பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்-சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு மகாலட்சுமி கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்-சந்திரபாபு நாயுடு
Published on

திருப்பதி:

தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிரா மாநிலம் கோலாம்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலில் அவருடைய குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் ஆசீர்வதிக்கும் சக்தி வாய்ந்த தெய்வமான மகாலட்சுமி ஆசிர்வாதத்தை பெற நீண்ட காலமாக முடிவு செய்திருந்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. தேர்தலில் வாக்களிக்கும் மக்களுடைய மனநிலை நாடு முழுவதும் நல்ல நிலையில் உள்ளது.

இதனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com