search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி மூலம் ரூ.1,800 கோடி கிடைத்தது
    X

    சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி மூலம் ரூ.1,800 கோடி கிடைத்தது

    • சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது.
    • புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் வருவாயில் சொத்துவரி மிக முக்கியமானது. குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என 12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்களாக உள்ளனர். சொத்து வரி ஆண்டுக்கு 2 முறை வசூலிக்கப்படுகிறது.

    கடந்த நிதியாண்டில் சொத்துவரி இலக்கு ரூ.1,600 கோடி நிர்ணயிக்கப்பட்டு இலக்கை விட கூடுதலாக ரூ.250 கோடி வசூலித்து மொத்தம் ரூ.1,800 கோடி மாநகராட்சிக்கு கிடைத்து உள்ளது. சொத்துவரி 2-வது அரையாண்டிற்கான காலம் மார்ச் 31-ந்தேதி நேற்றுடன் முடிந்தது.

    நிதியாணடின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வந்ததால் அந்த நாளை வேலை நாளாக அறிவித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி ஊழியர்கள், அதிகாரிகள் செயல்பட்டனர்.

    சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது. அதன் விளைவாக ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் மக்கள் சொத்துவரி செலுத்தினர்.

    நள்ளிரவு வரை சொத்து வரி வருவாயை கணக்கிட்டனர். அதன் அடிப்படையில் ரூ.1,800 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த மாதம் இறுதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த நிதியாண்டிற்கான சொத்துவரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×