என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபர்ணதி"

    • ’தேன்’, ‘ஜெயி’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி.
    • இவர் தற்போது ‘உடன்பால்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து 'தேன்', 'ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் 'உடன்பால்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.


    அபர்ணதி

    நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'உடன்பால்' திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை அபர்ணதி, தனக்கு அதிக ஸ்கிரீன் ஸ்பேஸ் கதைகளில் நடிக்க ஆசை அதற்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாக கூறினார்./


    உடன்பால்

    மேலும், ஆர்யாவுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை என்றார். பின்னர் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'வாரிசு', 'துணிவு' திரைப்படத்தில் முதலில் 'துணிவு' திரைப்படத்தை பார்ப்பேன் என்றும் எனக்கு அஜித் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.

    • தேன் படத்தின் மூலம் அபர்ணதி தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
    • இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

    சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து 'தேன்', 'ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், அபர்ணதி அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெஞ்சென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    இப்படத்தை அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்குகிறார். அருண் ராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏசி புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×