என் மலர்
இந்தியா
- கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நாளை வெளியாகும் அவருடைய கூலி திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
'கூலி' மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன்பிக்சர்ஸ், சத்தியராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கான் சார், சகோதரர்
அனிருத், சுருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை ரிலீசாகிறது.
- கூலி படத்தில் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று திருச்சி ரஜினி ரசிகர்கள் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
விநாயகர் கோவிலுக்குள் கூலி படத்தின் ரஜினி புகைப்படங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ரஜினி பேனருக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு பூசணிக்காய் உடைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் கூலி படம் நாளை வெளியாவதை ஒட்டி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
- உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி.
- இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திரையுலகின் மாபெரும் நாயகன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள், திரை பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்த இந்த சிறப்பான தருணத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஒழுக்கம், எளிமை அனைவருக்கும் முன்மாதிரி.
சமூகப் பணியிலும், திரையுலகச் சேவையிலும் உங்களின் பங்கு மறக்க முடியாதது.
இன்னும் பல தசாப்தங்கள் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்க.
நலமுடன் நீண்ட ஆயுள் பெற்று என்றும் பிரகாசிக்க வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விபத்துகளில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் இழப்பீடு வழங்க வேண்டும்.
- இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாகும்.
பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்நிலையில், பணியிடத்திற்குச் சென்று திரும்பும் போது ஏற்படும் விபத்துகளுக்கும், ஊழியர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் பணியாளர் இழப்பீட்டுச் சட்டம், 1923-ன் கீழ் இழப்பீடு வழங்க உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சர்க்கரை ஆலை காவலாளி வேலைக்குச் செல்லும் வழியில் இறந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
வேலைக்குச் செல்லும்போதோ அல்லது திரும்பும்போதோ விபத்து ஏற்பட்டு நீங்கள் காயமடைந்தால், மருத்துவரின் கட்டணம் மற்றும் மருந்துகள் உட்பட சிகிச்சைக்கான அனைத்து செலவையும் அவரது முதலாளி தான் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, பணியிடத்திற்கு செல்லும் அல்லது திரும்பும் பயணத்தை, பணியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது.
எனவே, இத்தகைய விபத்துகளில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.
பணியாளர்கள் அலுவலகத்திற்கு பயணிக்கும்போது அல்லது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டால் கூட இழப்பீடு பெறமுடியும். ஆனால் விபத்து நடந்தவுடன் இதுகுறித்து முதலாளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விபத்துக்கான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் ஆகியவை இழப்பீடு பெற தேவை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பாகும்.
- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டு இருந்தது.
- ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது.
தருமபுரி:
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது காணப்பட்டது. இதனால் அணைகளின் பாதுகாப்பை கருதி இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் அவ்வ பொழுது திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 18 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டு இருந்தது.
தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஆனாலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. மேலும், அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை எதுவுமில்லை.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
- 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
தற்போது மைத்ரேயன் அதிமுகவில் இருந்தும் விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது.
அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை. மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அந்தவகையில் நேற்றும் விலை சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000
10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560
09-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560
08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-08-2025- ஒரு கிராம் ரூ.126
11-08-2025- ஒரு கிராம் ரூ.127
10-08-2025- ஒரு கிராம் ரூ.127
08-08-2025- ஒரு கிராம் ரூ.127
09-08-2025- ஒரு கிராம் ரூ.127
- 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்.
- சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #Coolie திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
- அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளனர். வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அன்று அரசு விடுமுறை என்பதுடன், அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது. எனவே, வரும் வாரம் சனிக்கிழமை அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும். ஆறு மாதங்களில், 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.
சென்னை:
பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.
இதுதவிர ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.
இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பீகாரில் டிரம்புக்கு வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது
- நாய் பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு வசிப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.
சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 'Catty Boss', 'Cat Kumar' 'Cattiya Devi' Q எனக்குறிப்பிட்டு, பூனையொன்றுக்கு வசிப்பிடச் சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பம் வந்துள்ளது. இதனை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உதிதா சிங், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
ஏற்கெனவே சோனாலிகா டிராக்டர்', 'டொனால்ட் டிரம்ப்' பெயர்களுக்கு பீகாரில் வசிப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இப்படி நீதிமன்ற விசாரணையில் திடீரென இருவர் நேரில் ஆஜர்படுத்துவதை தேர்தல் ஆணைய தரப்பு வக்கீல் எதிர்த்தார்.
- செயல்பாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் இத்தகைய தவறு நேர்ந்திருக்கக்கூடும்.
உயிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என 65 லட்சம் பேரை பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
இதற்காக சிறப்பு தீவிர திருத்தும் கொண்ட ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி அமர்வு விசாரணையின்போது சமூக ஆர்வலரான யோகேந்திர யாதவ் திடீரென இரு வாக்காளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
அவர்கள் இருவரும், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உயிரிழந்துவிட்ட நபர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களை சுட்டிக்காட்டி பேசிய யோகேந்திர யாதவ், "ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள், இன்னும் இருக்கிறார்கள். அதை நீங்களே இப்போது நேரில் பார்க்கலாம். அவர்களிடம் ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றையும் மீறி இன்னும் அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை" என்றார்.
இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவிவேதி, இப்படி நீதிமன்ற விசாரணையில் திடீரென இருவர் நேரில் ஆஜர்படுத்துவதை எதிர்த்தார்.
"அவர்கள் இருவரும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய முறையில் விண்ணப்பித்திருக்கலாமே. வெறும் விளம்பரத்துக்காக யாதவ் அவர்களை இங்கே வரச் செய்திருக்கிறார்" என்று திவிவேதி தெரிவித்தார் .
இதற்கிடையே பேசிய நீதிபதிகள், "செயல்பாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் இத்தகைய தவறு நேர்ந்திருக்கக்கூடும். அதை சரிசெய்துகொள்ள முடியும். தற்போது வெளியிடப்பட்டுள்ளது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே. அவற்றை திருத்த இன்னும் கால அவகாசம் உள்ளது. இது இறுதிப்பட்டியல் அல்ல" என்று தெரிவித்தனர்.






