என் மலர்
இந்தியா
- விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரவில்லை.
- விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார்.
நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி ஆய்வு குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்து அதன் அறிக்கையை வாங்கியது. ஆனால் வழக்கம்போல் மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தாமல் விவசாயிகளை வஞ்சித்துள்ளது.
கடந்த 1972ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி விவசாயிகளின் நலம் காக்க அவர்கள் உற்பத்தி செய்த நெல்களை வாங்குவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உருவாக்கினார். தற்போது அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஆனால் இது எதுவும் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார்.
கருணாநிதி எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க ஆட்சியில் மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கருணாநிதி விவசாயிகளை சந்தித்து தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் செலுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கருணாநிதி முதலமைச்சராக ஆன உடன் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார்.
அதன் வழியிலே தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரவில்லை.
அ.தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 1.79 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே 1.99 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 10 ஆண்டுகளில் ரூ.1145 கோடி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே ரூ.2042 கோடி ஊக்கத்தொகை வழங்கி சாதனை படைத்தது. இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி பாதுகாவலனாக முதலமைச்சர் விளங்கி வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
- தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது, 4 மாவட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும், ஒரு அணி நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வந்துள்ளதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
- பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.
- NRC,CAA ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.
தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வாக்காளர்கள் அரசாங்கத்தை தேர்தெடுக்கும் நிலை மாறி அரசாங்கம் வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறையே SIR என்று பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பராகலா பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். இவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார்.
மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "SIR-ன் முக்கிய நோக்கம், தங்கள் பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.
அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் என்ற நிலையை மாற்றி, வாக்காளர்களை அரசாங்கமே தேர்ந்தெடுக்கும் செயல்.
தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.
வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும்போது, அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுகிறார்கள். இதுவே SIR-ன் அடிப்படை இலக்கு. ஒடுக்கப்பட்ட, கல்வியறிவற்ற, சிறுபான்மையின மக்கள் பெயர்களை நீக்குவதே SIR-ன் இலக்கு.
இதற்கு அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் ஓர் உதாரணம். ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் பெயர்கள் மட்டுமே SIR மூலம் தக்கவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் அங்கே சில இடங்களில் வெற்றிபெற்றதே ஆச்சரியம்" என்று தெரிவித்தார்.
- இவ்விழாவிற்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவரது மனைவி, இலங்கையை சேர்ந்த 5 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருப்பத்தூர்:
மறைந்த இலங்கை முன்னாள் மந்திரி எஸ்.ஆர்.எம்.ஆறுமுகம் தொண்டைமான்-ராஜலட்சுமி தம்பதியினரின் மகனும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் குமரவேல் தொண்டமானுக்கும் திருப்பத்தூர் பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ராமேஸ்வரன்-பிரியா தம்பதியின் மகள் சீதை ஸ்ரீ நாச்சியாருக்கும் திருமணம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவரது மனைவி, இலங்கையை சேர்ந்த 5 அமைச்சர்கள் மற்றும் இலங்கை உவாமா கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செந்தில் தொண்டைமான், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், அமைச்சர் பெரிய கருப்பன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, எச்.ராஜா, தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் சமூக அமைப்பு நிர்வாகிகள் என பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
- சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2333 கனஅடியாக அதிகரித்துள்ளது.
