search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Artificial Intelligence Technology"

  • மனித குரலில் பேசவும், முக பாவனங்களை புரிந்து கொள்ளவும் கூடிய புதிய ஏஐ மாடலாகும்.
  • 26 மொழிகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

  மும்பை:

  'ஆர்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய வெர்சன்கள் இன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது.

  ஆரம்பத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் நாளடைவில் மருத்துவம், சினிமா, சேவை என பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.

  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்பமான சாட்ஜி பிடி ஓபன் ஏ.ஐ. நிறுவனத் தால் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

  அதைத்தொடர்ந்து சாட்ஜிபிடி-4 வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தைய சாட்ஜிபிடி வெர்சனை விட கூடுதல் அம்சங்களை கொண்டிருந்தது. இதனால் சாட்ஜிபிடி-4 வெர்சனுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

  இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் 13-ந் தேதி அன்று தங்களது புதிய வெர்சனான சாட்ஜிபிடி-4 ஓ-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

  இது மனித குரலில் பேசவும், முக பாவனங்களை புரிந்து கொள்ளவும் மற்றும் பேசும் மொழியை பின் நேரத்தில் மொழி பெயர்க்கவும் கூடிய புதிய ஏஐ மாடலாகும்.

  சாட்ஜிபிடி-4ஓ-ல் 25 ஆயிரம் வார்த்தைகள் வரை கேட்க முடியும். அல்லது டாக்மெண்ட் பைல்களை பதிவேற்றம் செய்வதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.

  மேலும் ஒரு படத்தை அப்லோடு செய்தும் கேள்விகளை கேட்கலாம். சாட்ஜிபிடியின் பழைய பதிப்பில் ஆங்கிலத்தில் மட்டுமே புரிந்து கொள்ளும் போது, சாட்ஜிபிடி4-ல் 26 மொழிகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

  சாட்ஜிபி–டியின் புதிய வெர்சனான ஜிபிடி-4 ஓ இதுவரை வெளிவந்த வெர்சன்களில் அதிநவீனமாக இருப்பதுடன் மனிதர் களை போலவே பதில் அளிக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்து உள்ளார்.

  இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகில் இதுவரை கிடைத்திடாத சாட்ஜிபிடி வெர்சன்களில் சிறந்த மாடலை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

  ஓபன் ஏஐ 3.5 வெர்சன் வரை பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கிற நிலையில் இந்நிறுவனம் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச சேவையை அளிக்கும் என ஆல்ட்மேன் உறுதியளித்து உள்ளார்.

  இதுவரை உரையாடல்கள் வழியாக பதில் அளித்த சாட்ஜிபிடி குரல் மற்றும் காணொலி உள்ளிடு களுக்கு பதில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  சினிமாக்களில் வரும் செயற்கை நுண்ணறிவு போல் உண்மைக்கு நெருக்கமாக செயல்படுவதும் இன்னும் அதிக நுண்ணறிவுடனும், நகைச்சுவை உணர்வுடனும் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  அதே நேரம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த புதிய வெர்சனால் சில இடையூறுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

  ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் சிலரின் டீப் பேக் வீடியோக்கள் வெளியான நிலையில் இந்த புதிய வெர்சனால் மேலும் இடையூறுகள் ஏற்படலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

  ஆனால் ஜிபிடி-4ஓ பழைய மாடலை விட 2 மடங்கு வேகமானது மற்றும் கணிசமான செயல்திறன் கொண்டது. இதன் மூலம் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடுதல், சாட்போட்டுடன் பேசுதல் மற்றும் பல்வேறு குரல்களில் பதில்களை கேட்பது ஆகியவை இதில் அடங்கும் என அந்நிறுவனத்தின் அதிகாரி மீரா மிராட்டி தெரிவித்துள்ளார்.

  • நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.
  • வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

  சென்னை:

  இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

  சமீபத்தில் ஒடிசா தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

  இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை செயல்படுத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

  சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:-

  செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை சுப்ரீம் கோர்ட்டில் செயல்படுத்த உள்ளோம். நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.

  வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

  காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில் நுட்பங்களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது.
  • மனஅழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள்வதற்கான நடை முறை வழிமுறைகள் குறித்து மைய உயர் அலுவலர்கள் விளக்கினார்கள்.

  டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான நிப்பான் பியூச்சர் கிரியேசன் ஹப் மையம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும் வணிகமும் ஒன்றிணையும் இடமாகும்.

  சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில் நுட்பங்களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது.

  இந்த மையத்திற்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விமான நிலையங்களில் மின்னணு சுங்க அறிவிப்பு வாயில் மூலமாக முக அங்கீகார தொழில்நுட்பம், வேகமான சுங்க அனுமதி, நெரிசலற்ற சுங்க ஆய்வு தளங்கள், காத்திருப்பு நேரத்தை குறைத்தல் ஆகிய மனஅழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள்வதற்கான நடை முறை வழிமுறைகள் குறித்து மைய உயர் அலுவலர்கள் விளக்கினார்கள்.

  இந்த அதிநவீன விமான பயண முறை உலகின் பரபரப்பான விமான நிலையமான அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

  இந்த நிறுவனம், துறைமுக கண்காணிப்பு, தொழிற்சாலை மேலாண்மை, ரயில் போக்குவரத்து மேலாண்மை தொடர்பு, சாலை போக்கு வரத்து மேலாண்மை, தீயணைப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, வங்கி ஏடிஎம்கள், டிஜிட்டல் தொலைக்காட்சி பரிமாற்றம், மின்னணு அரசாங்கம், நீர் மேலாண்மை, செயற்கை க்கோள் தகவல் தொடர்பு போன்ற கடல் முதல் விண்வெளி வரை அனைத்து நிர்வாகத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு கண்டு வருவதைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கப்பட்டது.

  இந்த மையத்தை பார்வையிட்ட நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைய உயர் அலுவலர்களுடன், தமிழ்நாட்டிற்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் நோக்கம், தமிழ்நாடு அரசின் நிர்வாகத்திலும், பொது பயன்பாட்டு வசதிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

  ×