என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    மார்ச் 6ஆம் தேதி 'காதல் ரீசெட் ரிபீட்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் ரீசெட் ரிபீட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

    முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையை சொல்லும் இந்தப் படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

    இந்தப் படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார், ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த், சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் கவனித்துள்ளனர்.

    மார்ச் 6ஆம் தேதி 'காதல் ரீசெட் ரிபீட்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், காதல் ரீசெட் ரிபீட் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

    • சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், நல்லக்கண்ணு உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    • ரஷியா, ஈரான், கியூபா உள்பட12 நாடுகள் எதிராக வாக்களித்தன.
    • உக்ரைனின் தீர்மானத்தை ஆதரித்த 107 நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது.

    இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதற்கிடையே நேற்று ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 5-வது ஆண்டில் நுழைந்தது.

    இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்புவிடுத்து ஐ.நா.சபையில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு' என்ற தலைப்பில் உக்ரைன் அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்துக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உள்பட 107 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்கு அளித்தன.

    ரஷியா, ஈரான், கியூபா உள்பட12 நாடுகள் எதிராக வாக்களித்தன.

    இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா, அமெரிக்கா, பக்ரைன், வங்காளதேசம், பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 51 நாடு கள் புறக்கணித்து நடுநிலை வகித்தன.

    உக்ரைனின் தீர்மானத்தை ஆதரித்த 107 நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். அவர் கூறும் போது, உக்ரைனுடன் உயிர்களைப் பாதுகாப்பதில் நின்ற 107 நாடுகள் ஒவ்வொன்றிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    முழுமையான போர் நிறுத்தம் மற்றும் எங்கள் மக்கள் நாடு திரும்புவதற்கான தெளிவான அழைப்புகளுடன், நீடித்த அமைதிக்கு ஆதரவு அளிக்கும் எங்கள் தீர்மானத்தை ஐ.நா. சபை நிறைவேற்றியது என்றார்.

    • பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள்.
    • மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை.

    போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக NDA கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை முறையில் பாஜக மூலம் முயற்சி செய்வோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபர்ணதி 'தேன்', 'ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
    • இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

    சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து 'தேன்', 'ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

    இந்நிலையில், நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க விருப்பமில்லை என்று அபர்ணதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் இதுகுறித்து பேசிய அபர்ணதி, "நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் நடிகர் ஆர்யாவுடன் பயணம் பண்ணியிருக்கிறேன், நல்ல நினைவுகள் உள்ளது. அதனால் ஒரு Fake ஸ்டோரியை வைத்து ரொமான்ஸ் அல்லது தங்கை ரோல் பண்ணுவதற்கு விருப்பமில்லை. அதனால்தான் எனக்கு ஆர்யாவுடன் படம் பண்ண விருப்பமில்லை" என்று தெரிவித்தார்.

    • நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது.
    • மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.

    தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது. அதுவும் அக்டோபர் மாதம் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறிய மேலும் விவரங்கள் வருமாறு:-

    இந்த ஆண்டு கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் 12 வாரங்களில் 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், வறண்ட வானிலை கொண்டதாகவும் இருக்கும். 2 வாரங்கள் வெப்பசலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையும் காணப்படும். இதில் வெப்பசலன மழை மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும்.

    தென்மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கக்கூடிய ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி வரையிலோ அல்லது அக்டோபர் 2-வது வாரம் வரையிலோ நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.

    இது மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.

    2020, 2021, 2022, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் மழை தரக்கூடிய 'லாநினோ' ஆண்டுகளாக இருந்தன. 2027-ம் ஆண்டு உலகளாவிய எல் நினோ ஆண்டாக இருக்கும் என்பதால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்.

    அதிலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2027) மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். மொத்தத்தில் 2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் காணப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 164 ரன்கள் சேர்த்தது.

    பல்லேகலே:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 98 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    • உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் போர் தொடுத்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
    • ரஷியாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    மாஸ்கோ:

    உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் போர் தொடுத்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.

    நான்காவது ஆண்டு நிறைவை குறிக்கும் நாளில், ரஷியாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ரஷியாவின் மாஸ்கோவில் சவ்யோலேவ்ஸ்கி ரயில் நிலையம் அருகே நள்ளிரவு போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் போக்குவரத்து போலீசார் வாகனம் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரும் இதில் உயிரிழந்தார்.

    இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

    • மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
    • கேரளாவில் தேர்தல் நெருங்கி வருகிறது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.

    பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து மோகன்லால் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

    இந்த நேர்காணலின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

    கேரளாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த நேர்காணல் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இது அரசின் ஒரு விளம்பர முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.

    இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களையும் அவர் இதேபோல் நேர்காணல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியே காரணம்.
    • ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்

    கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில் கேரளாவிற்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "மாநிலத்தின் பெயர் 'West Bengal' என்று 'W' எழுத்தில் தொடங்குவதால், தேசிய அளவிலான கூட்டங்கள், தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் மேற்கு வங்க மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எப்போதும் கடைசியாகவே அழைக்கப்படுகின்றனர்.

    நானும் கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பையே பெறுகிறேன்.

    மேற்கு வங்க சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை Bangla (வங்காளம்) என மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.

    இருப்பினும், மத்திய அரசு அதனை நிலுவையில் வைத்துவிட்டு, கேரளாவின் கோரிக்கையை மட்டும் விரைவாக நிறைவேற்றியிருப்பது வஞ்சகமானது.

    கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியின் காரணமாகவே, அம்மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு உடனே சம்மதித்துள்ளது.

    பாஜக தேர்தலின் போது மட்டும் 'Bangla' என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற நேரங்களில் பெங்காலிகளை அவமதிக்கிறது.

    ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
    • அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    முன்னாள் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.  புதிய கட்சித் தொடங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் அடங்கிய கட்சியின் கொடியை பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். 

    அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேசியுள்ளார். 

    சசிகலாவின் இந்த வருகை, தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அதிமுக வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

    • இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.

    டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன

    இந்நிலையில் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி உள்ளது.

    இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ரசிகர்கள் tickets.t20worldcup.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

    முதலாவது அரையிறுதி மார்ச் 4 ஆம் தேதியும் இரண்டாவது அரையிறுதி மார்ச் 5 ஆம் தேதியும், இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

    இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்பதால் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி தகுதி நிலையைப் பொறுத்து மைதானங்கள் மாறும்.

    டிக்கெட் வாங்கிய மைதானத்தில் போட்டி நடைபெறவில்லை என்றால், அதற்கான தொகை உங்கள் கணக்கிற்குத் திருப்பித் தரப்படும்.

    சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா, தனது அடுத்த இரு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய  தீவுகள் அணிகளை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். 

    ×