உப்பார்பட்டி பகுதியில் முல்லை பெரியாற்று கரையோரங்களில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் அணையில் இருந்து கடந்த 4 நாட்களாக தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 137 அடியை எட்டியது. அணையில் 6370 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
அக்டோபர் மாதத்தில் 138 அடிவரைதான் தண்ணீர் தேக்க முடியும் என்பதால் கேரள பகுதிக்கு வீணாக உபரிநீர் திறக்கப்பட்டது. ஆனால் நவம்பர் மாதத்தில் 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 61.19 அடியாக உள்ளது. அணைக்கு 100 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2099 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3834 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி அருகே வருசநாடு வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது படிக்கட்டுகள், தடுப்புகள் சேதமடைந்தது. மேலும் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் இன்று காலை கூடுதல் தண்ணீர் வந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் அருவி உள்ளிட்ட நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும் மழை காலங்களில் நீர்நிலைகளுக்கு செல்வததை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
ஆண்டிபட்டி 2.8, அரண்மனைபுதூர் 2.2, வீரபாண்டி 3.2, பெரியகுளம் 9.6, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 10.6, வைகை அணை 2, போடி 5.8, உத்தமபாளையம் 8.6, கூடலூர் 6.8, பெரியாறு அணை 17, தேக்கடி 26, சண்முகாநதி 7.4 என மொத்தம் 110.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.
- பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்கு சதவீதம் வெறும் 2-3% மட்டுமே. அத்துடன் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையையும் இழந்தனர்.
இந்நிலையில் அங்கில தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தற்போது எந்தத் திடமான ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
மாதக்கணக்கில் அவர் மேற்கொண்ட ஜன சூராஜ் யாத்திரையின்போது தனது குழு சேகரித்த கள ஆய்வுக் கருத்துகளுக்கும், உண்மையான வாக்குப் பதிவின் போக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், இதன் மூலம், தேர்தல் நடைமுறையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் தெரிவித்தார்.
சில வெல்ல முடியாத சக்திகள் தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாகவும், பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் குறித்து சந்தேகம் இருந்தபோதும் தற்போது இவை ஆதாரம் இல்லாத வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் என்டிஏ அரசு சார்பில் தேர்தலுக்கு முன் ஒன்றரை கோடி பெண்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.10,000 விநியோகம் செய்யப்பட்டது குறித்து விமர்சித்த அவர், ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.
- நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன
- கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்டில் அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் இருந்து 161 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் மீட்டுள்ளனர்.
பள்ளி முதல்வர் சுபாஷ் சிங் முதலில் புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களைக் கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
இரண்டு போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தன. வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் நாய் படையும் வரவழைக்கப்பட்டன.
நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன, மற்றவை 20 அடி தொலைவில் காணப்பட்டன. மொத்தம் 161 ஜெலட்டின் குச்சிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றும் படையினரால் சேமிக்கப்பட்டன.
கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் ஏன் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் அரியானாவில் அதிக அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
- அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.
காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. மீது த.வெ.க. தலைவர் விஜய் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதுதொடர்பாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* விஜய்க்கு அண்ணாவை பற்றி தெரியாது, அண்ணா முதலமைச்சராக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை.
* மக்களுக்காக போராடுவேன் என கூறி கட்சி தொடங்கி சிறை சென்றவர் அண்ணா.
* முதல் தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தோடு விஜய் வந்துள்ளார்.
* தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
* அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.
* கட்சி பதவிக்காக கொள்ளை அடிப்பதாக த.வெ.க.வினரே குற்றம்சாட்டுகின்றனர்.
* மெட்ரோவிற்கு அனுமதி கொடுக்காத பா.ஜ.க.வை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்?
* தமிழ்நாட்டு பிரச்சனை பற்றி என்ன பேசியிருக்கிறார் விஜய்?
* பா.ஜ.க.வின் அடிமையாக விஜய் உள்ளார் என்றார்.
* தன்மீது தவறு இருப்பதால் விஜய் கரூர் விவகாரம் குறித்து ஒருபோதும் பேசமாட்டார்.
* கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்றார்.
- யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது.
- மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியின் பிரதான நதியான யமுனை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது. யமுனையை தாயை மீட்டெடுக்க போவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் யமுனை நதி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் இப்படியே தொடர்ந்தால், டெல்லி தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை (DSIIDC) மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் மன்மீத் ப்ரிதம் சிங் அடங்கிய அமர்வு, DSIIDC தாக்கல் செய்த நிலை அறிக்கைகளில் உள்ள தாமதங்களைக் குறிப்பிட்டு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.
