேர்வு முடிந்ததும், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். வீதி, வீதியாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரிப்பார்கள்.
இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பிரசார வாகனங்களும் தயார் செய்யப்படும். அந்த வாகனங்களில் சென்று தான் அவர்கள் பிரசாரம் செய்வார்கள்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தான் பலருக்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
இவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரன், போன்றவர்களுக்கும் பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தலைவர்களுக்கான பிரசார வாகனம் தயாரிக்கும் பணிகள் கோவையில் தொடங்கிவிட்டது. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தலைவர்களுக்கான பிரசார வாகனம் பிரத்யேக வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த பிரசார வாகனம் தயாரிக்கும் நிறுவத்தின் உரிமையாளரான முகமது ரியாஸ் கூறியதாவது:-
நாங்கள் 55 வருடங்களுக்கு மேலாக பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். பல முக்கிய தலைவர்களுக்கும் நாங்கள் பிரசார வாகனத்தை தயாரித்து கொடுத்துள்ளோம். 95 சதவீதம் நாங்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பிரசார வாகனங்களை தயார் செய்து கொடுக்கிறோம்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த தலைவர்களுக்கு பிரசார வாகனம் தயாரித்து கொடுத்துள்ளோம்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.
முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், வீட்டில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளும் பிரசார வாகனத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினர். அதற்கு ஏற்ப பிரசார வாகனங்களில் படுக்கை, அமருவதற்கு ஷோபா, கழிப்பறை, எல்.இ.டி வி, மற்றும் விளக்குகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது தலைவர்கள் நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்களை விரும்புவதில்லை.
அவர்கள் பெரும்பாலும் சுழலும் இருக்கை, திறந்த கூரை, கால்களை அகலமாக நீட்டிக்கொள்வதற்கு வசதியான படிகள், தலைவர்களுடன் வரக்கூடிய பாதுகாவலர்கள், முக்கிய நிர்வாகிகள் நிற்பதற்கு வசதியாக அகலமான படிக்கட்டுகள், பொதுமக்களை பார்க்கும் வகையில் 360 டிகிரி கோணத்தில் சுழலும் சி.சி.டி.வி கேமிராக்கள் இருக்கும் வகையில் அமைத்து தரும்படி தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப நாங்களும் வாகனங்களை தயாரித்து வருகிறோம்.
கூடுதல் வசதிகள் அவர்கள் விருப்பப்பட்டு கேட்டால் அதனையும் செய்து கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
- வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்ரல் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்ரல் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த விசாரணையின் போது கொடநாட்டில் நடந்த புலன் விசாரணை தொடர்பான அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
- சம்பவம் தொடர்பாக 9-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த சுபின் பிரபு என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர் ஒரு கும்பலால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக 9-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த சுபின் பிரபு என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.
- 500 நாட்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
- காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? ராகுல் காந்தி சொல்வாரா?
கோவை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எங்களுடைய முதல் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். விரைவில் இரண்டாவது பட்டியல் வெளிவரும்.
* எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது.
* 500 நாட்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
* காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? ராகுல் காந்தி சொல்வாரா?
இவ்வாறு அவர் கூறினார்.






