என் மலர்
மகாராஷ்டிரா
- அவுசா தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் பசவராஜ் பாட்டில்
- மகாராஷ்டிராவில் இருக்கும் முக்கிய லிங்காயத்து தலைவர் இவர்
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பசவராஜ் பாட்டில் பாஜகவில் இணையவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் சேருவார் என்று கூறப்படுகிறது.
அதற்கேற்ப இன்று காலை மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டில் அவரை சந்தித்து பேசியுள்ளார் பசவராஜ் பாட்டில்.
அவுசா தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் பசவராஜ் பாட்டில். மேலும் அம்மாநில அமைச்சராகவும் ஒருமுறை அவர் இருந்துள்ளார். குறிப்பாக மகாராஷ்டிராவில் இருக்கும் முக்கிய லிங்காயத்து தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
அதே சமயம் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், பசவராஜ் பாட்டிலிடம் இருந்து எங்களுக்கு எந்த ராஜினாமா கடிதமும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
- கருப்பு நிற கிராப்டாப் மற்றும் பாவாடை அணிந்திருந்த பெண் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
- சில பயணிகள் அதனை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட அது வைரலானது.
சமூக வலைதளங்களில் வைரலாவதற்காகவே இளைஞர்கள், இளம்பெண்கள் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் சமீப காலமாக ஓடும் ரெயில்களில் நடனம் ஆடுவது, ரெயில்வே நடைமேடைகளில் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து பதிவிடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பொது இடங்களில் அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தாலும் சில பயணிகள் அந்த எச்சரிக்கையை கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், மும்பையில் பயணிகள் ரெயிலில் இளம்பெண் ஒருவர் போஜ்பூரி பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கருப்பு நிற கிராப்டாப் மற்றும் பாவாடை அணிந்திருந்த அந்த பெண் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அவரது நடனத்தை பார்த்தனர். சில பயணிகள் அதனை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட அது வைரலானது.
இதைத்தொடர்ந்து மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே பெண்ணின் நடன வீடியோ வைரலாகி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது. அதைப்பார்த்த பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன.
- பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா:
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் இன்று பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலையில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர் அரசு பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பஸ் கொளுந்து விட்டு முழுவதும் எரிந்து நாசமானது.

இதைதொடர்ந்து ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறு அறிவிப்பு வரும் வரை பஸ்களை இயக்க மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (MSRTC)தடை விதித்துள்ளது. பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தையடுத்து சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் ரெயிலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார்.
- அப்போது சக பயணிகளுடன் கலந்துரையாடிய அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
மும்பை:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் இன்று பயணம் செய்தார். அப்போது மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
சக பயணிகளுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். சக பயணிகள் போல் நிதி மந்திரி பயணம் செய்ததை கண்டு மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
மும்பையின் காட்கோபரில் இருந்து கல்யாண் செல்லும் மின்சார ரெயிலில் ஒவ்வொரு நாளும் 60 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
Smt @nsitharaman interacts with commuters while travelling from Ghatkopar to Kalyan in a Mumbai local train. pic.twitter.com/T15BdC3f5V
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) February 24, 2024
- சரத் பவார் கட்சியை உடைத்து, அதை கைப்பற்றிக் கொண்டவர் அஜித் பவார்.
- அரசியல் ரீதியாக மோதல் இருந்து வரும் நிலையில் சரத் பவார் மகள், அஜித் பவாரை சந்திக்க சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அந்த கட்சியை கைப்பற்றிக் கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியதுடன், கடிகாரம் சின்னமும் அவருக்கு கிடைத்துள்ளது.
இதனால் சட்டப்போராட்டம் முடியும் வரை சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்த்ரா பவார் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.
இரு கட்சி தலைவர்களுக்கும் இடையில் கட்சி ரீதியில் மோதல் இருந்து வந்த நிலையில், இன்று காலை சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவாரை சந்திக்க வந்தார்.
இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் திடீரென சுப்ரியா சுலே அஜித் பவாரை சந்திக்க வந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அந்த கட்சியை கைப்பற்றிக் கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியதுடன், கடிகாரம் சின்னமும் அவருக்கு கிடைத்துள்ளது.
இதனால் சட்டப்போராட்டம் முடியும் வரை சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்த்ரா பவார் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.
இரு கட்சி தலைவர்களுக்கும் இடையில் கட்சி ரீதியில் மோதல் இருந்து வந்த நிலையில், இன்று காலை சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவாரை சந்திக்க வந்தார்.
இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் திடீரென சுப்ரியா சுலே அஜித் பவாரை சந்திக்க வந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சுப்ரியா சுலே கூறியதாவது:-
அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர். புனே மாவட்டத்தின் பாதுகாவலர் மந்திரியும் கூட. உஜ்ஜானி, நஜார் அணைகள் என்னுடைய தொகுதியான பாராமதியில் உள்ளது. தற்போது இந்த அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளத. இது குடிநீர் மற்றும் பாசன நீர் தொடர்பாக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்பேன்.
எனது தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அஜித் பவாரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரை சந்திக்க வந்தேன்.
இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.
இந்த நிலையில் சுப்ரியா சுலே கூறியதாவது:-
அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர். புனே மாவட்டத்தின் பாதுகாவலர் மந்திரியும் கூட. உஜ்ஜானி, நஜார் அணைகள் என்னுடைய தொகுதியான பாராமதியில் உள்ளது. தற்போது இந்த அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளத. இது குடிநீர் மற்றும் பாசன நீர் தொடர்பாக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்பேன்.