ரூ. 2.5 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதும், எந்தவொரு மறுசீரமைப்புத் திட்டங்களும் இறுதி செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே நிலுவையில் உள்ள ரூ. 2.5 கோடி நிதியை இரண்டு வாரங்களுக்குள் நிதியை விடுவிக்குமாறு DSIIDC-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.
- தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தி.மு.க. மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் அவர் பேசுகையில், காஞ்சிபுரம் என்றாலே பட்டு என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் இன்றைய நெசவாளர் நிலை வறுமை, கந்துவட்டி கொடுமையாக உள்ளது.
* இந்த அரசால் டெல்டா மாவட்ட விவசாயிகள் எப்படி பாதிக்கப்பட்டார்களே அதேபோல் நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.
* உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை ஒரு கட்சி சிண்டிகேட் அமைத்து கொள்ளை அடிப்பதை பார்த்திருக்கிறீரா?

* தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.
* குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறியே வைக்கமாட்டேன் எம்.ஜி.ஆர். வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
* இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான்... ஒன்னு சொன்னா அதை செய்யாம விடமாட்டான்...
* பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து நாடே... என்று கூறி விட்டு சிரித்தார்.
* பாப்பானு ஆசையா, பாசமா, சாஃப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி. நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி?
* வெளியில் செல்ல அனுமதி கிடைத்தவுடன் நிச்சயம் வெளியில் வருவோம் என்றார்.
- ஏண்டா விஜய்யை தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களை தொட்டோம் என Feel பண்ண போறாங்க.
- எங்களுக்கு ஓட்டுபோட இருக்கும் மக்களை தற்குறி என்கிறீர்களே அவர்களிடம் தானே நீங்கள் ஓட்டு கேட்டீர்கள்.
காஞ்சிபுரம்:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியதாவது:-
* அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர் தான் நம்மை தற்குறி என அழைக்க வேண்டாம் என பேசினார்.
* திமுக எம்எல்ஏ எழிலனின் ஆதரவு குரல் போன்ற குரல் அனைத்து வீடுகளிலும் எதிரொலிக்கும்.
* கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.
* நடிகர் கட்சி... நடிகர் கட்சி என்று சொனன் ஒருத்தர் எம்.ஜி.ஆர். கூடவே போய் சேர்ந்துவிட்டார்.
* ஏண்டா விஜய்யை தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களை தொட்டோம் என Feel பண்ண போறாங்க.
* எங்களுக்கு ஓட்டுபோட இருக்கும் மக்களை தற்குறி என்கிறீர்களே அவர்களிடம் தானே நீங்கள் ஓட்டு கேட்டீர்கள்.
* தற்குறி என நீங்கள் கூறுபவர்கள் தான் உங்களின் தலையெழுத்தை மாற்றி எழுத போகிறார்கள்.
* த.வெ.க. தொண்டர்கள் அனைவரும் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி என்றார்.
- சட்டசபையில் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் த.வெ.க. மேல்தான் அவதூறு பரப்புகிறார்கள்.
- அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து பேசியதாவது:-
* உங்கள் அரசவைப் புலவர்கள் யாராவது இருந்தால் கைக்குட்டை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்.
* சட்டசபையில் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் த.வெ.க. மேல்தான் அவதூறு பரப்புகிறார்கள்.
* நாம் ஆட்சிக்கு வந்தா... அது என்ன வந்தா... வருவோம்... மக்கள் நம்மை கண்டிப்பாக வரவைப்பார்கள்.
* மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வழிவகை செய்யப்படும்.
* வீட்டிற்கு ஒரு மோட்டார் வாகனம் இருக்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.
* வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழக பாட திட்டத்தை மாற்ற வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.
* வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பை முடித்திருக்க வழிவகை செய்யப்படும்.
* சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக வைத்து அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.






