என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வரும் 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதனை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், கீரனூர் சோதனை சாவடியில் தலைமை காவலர் கிறிஸ்துராஜ், புஷ்பா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் பஸ்சில் பயணம் செய்த ஒருவரின் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவரை விசாரித்த போது, மன்னார்குடியை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 40) என்பது தெரியவந்தது.
ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக சோதனை சாவடியில் இருந்த போலீசார் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரேசன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.12.85 லட்சம் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசு பஸ்சில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
- விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி:
சென்னையிலிருந்து கம்பம் நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 34 பயணிகள் இருந்தனர். பஸ்சை கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை 5.40 மணியளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது விபத்தில் சிக்கியது.
முன்னால் தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த சந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பேரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.
இந்த விபத்தில் பஸ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இறந்த சந்திரன் மற்றும் பழனியம்மாள் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 12 பயணிகளை ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்தில் உதவி போலீஸ் கமிஷனர் ஜெயசீலன் விசாரணை நடத்தினர். பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதிக பாரம் காரணமாக லாரி மெதுவாக சென்ற நிலையில் அதிவேகமாக வந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- விருத்தாசலம் பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த குப்பைகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
- மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் காப்புக்காடு உள்ளது. இதில் கார்மாங்குடி காப்புக்காட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு மரங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து இரவு 8 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விளைந்திருந்த மரங்கள் தீயில் சேதம் அடைந்தன. தீ விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று, விருத்தாசலம் பாலக்கரையில், மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த குப்பைகள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தபகுதியில் புகை மண்டலமாக மாறியதுடன், அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
- 3 ஷிப்டுகளாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பிடிபட்டு உள்ளன.
- 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்று சோதனை நடத்தினார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இரவு பகலாக நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஷிப்டுகளாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பிடிபட்டு உள்ளன.
அரசியல் கட்சியினரின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் என அனைத்து தரப்பினரின் வாகனங்களையும் எந்தவித பாகுபாடுமின்றி சோதனை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் பறக்கும் படை அதிகாரிகள் சில இடங்களில் பாரபட்சம் காட்டியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பணப்பட்டு வாடாவை தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இன்று அதிரடியாக தொடங்கி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கு தேர்தல் ஆணையத்துடன் வரும் நாட்களில் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரி பகுதியில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில் அதிபரின் வீட்டில் ரகசிய இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
இதேபோன்று கொண்டித்தோப்பு பகுதியிலும் வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இவர்கள் இருவரும் எலக்ட்ரிக் பொருட்களை மொத்தமாக சப்ளை செய்யும் பணியிலும் ஒப்பந்த பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பரிசுப் பொருட்களை அரசியல் பிரமுகர்களுக்கு இந்த 2 தொழில் அதிபர்களும் மொத்தமாக சப்ளை செய்துள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர புரசைவாக்கம் உள்ளிட்ட மேலும் 3 இடங்களிலும் தொழில் அதிபர்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது வீடுகளிலும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அரசியல் பிரமுகர்களின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட கிடாதுறை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரது வீட்டில் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் விசாரணைக்குப்பின் வீட்டில் இருந்து ரூ.11 லட்சம் பணம் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
இதேப்போல் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அணிக்கடவு பகுதியைச்சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இப்போதே பணப்பட்டு வாடா செய்து வருவதாக 2 நாட்களுக்கு முன்பே தகவல் பரவியது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள தொகுதி ஒன்றில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு அரசியல் கட்சியினர் தங்களுக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று சத்தியம் வாங்கி இருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து பணப்பட்டு வாடாவை தடுக்க அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். தேர்தல் களத்திலும் பரபரப்பு நிலவுகிறது.
- பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர்.
- பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
புதுடெல்லியில் மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் இன்று (ஏப்ரல் 11) கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார்.
பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர். மேலும், சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது.
ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவை வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் விமான நிலையத்தில் திரண்டனர்.
இதுதவிர, வழிநெடுகிலும், சாலை ஓரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர்.
இந்த தருணத்தில் அனைவரிடம் இருந்தும் சத்குருவிற்கு கிடைத்த அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் ஈஷா அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டது.
- எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர்.
- 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரோக்கணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டையில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கண்ட கனவு மாறிவிட்டது.
மக்களை ஏமாற்றியே திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.
வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகிவிட்டது.
