என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது.
- தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை:
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையில் ஃபெஞ்சல் புயல் மழையால் கடந்த 12-ந்தேதி சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
அந்த நாளில் 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத் தேர்வும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வும் நடத்த முடியாமல் போனது.
அந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் அதுதொடர்பான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6, 7, 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பிற வகுப்புகளுக்கும் வாய்மொழி வாயிலாக உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரியின் கிழக்கே நிலைக் கொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (டிசம்பர் 20) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிசம்பர் 20) முதல் டிசம்பர் 25ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
- தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
- டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதன்பின்னர், 23-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்டா-வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாள் (24-ந்தேதி) பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக லட்சத்தீவு பகுதியில் இருந்து வரும் நிகழ்வு, சுமத்ரா தீவில் இருந்து வரும் நிகழ்வு ஒன்றிணைந்து 26-ந்தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வாளர் நா.செல்வக்குமார் தெரிவித்தார். இது மேலும் தமிழக பகுதிகளை நோக்கி நகர்ந்து, 28-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை மழையை கொடுக்கக்கூடிய நிகழ்வாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
- ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரியின் கிழக்கே நிலைக் கொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (டிசம்பர் 20) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிசம்பர் 20) முதல் டிசம்பர் 25ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை துவங்கி மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, எழும்பூர், வில்லிவாக்கம், பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
- உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னை கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடந்தது.
- குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
சென்னை:
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்று முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7.5 புள்ளிகள் எடுத்து சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சென்னையைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன், இந்தப் பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதையடுத்து, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் செஸ் வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
அப்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று தெரிவித்தார்.
- கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்படுகின்றன.
- இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது.
கேரளா மாநில மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தை ஒட்டிய கிராமங்களில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் மனோகர் தலைமை ஏஜென்ட்டாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடிதம் எழுதி இருக்கிறது.
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரள மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.
- பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்.
- மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சிலர் மாயமடைந்துள்ளதாக தெரிகிறது. மாயமான தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமுற்ற ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான தொழிலாளர்களை நிலக்கரிகளை அப்புறப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்.
- மக்களாட்சிக் கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (20 -ந்தேதி), காலை 11 மணிக்கு சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்ய உள்ளேன். இக்கருத்துகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்துக்கொண்டு கருத்தினைப் பதிவு செய்வதன் வழியே சூழலியல் பாதுகாப்பு மற்றும் மக்களாட்சிக் கடமைகளை ஆற்றிட அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி இந்த சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.
- துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் மேலும் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் தேடுதல் குழுவை அமைத்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், அதனால் அந்த ஆணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுனர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இதன்மூலம் துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் மேலும் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. 6 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ள நிலையில் இந்த மோதல் தேவையற்றதாகும். 13 மாதங்கள் ஆகியும் துணைவேந்தர்கள் நியமனம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வர முடியாதது விந்தையாக உள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் குறித்த சர்ச்சை தொடர வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறதோ? என்ற ஐயத்தைத் தான் இது ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி இந்த சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்வராயன் மலை பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது.
- வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோ பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, போலீசார், மது விலக்குப் பிரிவினர் கல்வராயன் மலை பகுதியில் அதிரடி சோதனைகள் நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கைது செய்தனர்.
கல்வராயன் மலை பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. விவசாயப் பயிர்களுக்கு மத்தியில் கஞ்சா விளைவிப்பது என அப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் ஏராளமாக நடைபெறும் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில் கல்வராயன் மலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 1600 கஞ்சா செடிகளை வளர்வதாக தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
1600 கஞ்சா செடிகளை வளர்த்ததாக 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு 104 கிலோ கஞ்சா செடிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, மதியம் 2 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கும்.
சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
நாளை (டிசம்பர் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
நாபாளையம்: மணலி புதுநகர், விச்சூர் சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே. புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவோயல், நாபாளையம், எடையன்சாவடி, வெள்ளிவோயல் சாவடி, கொண்டகரை, எக்கல் காலணி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எஃப். நகர் மற்றும் சுப்பிரமணி நகர்.
திருவேற்காடு: சுந்தர சோழபுரம், ராம் நகர், சுந்தர வினாயக நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், சுமங்கலை மன்சரோவர் குடியிருப்பு, கோ-ஆபரேடிவ் நகர், காவேரி நகர், மாரியம்மன் கோவில் தெரு, சாய் அவென்யூ குடியிருப்பு, மாதர்வேடு பெருமாள் கோவில் தெரு, வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மேட்டு தெரு மற்றும் மேத்தா மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதும் மதியம் 2 மணிக்கு மின் விநியோகம் சரி செய்யப்படும்.
- அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
- அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் சொற்கள் இந்திய அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது.
கன்னியாகுமரி:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மீதான விவாதத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
அமித்ஷா அவர்களின் அம்பேத்கர் குறித்த சொற்கள் இந்திய அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவே அரசு அண்ணல் அம்பேத்கருக்கும் அவரது சேவைகளுக்கும் செலுத்தும் உண்மையான மரியாதை என்று தெரிவித்துள்ளார்.






