என் மலர்
சினிமா செய்திகள்
- ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியிடும் விழா இன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி வி பிரகாஷ், இவானா, இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். கள்வன் படத்தின் டிரெயிலர் 11.30 மணி அளவில் வெளியானது.
படத்தின் டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஊரினுள் யானை நழைந்ததாக தகவல் வருகிறது அதனால் யாரும் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கின்றனர். அக்காட்டுப் பகுதியில் காவல் நிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
அப்பொழுது கதாநாயகனான ஜி வி பிரகாஷ் மற்றும் அவன் கூட்டாளியான தீனா காட்டு பகுதிக்குள் காவலுக்காக செல்கின்றனர் அதற்கடுத்து அவர்களுக்கு என்ன ஆனது, காட்டில் இருந்து அவர்கள் எப்படி யானையிடம் இருந்து மீண்டு வந்தனர் என்பதே மீதிக்கதை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும்
- இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் மற்றும் சஞ்சிதா செட்டி முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து இருந்தனர். நலன் குமாரசாமி இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
தமிழின் சிறந்த ப்ளாக் க்யூமர் திரைப்படங்களில் ஒன்றாக சூது கவ்வும் இன்றும் கருதப்படுகிறது.
இதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சூது கவ்வும் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக கடந்த ஆண்டு படக்குழுவினர் அறிவித்தனர். இரண்டாம் பாகத்தை இயக்குனர் எம். எஸ் அர்ஜூன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நேற்று ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜில் 10000 மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மற்றும் படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தை தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜுடன் இணைந்து சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என தெரிவித்தார் சி.வி.குமார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பட்டையை கிளப்பியது. லியோ பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள சில நாட்களுக்கு முன்பு கேரளா வந்த நடிகர் விஜய்-க்கு அம்மாநில ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் படப்பிடிப்பு தளம் மற்றும் விஜய் தங்கியிருக்கும் இடங்களில் தினந்தோரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.

ரசிகர்கள் வருகையை அடுத்து நடிகர் விஜய், அவர்களை சந்தித்து வந்தார். ரசிகர்கள் விஜய்க்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். மேலும் விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், கேரள ரசிகர்களுக்காக நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மலையாளிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை எக்ஸ் பதிவில் இணைத்துள்ளார்.
இந்த பதிவில், "எனது சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள்! எல்லா மலையாளிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்
- ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்

ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் தலைப்பிடாத புதிய படம் தற்போதைக்கு ராம்சரண் 16 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. புதிய பட துவக்க விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி, உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர. புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.
முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.