எங்கள் ஆட்சியில் திமுக மீது வழக்கு போவில்லை. மக்கள் பணியாற்றினோம். திமுக எந்த திட்டங்களையும் கொண்ட வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால் தானே, நாங்கள் குறை கூற முடியும்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிடைக்கும் நேரத்தில் மக்களக்கு பணியாற்ற வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர். பெட்டி தொலைந்துவிட்டதா அல்லது சாவி இல்லையா ?
எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து குரல் கொடுப்போம். காவிரி நதிநீர் விவகாரத்தில் 22 நாட்கள் அவையை அதிமுக முடக்கியது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான். நீட் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், நீட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது.
நாங்கள் கட்டிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறப்பவர் முதல்வர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள். தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆனால் நீங்கள் நலமா ? என்கிறார் முதல்வர்.
விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது
- வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும்
பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தன்னுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். தன்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ம் ஆண்டு முத்துச்சரவணை காவல்துறை என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், தனக்கு கொலை மிரட்டல் வருவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில், வெங்கடேஷ் செம்மரக்கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது" என அரசு தரப்பில் இருந்து வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.
இதனையடுத்து பேசிய நீதிபதி, பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது. ஆகவே பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.
வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். குற்றச் செயலில் ஈடுபடும் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் என்று கூறி பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார்.
- சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது.
- புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் வருவாயில் சொத்துவரி மிக முக்கியமானது. குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என 12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்களாக உள்ளனர். சொத்து வரி ஆண்டுக்கு 2 முறை வசூலிக்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் சொத்துவரி இலக்கு ரூ.1,600 கோடி நிர்ணயிக்கப்பட்டு இலக்கை விட கூடுதலாக ரூ.250 கோடி வசூலித்து மொத்தம் ரூ.1,800 கோடி மாநகராட்சிக்கு கிடைத்து உள்ளது. சொத்துவரி 2-வது அரையாண்டிற்கான காலம் மார்ச் 31-ந்தேதி நேற்றுடன் முடிந்தது.
நிதியாணடின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வந்ததால் அந்த நாளை வேலை நாளாக அறிவித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி ஊழியர்கள், அதிகாரிகள் செயல்பட்டனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது. அதன் விளைவாக ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் மக்கள் சொத்துவரி செலுத்தினர்.
நள்ளிரவு வரை சொத்து வரி வருவாயை கணக்கிட்டனர். அதன் அடிப்படையில் ரூ.1,800 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த மாதம் இறுதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த நிதியாண்டிற்கான சொத்துவரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் சிகிச்சை பெற தான் நடத்தும் மருத்துவமனைகள் மூலம் உதவியவர்.
- கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி எம்.பியாக இருந்து மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்.
கல்லாற்றில் தடுப்பு அணை அமைக்கப்படும் என திருச்சி மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் பரப்புரை மேற்கொண்ட பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
பூலாம்பாடி கிராமத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார். தொடர்ந்து ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும் எனவும், ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார். மேலும் கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார். இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் - RT இராமச்சந்திரன் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், த.ம.மு .க வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் புரட்சி முத்தரையர் முன்னேற்ற சங்கம் IJK மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.
அரும்பாவூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தார், தன்னை தேர்ந்தெடுத்தால் யாரும் முடிக்காத 50 ஆண்டு கால கனவு திட்டமான ரயில்வே திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். பொதுமக்கள் நல்ல நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ணாபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள் என வலியுறுத்தினர். கிருஷ்ணாபுரத்தில் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.
பாரிவேந்தர் அளிப்பது வாக்குறுதி அல்ல வாழ்க்கைக்கு உறுதி
கல்வி, மருத்துவம் என இரண்டையும் தனது கண்களாக நினைப்பவர் டாக்டர் பாரிவேந்தர். காரணம் பல கல்வி நிறுவனங்களை தொடங்கிய வெற்றி கண்டவர். அதன் பயனாக பல மாணவர்களை வாழ்க்கையில் ஏற்றம் பெற செய்தவர். பல மருத்துவமனைகளை நிறுவி பலர் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயங்களை தனி நபராக செய்து செய்து வருபவர். கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி எம்.பியாக இருந்து மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்.
ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கொடுக்கனும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, தனது வாழ்கையை மாற்றியவர். தான் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கான வாரி வழங்கி வருகிறார். இன்னும் வழங்க இருக்கிறார்.
பெரம்பலூர் மக்களின் நீண்ட கால கனவு திட்டமான அரியலூர் - பெரம்பலூர் - துறையூர் - நாமக்கல் ரயில் திட்டத்திற்கு அனுமதி பெற்று செயற்கைகோள் ஆய்வை துவங்கி வைத்தவர் டாக்டர் பாரிவேந்தர்.
உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர்,பெரிய வடகரை, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு 1 கோடி மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி மக்களின் ஆரோக்கியம் காத்த அற்புதமான மனிதர் நமது டாக்டர் பாரிவேந்தர். சிறுகனூரில் புதிய மேம்பாலம் இருங்களூரில் புதிய மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா அளவில் சிறந்த எம்.பி என்ற நற்பெயரை ஈட்டியுள்ளார்.
நாளைய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வையோடு மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொடக்க கல்வி முதல் பலதரப்பட்ட மேற்கல்வி வரை 1200 மாணவர்களுக்கு வழங்கிய தனி நபராக இருந்து சாதனை புரிந்தவர். அழியாத கல்வி செல்வத்தை வழங்கி பல மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றி குடும்பங்களின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வருகிறார். கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் சிகிச்சை பெற தான் நடத்தும் மருத்துவமனைகள் மூலம் உதவியவர்.
இந்த முறையும் தான் ஒரு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். குடும்பத்திலுள்ள தாய், தந்தை தான் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் வாழ்வில் உச்சம் பெற வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால் எம்பியாக இருக்கும் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூர் உள்ள மக்களை அனைவரையும் தனது குடும்பமாக தான் பார்க்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்வி உதவியை வழங்கி வருகிறார். இந்த முறை தான் எம்பியாக பதவியேற்றால் 1200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வியை வழங்குவதாக பெரம்பலூர் மக்களுக்கு கல்வி தந்தையாக தனது கடமை சிறப்பாக செய்வதற்கு உறுதியளித்துள்ளார். பாரிவேந்தர் வர்றாரு படிக்க வைக்க போறாரு என பாடல் பாடி அப்பகுதியிலுள்ள மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- கச்சத்தீவில் இருந்து 2 மைல் முன்பே மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.
- பிரதமர் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தொகுதிக்கு உட்பட்ட ராமேசுவரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடினார். பின்னர் ஈர உடையுடன் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் மகன் ரவீந்திரநாத்துடன் சென்று நீராடிய பின்னர் சுவாமி, அம்பாள் சன்னதியில் பயபக்தியுடன் வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து ராமேசுவரம் நகராட்சிக்கு உள்பட்ட ஏரகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் காசி, ராமேசுவரம் புண்ணிய பூமியாக விளங்குகிறது. காசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இங்கு போட்டியிடும் எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
தற்போது கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு கச்சீத்தீவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு சொந்தமானதாக இருந்தது. இது தொடர்பான தகவல் தாமிர பட்டயத்தில் உள்ளன. 1974-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் இணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார்கள்.
அதற்கு முன்பு கச்சத்தீவை தாண்டி 2 மைல் தொலைவிற்கு சென்று நமது மீனவர்கள் மீன்பிடித்து வந்தார்கள். ஆனால் தாரைவார்க்கப்பட்ட பின்பு கச்சத்தீவில் இருந்து 2 மைல் முன்பே மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதனை மீறி செல்பவர்களை இலங்கை கடற்படை கைது செய்தும், விரட்டியடித்தும் வருகிறது. தற்போது பிரதமர் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். அவருடன் இணைந்து கச்சத்தீவை மீட்டு இந்த மாவட்ட மக்களுக்கு கொடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டு அவர் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இந்த தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மிகவும் எதிர்பார்த்த நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசும் தி.மு.க.வினருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வருவதாகவும், இதனால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. அதே நேரத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நெல்லை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவர் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றியடைய செய்வதற்காக பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
அதேநேரத்தில் வேட்பாளரான ராபர்ட் புரூஸ், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்திக்காமல் இருந்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து ராபர்ட் புரூஸ் அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தில் புகார் கூறியுள்ளார். உடனடியாக மேலிடத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நெல்லை தொகுதியின் நிலவரத்தை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோஷ்டி பூசல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார். மேலும் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இருக்கும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நெல்லை பாராளுமன்ற தொகுதி கூடுதல் பொறுப்பாளராக அறிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு ராதாபுரம் தொகுதி கடற்கரை கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தொடர்ந்து இன்று ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அம்பை சட்டமன்ற தொகுதிகளில் முகாமிட்டு தி.மு.க.வினரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட முடுக்கி விடும் பணியில் களம் இறங்கி உள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம், கூடுதாழை, கூட்டப்பனை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இன்று மாலை சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- 2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு.
தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது #DravidianModel அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.
கூடுதல் தகவல்… இது ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்!
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்! #தலைநிமிரும்_தமிழ்நாடு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






