என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இளையராஜா தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்திருந்தார்
    • கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தராமல், தனது பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து அந்நிறுவனம் மோசடி செய்துவிட்டது

    எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரில், தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்து, இது சம்பந்தமாக ஒப்பந்தம் போட்டிருந்தேன்.

    இதற்காக குறிப்பிட்ட தொகையை பங்கு தொகையாக தர அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் ஒப்பந்தப்படி கடந்த 20 வருடமாக பங்கு தொகை எதுவும் தரப்படவில்லை என்றும் பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து மோசடி செய்துவிட்டது என்று இளையராஜா தெரிவித்திருந்தார்.

    இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து எக்கோ நிறுவனத்திடமிருந்து 20 ஆயிரம் சிடிக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து, இளையராஜா அளித்த புகாரில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எக்கோ நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த உத்தரவு எதிர்த்து, எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் இன்று விலகியுள்ளார்.

    வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிக்கலான மற்றும் பல அடுக்கு திரைக்கதைகளை அவர் படங்களில் வைத்து இயக்குவதில் சுகுமார் திறம் பெற்றவர்
    • சுகுமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ரங்கஸ்தலம். இப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

    தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் சுகுமார். நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2004 ஆண்டு வெளிவந்த ஆர்யா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் மூலமாகதான் அல்லு அர்ஜூனின் புகழ் பலமடங்கு உயரியது.

    சிக்கலான மற்றும் பல அடுக்கு திரைக்கதைகளை அவர் படங்களில் வைத்து இயக்குவதில் சுகுமார் திறம் பெற்றவர். ஆர்யா 2, 100% லவ், ரங்கஸ்தலம், புஷ்பா ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் சுகுமார்.

    அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா பாகம் 1 உலகளவில் மிகப்பெரிய வெற்றியை வாங்கி கொடுத்தது. 2021 ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் புஷ்பா திரைப்படம் அதிக வசூலினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் செய்த படம் புஷ்பா திரைப்படம் தான்.

    ராம் சரண், சமந்தா ,பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு போன்ற பல நடிகர்களின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ரங்கஸ்தலம். இப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

    இந்நிலையில் சுகுமார் அடுத்ததாக ராம் சரணை வைத்து படம் இயக்கவுள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படமானது ராம் சரணின் 17- வது படமாகும். #Raring2conquer என்ற தலைப்பில் படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    இப்படத்திற்கு பிறகு சுகுமார் அல்லு அர்ஜூன் நடிக்கவிருக்கும் புஷ்பா பகுதி 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஸ்ருதிஹாசன் இசையில் கமல்ஹாசனின் வரிகள் கேட்பதற்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
    • இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசன் மிக நெருக்கமாக இணைந்து நடித்து உள்ளார்.

    பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'லியோ' படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்தின் 171- படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், 'இனிமேல்' ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

    இந்த பாடலை நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடித்து உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கி உள்ளார்.

    இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசன் மிக நெருக்கமாக இணைந்து நடித்து உள்ளார். காதலர்கள் இருவரும் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்க்க செல்கின்றனர். அத்திரைப்படத்தில் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைகிறது. பாடல் இறுதியில் கமல் ஹாசனின் அவருக்கே உரித்தான பேஸ் குரலில் பாடியுள்ளார்.

     

    ஸ்ருதிஹாசன் இசையில் கமல்ஹாசனின் வரிகள் கேட்பதற்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. திரைக்கு பின்னே பார்த்து பழகிய லோகேஷ் கனகராஜ் முகம் இனிமேல் ஆல்பம்  பாடலில் நடித்து இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

    இனிமேல் பாடலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்"
    • டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜூ முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து மார்ச் 22 ஆம் தேதி வெளியாகியது ரெபெல் திரைப்படம். இந்த படம் மக்களிடையே கலந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    ஜி.வி. பிரகாஷ் அடுத்து நடித்த கள்வன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகிறது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் "டியர்". "செத்தும் ஆயிரம் பொன்" படத்தை இயக்கிய ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷும் ஐஷ்வர்யா ரஜேஷும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாட்டின் ப்ரோமோ வீடியோவை இன்று மாலை வெளியிடுகிறார்கள்.

    பாட்டின் முழு வீடியோவை நாளை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்."டியர்" படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "சினிமா உலகில் நான் நடிகராக எளிதில் நுழைந்து உள்ளேன். என் தந்தை நடிகர் என்பதால் எனக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது
    • என்னை நிரூபிக்க சினிமாவில் இன்று வரை நான் கடினமாக உழைத்து வருகிறேன்

    மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். 'தி கோட் லைப்' என்ற புதிய படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் அமலாபால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது.

    இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்து இருந்தார். துரதிருஷ்டவசமாக 1.5 வருடங்களாக கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல் எடையும் அதிகரித்து.

    அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் அளிப்பதாக அமைந்து உள்ளது.




    இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் பற்றி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இதில்கலந்து கொண்டு நடிகர் பிருத்விராஜ் கூறியதாவது :-




    "சினிமா உலகில் நான் நடிகராக எளிதில் நுழைந்து உள்ளேன். என் தந்தை (நடிகர் சுகுமாரன்) பிரபல நடிகர் என்பதால் எனக்கும் சினிமாவில் பட வாய்ப்பு உடனடியாக கிடைத்தது. என்னை விட சிறந்த நடிகர்கள் பலர் இருந்தும் எனக்கு கதாநாயகனாகும் வாய்ப்பு தந்தையால் தான் கிடைத்தது.

    என்னை நிரூபிக்க சினிமாவில் இன்று வரை நான் கடினமாக உழைத்து வருகிறேன். சினிமா குடும்பத்தில் பிறந்ததால் தான எனக்கும் வாய்ப்பு வந்தது.நான் அதிர்ஷ்டசாலியா? ஆமாம், அதிர்ஷ்டசாலி தான். எனது தந்தையால் தான் வாய்ப்பு கிடைத்ததா? ஆமாம், அவரால் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. இதை என்னால் மறுக்க முடியாது".என்றார்.

    பிருதிவிராஜின் வெளிப்படையான பேச்சு குறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    • 'WIFE’ என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

    அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'WIFE' படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறுகையில், "கணவன் - மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

    அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

    திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம். 'WIFE' என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

    அப்படி பயன்படுத்ததாது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

    பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிர்ச்சி விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் நடித்து வெளியான அடியே படத்தில் மிர்ச்சி விஜய் சிறப்பாக நடித்து இருந்தார்.

    விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'டாணாக்காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சலி நாயர் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
    • சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    தமிழ் படங்களில் ஹீரோயின் இருக்கிறார்களோ இல்லையோ காமெடியன்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதிலும் சந்தானம் கதாநாயகனாக நடிக்க சென்ற பிறகு நகைச்சுவை நடிகர்களுக்கான இடம் காலியானது. அந்த வெற்றிடத்தை நிரப்பியது யோகி பாபு. ஒரு காலக்கட்டத்தில் எந்த தமிழ் படங்கள் பார்த்தாலும் அதில் யோகி பாபு இருப்பார்.

    நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. 'எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சிடி' பாடல் மிகவும் வைரலாகியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

    மடோன் அஸ்வின் அறிமுக படமான மண்டேலா படத்தில் யோகிபாபு தான் ஒரு சிறந்த காமெடியன் மட்டுமில்லாமல் சிறந்த நடிகன் என்று நிருபித்தார். அதற்கடுத்து அவர் தமிழில் பலப்படங்கள் நடித்துள்ளார். ஜெயிலர், ஜவான், அயலான்,சைரன், மாவீரன், டக்கர் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.

    இந்நிலையில் யோகிபாபு அடுத்தக்கட்டாமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகி உள்ளது.

    யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். ஷங்கர் தயால் இதற்கு முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படத்தை இயக்கியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'இனிமேல்’ முழு ஆல்பம் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது
    • ரசிகர்கள் இணைய தளத்தில் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'லியோ' படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்தின் 171- படத்தை இயக்க உள்ளார்.இதற்கான 'ஸ்கிரிப்ட்' தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், 'இனிமேல்' என்கிற பெயரில் துவங்கும் ஆல்பம் பாடலில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனராஜ் நடித்து உள்ளார்.ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் எழுதிய வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கி உள்ளார்.

    இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசன் மிக நெருக்கமாக இணைந்து நடித்து உள்ளார். கவர்ச்சி தோற்றத்தில் உருவான இந்த பாடலின் 'டீசர்' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.




    இணைய தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமான 'கமெண்ட்ஸ்' பதிவு செய்தனர்.மேலும் முழுப் பாடல் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

    இந்நிலையில் 'இனிமேல்' முழு ஆல்பம் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் இணைய தளத்தில் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார்.
    • ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார்.

    நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

    ஜான்வி கபூர் தனது தாயைப் போலவே அடிக்கடி ஆன்மீக சுற்றுலாவாக கோவில்களுக்கு சென்று வருகிறார்.

