என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
    • அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சொற்கள் இந்திய அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மீதான விவாதத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

    அமித்ஷா அவர்களின் அம்பேத்கர் குறித்த சொற்கள் இந்திய அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுவே அரசு அண்ணல் அம்பேத்கருக்கும் அவரது சேவைகளுக்கும் செலுத்தும் உண்மையான மரியாதை என்று தெரிவித்துள்ளார். 

    • ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    சேலம்:

    மத்திய மந்திரி அமித் ஷா அம்பேத்கரை அவமதித்ததாக கூறி சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தபோவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இது பற்றி தெரியவந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தலைமையில் ரெயில் மறியல் செய்ய ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது அவர்கள் அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் நிலையத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.
    • 2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை.

    சேலம்:

    சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரி மல்டி ஸ்பெசா லிட்டி ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

    இதனால் 1000-த்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக தினமும் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாகவும் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் என மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காட்சி அளிக்கும்.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் முதல் கழிவறைகள் மற்றும் கை, பாத்திரங்கள் கழுவும் இடங்களிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் நோயாளிகள் ஒவ்வொரு அறையாக தண்ணீருக்கு அலைந்தும் அங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நேற்றிரவு முதல் கழிவறை செல்பவர்கள் கூட தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர். இதனால் கழிவறை அருகில் செல்ல முடியாமல் துர் நாற்றம் வீசுகிறது.

    2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் அங்கு தங்கியிரு க்கும் நோயாளிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருகிறார்கள்

    உள் நேயாளிகள் வெளியிலும் செல்ல முடியாமல், இயற்கை உபாதையும் கழிக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலரது உறவினர்கள் வெளியில் சென்று பாத்திரங்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினர். இதே போல சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறையிலும் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் வராததால் போலீசாரும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சீரான தண்ணீர் வழங்கி நோயாளிகளின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், தடையற்ற மின்சாரமும் வழங்க வேண்டும் என்பது அங்கு சிகிச்சை பெறுபவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.

    இன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கழிவு நீர் கலப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
    • புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றார்.

    ஆவடி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இந்த ஏரி சுமார் 18 சதுர கி.மீ. பரப்பளவில் செங்குன்றம், புழல், பம்மது குளம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிவரை பரந்து விரிந்து உள்ளது. புழல் ஏரியின் உயரம் 21.20 அடி.3300 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.

    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக புழல் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மேலும் புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமுல்லைவாயல் மற்றும் அம்பத்தூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஏரி அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புழல் ஏரியில் கலந்து வருகிறது.

    குறிப்பாக ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் புழல் எரியில் கலக்கிறது. திருமுல்லைவாயல் பகுதியில் பச்சையம்மன்கோவில் அருகே உள்ள குளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக வெங்கடாசலம் நகர் பகுதியில் புழல் ஏரியில் சேரும் வகையில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு மழைநீர்கால்வாய் உள்ளது.

    இதேபோல், சி.டி.எச். சாலை அருகே சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தென்றல் நகர் பகுதியிலும் புழல் ஏரியில் கலக்கும் வகையில் சுமார் 2½ கி.மீ. தூரத்திற்கு மற்றொரு மழைநீர் கால்வாய் உள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த 2 மழைநீர் கால்வாய்களில், மாசிலாமணீஸ்வரர் நகர், கமலம் நகர், வெங்கடாசலம் நகர் மற்றும் சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விடப்படுகிறது. இதனால் மழைநீர்கால்வாயில் கழிவு நீர் பாய்ந்து புழல் ஏரியில் கலந்து வருகிறது. ஏரி மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்கள் மூலம் மட்டுமல்லாமல், திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகர் அருகே உள்ள அனுகிரகம் நகர், கற்பகாம்பாள்நகர், சிவா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீரோடு கழிவுநீர் புழல் ஏரியில் கலக்கிறது.

    மேலும், அம்பத்தூர், திருமுல்லைவாயல் தென்றல் நகர், ஒரகடம் வெங்கடே ஸ்வரா நகர் மற்றும் பம்மதுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவுநீரும் புழல் ஏரியில் சேருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றார்.

    • கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    ஈரோடு:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலமாக ஈரோட்டுக்கு கிளம்பினார். ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் பெருந்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சரை வரவேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். இவ்வாறாக 20 இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியான அதே பகுதியை சேர்ந்த சுந்தராம்பாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

    இந்த திட்டத்தின்படி பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருக்கும். இந்த திட்டத்தின் 50வது லட்சம் பயனாளிக்கு சித்தலம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார். 60-வது லட்சம் பயனாளிக்கு மைட்டாபட்டியிலும், 75-வது லட்சம் பயனாளியான நாமக்கல் மாவட்டம் போதமலையிலும், 80வது லட்சம் பயனாளிக்கு சைதாபேட்டையிலும், 90வது லட்சம் பயனாளிக்கு சென்னை விருகம்பாக்கத்திலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகம் வழங்கினார்.

    1 கோடியாவது பயனாளிக்கு திருச்சியில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்.