எனது தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அஜித் பவாரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரை சந்திக்க வந்தேன்.
இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.
- போலியான பாலாடை கட்டி பீட்சா, பர்கர் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- துரித உணவுகளான 'பீட்சா' மற்றும் பர்கர் விற்பனை செய்யும் இடங்களில் சோதனை செய்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாக உணவு பாதுகாப்பு கமிஷனர் கூறினார்.
மெக் டொனால்டு நிறுவனம் 1940-களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை பரப்பியுள்ளது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அகமதுநகரில் உள்ள ஒரு மெக் டொனால்டு துரித உணவக கடையில் போலி பாலாடைக்கட்டியில் தயாரான பர்கர், பீட்சா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த துரித உணவு விற்பனைக் கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு போலியான பாலாடைக்கட்டி ( சீஸ்) துரித உணவுகள் தயாராவதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த உணவகம் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புதுறை நடவடிக்கை எடுத்தது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு கமிஷனர் அபிமன்யு காலே கூறியதாவது:-
இதுபோன்ற போலியான பாலாடை கட்டி பீட்சா, பர்கர் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறான உணவுகளை உட்கொள்ளும் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு மற்றும் பாதிப்புகள் ஏற்படும். போலியான விளம்பரங்கள் வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோல துரித உணவுகளான 'பீட்சா' மற்றும் பர்கர் விற்பனை செய்யும் இடங்களில் சோதனை செய்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் கூறினார்.
- வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தார்.
- 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில முதல்-மந்திரியாக பணியாற்றியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி. 86 வயதான இவர் மாரடைப்பு காரணமாக பி.டி. இந்துஜா மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரிக்கப்படாத சிவசேனாவின் மூத்த தலைவராக விளங்கிய மனோகர் ஜோஷி கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில முதல்-மந்திரியாக பணியாற்றியுள்ளார்.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித் பவாருக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- சரத்பவார் சட்டப்போராட்டம் நடத்தும் அதேவேளையில், புதிய கட்சி பெயரை அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவியவர் சரத் பவார். இந்த கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.-க்களுடன் தனியாக செயல்பட்டு வந்தார். ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா- பாஜனதா கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனால் சரத் பவார் அணி- அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தது. பின்னர் தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தம் எனத் தெரிவித்து கடிகாரம் சின்னத்தையும் அவரது அணிக்கே வழங்கியது.
இதனால் சரத் பவார் புதுக்கட்சியை தொடங்கும் நிலை ஏற்பட்டது. அவர் தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் எனப் பெயர் வைத்திருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னம் ஒதுக்கியுள்ளது. சரத் பவார் கட்சிக்கு "கொம்பு இசைக்கருவி ஊதும் மனிதன் (Man blowing Turha- பராம்பரிய இசைக்கருவி)" சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
வரும் மக்களவை தேர்தலில் சரத்பவார் கட்சி- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா- காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து போட்டியிட இருக்கின்றன. விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மகாராஷ்டிராவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 600 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
- அவர்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 600 கிராம மக்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. பற்றாக்குறை காரணமாக பலருக்கும் மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரங்களின் அடியில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.
நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் கிடத்தப்பட்டு கயிறுகளில் டிரிப்ஸ் பாட்டில்கள் கட்டப்பட்டிருந்தன. மேலும் சிலருக்கு மரங்களில் பாட்டில்கள் பிணைக்கப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் திடீரென மயக்கமடைந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
- இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என ஐ.பி.எல். சேர்மன் அருண் துமல் தெரிவித்தார்.
மும்பை:
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என ஐ.பி.எல். சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை இரு கட்டங்களாக வெளியாகும் என கூறப்படுகிறது. முதல் அட்டவணையை பி.சி.சி.ஐ விரைவில் அறிவிக்கும் எனவும், பாராளுமன்ற பொதுத்தேர்தல் அட்டவணை வெளியானதும் 2வது கட்ட அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
- ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று மனோஜ் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
- வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.
புதுடெல்லி:
மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜாரங்கே பாட்டீல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவு சட்டசபையில் இன்று நிறைவேறியது.
இதன்மூலம் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் கூடுதல் இடஒதுக்கீடு பெற உள்ளனர்.
- சத்ரபதி சிவாஜி மகாராஜின் 394-வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- சிவாஜி சிலைக்கு இன்று காலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மகாராஷ்டிரா மாநில புகழ்பெற்ற போர் வீரரும் மாமன்னருமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் 1630-ம் ஆண்டு புனே மாவட்டம் ஜுன்னார் தாலுகாவில் உள்ள சிவனேரியில் பிறந்தார்.
மறைந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் 394-வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செம்பூரில் உள்ள சிவாஜி சிலைக்கு இன்று காலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து சிவனேரி கோட்டைக்கு சென்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அஞ்சலி செலுத்தினார். அங்கு நடந்த தொட்டில் விழாவில் துணை முதல்வர்கள் அஜித் பவார், பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
சிவாஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி துணை முதல்வர் பட்னாவிஸ் 'எக்ஸ்' இணைய தளத்தில் "வெற்றிகரமான, புகழ்பெற்ற, சக்திவாய்ந்த, திறமையான, நல்லொழுக்கமுள்ள, அறிவுள்ள அரசன் வீர சிவாஜி. அவருக்கு இன்று புகழ் அஞ்சலி, மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.






