என் மலர்tooltip icon

    இந்தியா

    • தமிழ்நாட்டுக்கான எனது கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு அல்ல.
    • தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராக வளர்ந்துள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் தி வீக் (THE WEEK) ஆங்கில வார இதழ் நடத்தும் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டுக்கான எனது கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு அல்ல.

    * தமிழ்நாட்டிற்கான எனது கனவு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதுதான்.

    * கடந்த 5 ஆண்டுகளில் எல்லோருக்குமான வளர்ச்சியை சாதித்து காட்டி உள்ளோம்.

    * கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது.

    * தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி உள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியின் முத்திரை திட்டங்கள் அனைத்தும் மகளிருக்காகவே நடத்தப்படுகிறது.

    * தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராக வளர்ந்துள்ளது.

    * தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் என் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    நேற்று 2-வது நாளாக சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து துபாய், 3 அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் செல்லும் 17 புறப்பாடு விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் என் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் 3-வது நாளாக சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரும் 18 விமானங்கள், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்தாகி உள்ளன.

    3-வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    • பிளஸ்-2 தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.
    • இன்று தொடங்கிய பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 7545 பள்ளிகளில் படிக்கும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதினார்கள்.

    3412 மையங்களில் தீவிர கண்காணிப்புடன் தேர்வு நடந்தது. தமிழ் முதல் தாள் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வுக் கூடங்களில் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினர்.

    4540 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் பிரிந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். 44,624 கண்காணிப்பாளர்கள் இத்தேர்வினை கண்காணிக்கும் பணிகள் ஈடுபட்டனர்.

    சிறைவாசிகள், தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அவர்கள் சொல்வதை விடைத்தாளில் எழுதினார்கள்.

    காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. பகல்1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. முதல் நாள் தமிழ் தேர்வு என்பதால் மாணவர்கள் மிக உற்சாகமாக எழுதினார்கள். ஒவ்வொரு தேர்விற்கும் குறிப்பிட்ட இடைவெளி விடப்பட்டு தேர்வு நடக்கிறது.

    தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்து உள்ளது. காப்பி அடித்தல், விடைத்தாளை மாற்றுதல், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடில் ஈடுபடும் மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் ஆசி பெற்று தேர்வு கூடத்திற்கு சென்றார்கள்.

    பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டிருந்ததால் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்டனர்.

    அனைத்து கல்வி மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அதிகாரிகள் வினாத்தாள் விநியோகத்தில் எவ்வித குளறுபடியும் ஏற்படாமல் கவனித்தனர். அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. பிளஸ்-2 பொதுத்தேர்வு 26-ந்தேதி நிறைவடைகிறது.

    இதற்கிடையில் நாளை 3-ந்தேதி கடந்தாண்டு பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு 27-ந்தேதி நிறைவடைகிறது.

    பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முறை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    • ஞாயிற்றுக்கிழமையான நேற்று தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது.
    • தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதன் விளைவாக தற்போது தங்கம் விலை ஏறுகிறது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையில் இந்திய சந்தைகள் செயல்படாது. இதனால் அன்றைய தினம் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் ஈரான் மீதான தாக்குதல், முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் தள்ளியுள்ளது. இதன் விளைவால் ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 775-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200

    28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400

    27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    1-03-2026- ஒரு கிராம் ரூ.325

    28-02-2026- ஒரு கிராம் ரூ.320

    27-02-2026- ஒரு கிராம் ரூ.295

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    • பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள்.
    • நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துகள்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று தொடங்கவுள்ள, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள். அனைவரும் நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எண்ணூரில் உள்ள குட்டையை குளமாக மாற்றி சென்னை மாநகராட்சி படகுக் குழாம் அமைத்துள்ளது.
    • படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

    பெருநகர சென்னை மாநகராட்சி அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

    சென்னை எண்ணூரில் உள்ள குட்டையை குளமாக மாற்றி சென்னை மாநகராட்சி படகுக் குழாம் அமைத்துள்ளது.

    இந்த படகுக் குழாமில் மேயர் பிரியா வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    • பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.
    • அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.

    அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் சந்தோஷமா Exam Hall-க்கு வாங்க. மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.
    • உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.

    நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    நல்லதே நடக்கும்!

    வெற்றி நிச்சயம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தெரிகிறது.
    • திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மதுரையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரு தனியார் ஓட்ட லில் சந்தித்து பேசினர்.

    அப்போது அவர்கள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தெரிகிறது. அதில் தென்மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பிடித்துள்ளதாகவும், அதில் பல அ.தி.மு.க. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது.

    மேலும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு பா.ஜ.க. தலைமையிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    • எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
    • தங்கள் ஊடக இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே இப்படி செய்கின்றனர் என தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் பா.ஜ.க. எம்.பி. ஜகதம்பிகா பால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து விளம்பரம் பெற விரும்புகிறார். இந்த ஊடக உத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகளின் முயற்சி ஆகும்.

    ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் போன்ற பிற எதிர்க்கட்சித் தலைவர்களும், தங்கள் ஊடக இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பிரதமருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • செல்போன் உள்​ளிட்ட மின்​சாதனப் பொருட்கள்கொண்​டுவர தடை விதிக்கப்பட்​டது.
    • ஹால்​ டிக்​கெட்​டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்கவேண்டும்.

    சென்னை:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26-ம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.

    இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

    முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள்கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்கவேண்டும்.

    விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்புக் குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது.

    மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் நேரம் உள்பட சிறப்பு சலுகைகள் வழங்குதல் சார்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும்.

    தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்றும் 94983 83075, 94983 83076 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    • இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் ரோஸ்டன் சேஸ் 40 ரன்னிலும், ஷாய் ஹோப் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் 27 ரன்னில் அவுட்டானார்.

    5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோமேன் பாவல் (34 ரன்), ஜேசன் ஹோல்டர் (37 ரன்) சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 76 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், அரையிறுதியில் நுழைந்துள்ள இந்திய அணி, வரும் 5-ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

    வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    ×