    இந்த திட்டத்தை பாராட்டி ஐ.நா.சபை சமீபத்தில் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஈரோடு, மேட்டுக்கடை பகுதியில் உள்ள தங்கம் மகாலில் நடைபெறும் தி.மு.க கட்சி நிர்வாகி கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சி குறித்தும், நிர்வாகிகள் கருத்துகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பெருந்துறை ரோடு, முத்து மகாலில் நடைபெறும் தி.மு.க மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பின்னர் இரவில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் ஓய்வு எடுக்கிறார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காளிங்கராயன் விருந்தினர் மாளிகையிலிருந்து கிளம்பி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொது

    மக்கள் மத்தியில் பேசுகிறார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் ரூ.25 கோடி மதிப்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளை திறந்து வைக்கிறார். நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு திட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.10.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.59.60 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஈரோடு ரிங் ரோடு, ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் ரோடு, ஈரோடு பஸ் நிலைய புதிய வணிக வளாகம், பவானிசாகரில் தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் மணிமண்டபம் மற்றும் உருவசிலை என மாவட்டம் முழுவதும் ரூ.951 கோடியே 20 லட்சம் செலவில் முடிவுற்ற 559 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    இதைப்போல் சோலார் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை சந்தை, தியாகி பொல்லான் அரங்கம் மற்றும் சிலை உள்பட மாவட்டம் முழுவதும் ரூ.133 கோடியே 66 லட்சம் செலவில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதன்படி ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1,368 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

    விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவை பிரம்மாண்டமாக நடத்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.
    • சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார்.

    சென்னை:

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எக்ஸ் தள பக்கத்தில் 'எங்கே பழனிசாமி?' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பாராளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள்.

    சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார்.

    ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.

    யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்



    • விழாவில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் சுபேர்கான் வரவேற்றுப் பேசுகிறார்.
    • கவிஞர் ஜோ.அருள் பிரகாஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

    சென்னை:

    தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா வருகிற 23-ந்தேதி மாலை 4 மணியளவில் பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் (பிருந்தா திரையரங்கம் அருகில்) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

    விழாவில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் சுபேர்கான் வரவேற்றுப் பேசுகிறார். இவ்விழாவில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜோ.அருண், ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ், (தமிழ் சுவி சேஷ லுத்தரன் திருச்சபை) டாக்டர் கதிரொலிமாணிக் கம் (இ.சி.ஐ. சென்னை பேராயர், இந்திய சுவிசேஷ திருச்சபை) நீதிபதி அக்பர் அலி, (முன்னாள் சென்னை ஐகோர்ட்டு நிதிபதி) பங்கு தந்தை சு.சுவர்ணராஜ் (தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்) த.இனிகோ இருதயராஜ் எம்.எஸ்., (தலைவர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்)

    பேரருள்பணி எச்.சர்மா நித்தியானந்தம் பொறுப்பு பேராயர் சி.எஸ்.ஐ. சென்னை பேராயம்).

    கயிலைப்புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் (தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை உயர் நிலைக்குழு உறுப்பினர்), அருட்தந்தை மரிய ஆரோக்கியம் கனகா (ம) தாளாளர், பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி)

    பிரவின்குமார் டாடியா (உறுப்பினர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்) ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறை (ம) சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத் தலைவர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு நன்றி கூறுகிறார்.

    கவிஞர் ஜோ.அருள் பிரகாஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

    • காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
    • சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கியில் நுழைந்த நபர் அங்கு ஊழியராக பணியாற்றி வந்த தினேஷ் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்து, வெகுநேரமாக ஆள்நடமாட்டத்தை அறிந்து தினேஷ் காதை வெட்டி உள்ளார். இதனால் படுகாயமடைந்த தினேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    மேலும் காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது.
    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் நேரு பூங்கா அருகே மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறைகூவல் விடுத்திருக்கிறது. அதன்படி சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு அண்ணாசாலை தர்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், முத்தழகன், அடையாறு துரை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்டத்தை வழங்கி 140 கோடி மக்களும் ஜனநாயக உரிமையோடு வாழ்வதற்கு அடித்தளம் அமைத்த அம்பேத்கரை இழிவுபடுத்துகிற பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களின் முயற்சிகளை முறியடிக்க காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் நேரு பூங்கா அருகே மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    • தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
    • அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல், தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

    அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளார். ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    இதேபோல், திண்டுக்கல் ரெயில் நிலையம் வழியே மாநகர மாவட்ட செயலாளர் மைதீன்பாவா தலைமையில் திரண்ட அக்கட்சியினர் ஏற்கனவே தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த அமித்ஷாவின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். அப்போது அவரை உடனடியாக மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோசமிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் உருவ பொம்மையை பறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 வி.சி.க.வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    • 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது.

    அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள் ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றார். தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணம் கேட்டால் அது குறித்து மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

    இஸ்லாமியர்களை எதிர்த்து பேசுவதை தவிர ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விற்கு வேறு கொள்கை இல்லை. மக்களுக்கான திட்டங்களை பா.ஜ.க அரசு எதுவும் செய்வதில்லை. அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்து குடிசைகளை பார்ப்பதில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.நடிகர் விஜய் மிகப்பெரிய திரைப்பட கதாநாயகர். அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை பார்க்க மக்கள் கூடுவார்கள். அதனால் போக்குவரத்தை சரி செய்வதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்படும். எனவே வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மக்களை அவர் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை.

    மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என கூறும் நடிகர் விஜய், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து சந்திக்காதது ஏன்?

    பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான். தமிழ்நாடு அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என கவர்னர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை கவர்னர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.

    இது மக்களாட்சி. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கவர்னர் கூறக்கூடாது. ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது.

    மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என இலங்கை அதிபர் கூறுகிறார். கச்சத்தீவு என்பது தமிழர்களின் உரிமை. தமிழக மீனவர்களாக இருந்தால்தான் இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது.

    கேரள மீனவர்களையோ குஜராத் மீனவர்களையோ கைது செய்வதில்லை. அப்படி கைது செய்யப்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளில் அரசு அவர்களை மீட்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

    இளையராஜா நகையும் சதையும் உள்ள மனிதன் அல்ல அவர் இசை தெய்வம். அவர் கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. மாபெரும் கலைஞன் தாழ்த்தப்பட்டவராகவே பார்க்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×