search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே லக்கேஜ்களை சோதனையிட்ட அதிகாரிகள்- வீடியோ
    X

    மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே லக்கேஜ்களை சோதனையிட்ட அதிகாரிகள்- வீடியோ

    • நாஷிக் மாவட்டத்திற்கு ஏக்நாத் ஷிண்டே ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார்.
    • அவர் கொண்டு வந்த லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    மகாராஷ்டிர மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளார். இவர் இன்று நாஷிக் மாவட்டம் பஞ்சாவதிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரில் அவருடைய இரண்டு லக்கேஜ் பேக் (சூட்கேஸ், பேக்) இருந்தன.

    சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் ஏக்நாத் ஷிண்டேயின் லக்கேஜ்களை பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதற்கு ஏக்நாத் ஷிண்டே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அதிகாரிகள் சென்றதும் ஏக் நாத் ஷிண்டே புறப்பட்டுச் சென்றார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 5-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×