'லவ் மீ' காதல், திகில் படம் ஏப்.,25-ல் ரிலீஸ்

இப்படம் ஒரு மனிதனுக்கும் பேய்க்கும் இடையிலான தனித்துவமான காதல் கதையாகும்.இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது
'லவ் மீ' காதல், திகில் படம் ஏப்.,25-ல் ரிலீஸ்
Published on

'ரவுடி பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் ரெட்டி. தற்போது 'லவ் மீ - இப் யூ டேர்' என்ற   ரொமாண்டிக் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். தில் ராஜு ' புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் அருண் பீமவரபு இயக்கி உள்ளார். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.இப்படம் ஒரு மனிதனுக்கும் பேய்க்கும் இடையிலான தனித்துவமான காதல் கதையாகும்.படக்காட்சிகளை பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 25 - ந்தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படம் விரைவில் தியேட்டரில் ரீலீஸ் ஆவதையொட்டி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com