    அதன்படி ஜான்வி கபூர் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவரது காதலன் என கூறப்படும் ஷிகா பஹாரியா மற்றும் அவரது நண்பர் ஓரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

    ஜான்வி கபூர் மற்றும் அவரது காதலன் இருவரும் வெள்ளை நிற பேண்ட், வெளிர் நிறத்தில் குர்தாவும் அணிந்து இருந்தனர்.

    பின்னர்ஜான்வி கபூர் தனது காதலனுடன் முட்டி போட்டபடி மலை பாதையில் உள்ள படிக்கட்டில் 3 மணி நேரம் ஏறி சென்றார். அதன் பிறகு முட்டி போட்டபடி செல்ல சிரமம் அடைந்ததால் நடந்து சென்றார்.

    ஜான்வி கபூரை அடையாளம் கண்ட பக்தர்கள் அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்த பிறகு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

     

     

    விமானத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஜான்வி கபூர் திருப்பதி வந்தது முதல் விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடியது வரை அவரது காதலன் ஷிகா பஹிரியா தனது செல்போனில் வீடியோ போட்டோக்களாக பதிவு செய்து இருந்தார். அவரது செல்போன் பதிவுகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார்.
    • இதுகுறித்து ஏ.ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார்.

    ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். விஜய்-க்கு திருப்பு முனையாக அமைந்த துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை இயக்கினார். மக்கள் மனதில் என்றும் ஏ.ஆர் முருகதாஸ் படங்களுக்கு என்றும் எதிர்பார்ப்புண்டு.

    கடைசியாக அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தர்பார் திரைப்படம் பெரிதாக வசூல் இல்லை.

    பின் ஏ.ஆர் முருகதாஸ் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவந்த அகிரா படத்திற்கு பிறகு சல்மான் கானை வைத்து பேன் இந்தியன் படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு இந்த படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ரமணா படத்தின் லொகேஷனுக்கு 23 வருடங்களுக்கு பிறகு சென்றுள்ளார். Sk23 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.

    இதுகுறித்து ஏ ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் "23 வருடங்களுக்கு பிறகு Sk23 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரமணா படம் எடுத்த அதே லொகேஷனுக்கு வந்து இருக்கிறேன், எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே வந்து நிக்கிறேன் இது கனவா? நிஜமா? என்று தெரியவில்லை". மிஸ் யூ கேப்டன் என உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் கடந்த மார்ச் 8-ந் தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
    • 'பைட்டர்' படத்திற்கு பின் 2024 -ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 2- வது இந்தி படம் என்ற சாதனையை இப்படம் பெற்று உள்ளது.

    பிரபல இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கிய இந்தி திரைப்படம் 'ஷைத்தான்'. இப்படம் 'வாஷ் என்ற குஜராத்தி திரைப்படத்தின் 'ரீமேக்' படமாகும்.

    இப்படத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன், ஜோதிகா,  மாதவன், ஜான்கிபோடிவாலா ஆகியோர் நடித்துள்ளனர்.சுமார் ரூ.65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது.

    இப்படம் கடந்த மார்ச் 8-ந் தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது திரையரங்குகளில் 3- வது வாரமாக வெற்றிகரமாக இப்படம் ஓடி வருகிறது.




    இந்நிலையில் இப்படம் தற்போது 'சூப்பர்ஹிட்' ஆகியுள்ளது.உலகம் முழுவதும் இப்படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் சாதனை படைத்து ரூ.200 கோடியை குவித்துள்ளது.

    ஹிருத்திக் ரோஷன்- தீபிகா படுகோன் நடித்த 'பைட்டர்' படத்திற்கு பின் 2024 -ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 2- வது இந்தி படம் என்ற சாதனையை இப்படம்  பெற்று  உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் ஒரு மனிதனுக்கும் பேய்க்கும் இடையிலான தனித்துவமான காதல் கதையாகும்.
    • இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

    'ரவுடி பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் ரெட்டி. தற்போது 'லவ் மீ - இப் யூ டேர்' என்ற   ரொமாண்டிக் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். தில் ராஜு ' புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

    இந்த படத்தை புதுமுக இயக்குனர் அருண் பீமவரபு இயக்கி உள்ளார். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.இப்படம் ஒரு மனிதனுக்கும் பேய்க்கும் இடையிலான தனித்துவமான காதல் கதையாகும்.படக்காட்சிகளை பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 25 - ந்தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.




    இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படம் விரைவில் தியேட்டரில் ரீலீஸ் ஆவதையொட்டி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×