search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி தகவல்
    X

    சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி தகவல்

    • நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.
    • வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை:

    இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    சமீபத்தில் ஒடிசா தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை செயல்படுத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:-

    செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை சுப்ரீம் கோர்ட்டில் செயல்படுத்த உள்ளோம். நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.

    வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×