என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார்.
    • நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார்

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி இந்திய திரை பிரபலங்கள் பலர் ஒருவருக் கொருவர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரன்களுடன் 'ஹோலி' கொண்டாடினார்.

    ரஜினி முகத்தில் அவரது பேரன்கள் மகிழ்ச்சியாக கலர் பொடிகளை பூசினர். பதிலுக்கு ரஜினியும் பேரன்கள் முகத்தில் வர்ணங்களை பூசி மகிழ்ந்தார்.

    இதுபோன்று நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், ராய்லட்சுமி, கியாரா அத்வானி, ரித்திகாசிங், நிமிஷா சஜயன், திஷா பதானி, ரவீனா தாண்டன், அவரது மகள் ராஷா உள்பட பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

    பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனாஸ் மகள் மால்டி மேரியுடன் இணைந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த பண்டிகையை கொண்டாட பிரியங்கா சோப்ரா கணவரும், ஹாலிவுட் பாடகருமான நிக்ஜோனாஸ் வெளிநாட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்பே மும்பை வந்திருந்தார்.

     

    நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார். இதுபோன்று அமிதாp பச்சன், சிரஞ்சீவி, சித்தார்த் மல்கோத்ரா, அக்ஷய்குமார், டைகர் ஷெராப், விஜய் தேவரகொண்டா உள்பட பலர் ஹோலி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபெல் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் கல்யாணம் நடைப்பெறும் காட்சிகள் அமைந்துள்ளது. பாடல் கல்யாண சீசனுக்கு ஏற்ப மிகவும் உற்சாகத்துடனும், கொண்டாடத்துடன் அமைந்துள்ளது.

    "டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது.
    • அவர்கள் இருவரையும் நோக்கி ரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. சமீப காலமாக ஏராளமான படங்கள் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது.

    படத்தில் மகேஷ்பாபுவுடன் 'குர்ச்சி மடத்த பெட்டி' என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா மற்றும் சதீஷ் ஆகியோர் தனியார் கல்லூரியின் கல்சுரல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அடுத்ததாக ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றனர்.

    அவர்கள் இருவரையும் நோக்கி ரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.

    இதையொட்டி அந்த பாடலுக்கு சில நிமிடங்கள் இணைந்து நடனம் ஆடினர். அப்போது ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயனுக்கு நடன ஸ்டெப்களை கற்றுக் கொடுத்தார். கல்லூரி மாணவர்களின் வேண்டுதலுக்கு இணங்க மாணவர்களுக்காக கல்லூரி முதல்வரிடம் விடுமுறை கேட்டார். கல்லூரி மாணவர்களின் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த சில வாரங்களாகவே பிரித்விராஜ், படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    • சிறப்பு காட்சியைப் பார்த்த தெலுங்கு திரைத்துறை இயக்குனர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.

    பிலெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால், சோபா மேனன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து, வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'ஆடுஜீவிதம்'.

    2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி இப்படத்தை இயக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைத்துள்ளார்.

    2018 ஆம் ஆண்டு படபிடிப்பை தொடங்கிய ஆடு ஜீவிதம் படக்குழுவினர், 2023 ஆம் ஆண்டில் படபிடிப்பு பணிகளை முடித்தனர். மலையாள சினிமாவில் ஆடுஜீவிதம் படமே மிக நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்த படமாகும்.

    கடந்த சில வாரங்களாகவே பிரித்விராஜ், படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரித்விராஜ் நேற்று தெலுங்கு திரைத்துறையின் முன்னணி இயக்குனர்களை ஆடுஜீவிதம் படத்தின் சிறப்பு காட்சிக்கு அழைத்து இருந்தார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆடுஜீவிதம் படத்தை தெலுங்கு மொழியில் விநியோக உரிமையைப் பெற்றது.

    சிறப்பு காட்சியைப் பார்த்த தெலுங்கு திரைத்துறை இயக்குனர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். ஆடுஜீவிதம் படத்தின் "ஓமானே" பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது.

    மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு படத்திற்கு பிறகு வெளியாகும் மலையாளப் படம் இதுவே. அதனால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மேல் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா,பேரக்குழந்தைகளுடன் வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.
    • சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று பதிவிட்டு உள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஹோலி- 2024 கொண்டாடினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    1975- ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமான 'சிவாஜி ராவ் சினிமாவுக்காக 'ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது இதே நாள் என்பதால் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு 'ஹோலி' பண்டிகை தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.




    'ஹோலி' கொண்டாட்ட புகைப்படங்களை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் 'பழம்பெரும் இயக்குனர்பாலசந்தர் 'தாத்தா' அவர்களை இந்த நேரத்தில் நாம் தவறவிட்டு உள்ளோம்"என குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் அவர்களது மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று இதயம் மற்றும் எமோஜிகளை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தார்.அவருக்கு 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்று பெற்றோர் பெயர் சூட்டினர். பெங்களூருவில் முதலில் 'கண்டக்டர்' பணி செய்தார்.அதன்பின் நடிப்பு ஆர்வத்தில் அவர் சென்னைக்கு வந்தார். 

