சகுனியுடன் சேரும் யோகி - வெளியான அப்டேட்

யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
சகுனியுடன் சேரும் யோகி - வெளியான அப்டேட்
Published on

தமிழ் படங்களில் ஹீரோயின் இருக்கிறார்களோ இல்லையோ காமெடியன்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதிலும் சந்தானம் கதாநாயகனாக நடிக்க சென்ற பிறகு நகைச்சுவை நடிகர்களுக்கான இடம் காலியானது. அந்த வெற்றிடத்தை நிரப்பியது யோகி பாபு. ஒரு காலக்கட்டத்தில் எந்த தமிழ் படங்கள் பார்த்தாலும் அதில் யோகி பாபு இருப்பார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. 'எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சிடி' பாடல் மிகவும் வைரலாகியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

மடோன் அஸ்வின் அறிமுக படமான மண்டேலா படத்தில் யோகிபாபு தான் ஒரு சிறந்த காமெடியன் மட்டுமில்லாமல் சிறந்த நடிகன் என்று நிருபித்தார். அதற்கடுத்து அவர் தமிழில் பலப்படங்கள் நடித்துள்ளார். ஜெயிலர், ஜவான், அயலான்,சைரன், மாவீரன், டக்கர் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.

இந்நிலையில் யோகிபாபு அடுத்தக்கட்டாமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகி உள்ளது.

யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். ஷங்கர் தயால் இதற்கு முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படத்தை இயக்கியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com