    1975- ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். 




    ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.

    இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது.
    • நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.

    தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ. இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    சந்தானம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நடிகர் சேஷு நடித்துள்ளார்.

    ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது. முக்கியமாக "அச்சச்சோ அவரா பயங்கரமான ஆள் ஆச்சே" என்று அவர் நடித்த காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    இதற்கு அடுத்து  வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் சிகிச்சைக்காக பலர் நிதி திரட்டி கொடுத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இச்செய்தி திரைப்பட கலைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்
    • விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன்,கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் பகிர்ந்துள்ளார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்"தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்"

    என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு உள்ளார்.

    நயன்தாரா அடுத்ததாக 'டெஸ்ட்' மற்றும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' ஆகிய படங்களில் நடிக்கிறார்.அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. அவர் கடைசியாக 'அன்னபூரணி' படத்தில் நடித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார்.
    • அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடித்தார். இந்தி சினிமாவில் நயந்தாராவிர்கு கதாநாயகியாக முதல் படம் இதுவே. இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி படத்தில் நடித்தார்.

    நயன்தாரா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொழி வேறுபாடின்றி பல முக்கியமான நட்சத்திர பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தார்த் மற்றும் மாதவன் நடித்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

    அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நயன் தாரா நடிக்கவுள்ளார். இப்படமானது பெண்களை மையமான கதைக்களம் ஆகும். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    சசிகுமார் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஒரு வித சமூக கிளர்ச்சியை உண்டாக்கும். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. . நடிகர் சூரி, உன்னி முகுந்தன் மற்றும் சசிக்குமார் இணைந்து கருடன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தககது.

    மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இருக்கின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கினார்.
    • படத்தின் தலைப்பை கொரோனா குமாரில் இருந்து வைப் குமார் என்று மாற்றியுள்ளார்.

    இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் வெளியாகியது. விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா, பசுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ஜுங்கா படத்தை இயக்கினார்.

    இதற்கடுத்து 2020 ஆம் ஆண்டு கொரொனா குமார் என்ற படத்தை சிம்பு நடிப்பில் இயக்க இருந்தார். ஆனால் சுழ்நிலைக் காரணமாக அப்படம் கைவிடப்பட்டது. ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கினார்.

    இந்நிலையில் அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் படம் இயக்கவுள்ளார் . சிம்பு முதலில் நடிக்க இருந்த கொரோனா குமார் கதையைதான் இப்பொழுது விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்க போகிறார். படத்தின் தலைப்பை கொரோனா குமாரில் இருந்து வைப் குமார் என்று மாற்றியுள்ளார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கும் இப்படத்திற்கும் தொடர்பு இருக்கிறது என கூறியுள்ளார்.

    விஜய் சேதுபதி இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்
    • ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

    நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர் . இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் நடித்தார். RRR படம் மிகப் பெரிய படமாக அமைந்தது. அந்த படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

    கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ஜரகண்டி பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. எக்ஸ் பக்கத்தில் #ஜரகண்டி என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டாப்ஸி காதல் திருமணம் கடந்த 23-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது
    • நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்

    நடிகர் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதை தொடர்ந்து 'ஆரம்பம்', 'காஞ்சனா 2' உள்பட பல படங்களில் அவர் நடித்து உள்ளார்.

    தற்போது இந்தி படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார். பிரபல நடிகர் ஷாருக்கானுடன் ஜோடியாக நடித்த 'டங்கி' படம் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில் 'டென்மார்க்' நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் என்பவரை பல ஆண்டுகளாக டாப்ஸி காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் இந்த மாதம் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.





    இந்நிலையில் டாப்ஸி காதல் திருமணம் கடந்த 23-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது.

    இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். இதையடுத்து நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'தக் லைப்' படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் சமீபத்தில் விலகினர்
    • இந்நிலையில் சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் அவரிடம் படக்குழு பேசி வருகிறது

    ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல், இயக்குனர் மணி ரத்னம் இணையும் படம் 'தக் லைப்'. இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் .

    படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.

    படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால், கமல் இல்லாத காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியானது.




    'தக் லைப்' படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிப்பதற்கு படக்குழு வேறு நடிகர்களை தேடி வந்தது.

    இந்நிலையில் சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் அவரிடம் படக்குழு பேசி வருகிறது. விரைவில் 'தக் லைப்' படத்தில் கமலுடன், நடிகர் சிம்பு இணைந்து நடிக்க உள்ளார்.



    மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் சிம்பு விரைவில் கையெழுத்திட உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×