ஜான்வி கபூரின் அடுத்த படமாக இப்படம் அமைந்து இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதனால் ராம்சரணின் 16 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது
- இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார்
கடந்த சில நாட்களாக கோட் படப்பிடிப்பு நடக்கும் கேரளாவின் திருவனந்தபுரம் மிகவும் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய் 4 நாட்கள் படப்பிடிப்புக்காக 9 வருடங்களுக்கு பிறகு கேரளா சென்றார்.
கேரளாவில் அவர் இறங்கியதில் இருந்து ரசிகர்கள் அவரை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் பின் தொடர்ந்த் வண்ணம் உள்ளனர்.
கிடைக்கும் நேரத்தில் எல்லாம் விஜய் ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்துக் கொண்டு இருக்கிறார்.
கேரள ரசிகர்கள் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலின் வாசலிலும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் மணிக்கணக்காக இரவு பகல் பாராமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று ரசிகரின் குழந்தையை விஜய் தூக்கி கொஞ்சும் வீடியோ வைரலானது, மாற்றுத்திறனாளி ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோவும் வைரலாகியது.
இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு இன்று மீண்டும் தமிழகம் புறப்படுகிறார். கிளம்பும் முன் கேரள ரசிகர்களை சந்தித்து பேசினார். அவரைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். அவர் ரசிகர்களுடன் பேசும் பொழுது தமிழ்நாடும் கேரளாவும் என் இரு கண்கள் மாதிரி என குறிப்பிட்டுள்ளார். பின் கேரள ரசிகர்கள் காட்டிய அன்புக்கு மிகவும் நன்றி என வணங்கி கூறினார்.
பின் அவர் ரசிகர்களை சந்திக்கும் பொழுது போது வழக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார்
- கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
நடிகர் கதிர் 2013-ம் ஆண்டு வெளியான மதயானைக்கூட்டம் படத்தின் மூலமாக நாயகனாகி அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம், நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கினார்.
பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார். அடுத்ததாக அமேசான் பிரைமில் வெளியான சூழல் வெப் தொடரில் நடித்திருந்தார். விரைவில் சுழல் 2-ம் பாகம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்..இப்படத்தை எஸ்.எல்.எஸ் ஹென்றி இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிந்தது. இப்படத்தை பார்ச்சூன் ஸ்டுடியோஸ் மற்றும் எமினன்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
தற்போது, இப்படத்தின் முதல் பாடலாக கொல்லுறாளே என்கிற பாடல் இன்று மாலை வெளியாகியது. இப்பாடலை சந்துரு வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்னும் பெயரிட படாத இந்த படத்திற்கு சில மாதங்களில் தலைப்பு வெளியிடப்பட உள்ளது
- இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 'மே' மாதம் தொடங்குகிறது
பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா கதாநாயகனாக ஏ.ஆர். ரகுமான் இசை கூட்டணியில் புதிய படத்தை முதன் முதலாக 'பிகைண்ட்வுட்ஸ்' சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர் ரகுமான் இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.
இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன.
காமெடி நடிகர் யோகி பாபு இதில் வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்."

இன்னும் பெயரிட படாத இந்த படத்திற்கு சில மாதங்களில் தலைப்பு வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணையும் 6-வது கூட்டணியை குறிக்கும் வகையில் 'arrpd-6' என தற்காலிகமாக இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 'மே' மாதம் தொடங்குகிறது. 2025 - ல் இப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க முனிஷ் காந்த், யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா போன்ற பலர் நடித்துள்ளனர்.
- அவரின் மகனான சண்முகப்பாண்டியன் படத்திற்கும் பெரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார். இன்று முன்னணி நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களுக்கு விதையிட்டவர் விஜயகாந்த்.
பல முன்னணி நடிகர்கள் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து அவர்களின் துக்கத்தை பகிர்ந்து கொண்டார்கள். நடிகர் சங்கத்திற்காக பல நன்மைகளை செய்து இருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் மகனான சண்முகப் பாண்டியன் 2015 ஆண்டு சுரேந்தரன் இயக்கத்தில் சகாப்தம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2018 ஆம் ஆண்டு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார்.
இப்பொழுது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க முனிஷ் காந்த், யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா போன்ற பலர் நடித்துள்ளனர்.
விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவினை வெளியிட்டார் அதில் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவிற்கு எப்படி விஜயகாந்த் சிறப்பான பணிகளை மேற்கொண்டாரோ அதேப்போல் நாமளும் செய்ய வேண்டும். பலக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த விஜயகாந்தின் குடும்பத்திற்கு நாம் நம் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என் கூறினார்.
மேலும் விஜயகாந்தின் படத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தோமோ அதேப் போல அவரின் மகனான சண்முகப்பாண்டியன் படத்திற்கும் பெரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக் கொண்டார். சண்முகப் பாண்டியன் படத்தில் வாய்ப்பு இருந்தால் நான் கவுரவ தோற்றத்தில் நடிப்பேன் என்றும் கூறினார்.
அதேப் போல் இன்று படைத்தலைவன் படப்பிடிப்பிற்கு சென்று இருக்கிறார் ராகவா லாரன்ஸ். 3 நாள் படைத்தலைவன் படத்தில் நடிப்பதற்காக கால் ஷீட் கொடுத்து இருக்கிறார். எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் மற்றும் சண்முகப் பாண்டியன் இருவரும் இணைந்து படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாளை படைத்தலைவன் படத்தின் அப்டேட் வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டீசரில் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதி ஹாசனும் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றது
- இதை கருத்தில் கொண்டு காயத்திரி எக்ஸ் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.
ஆக்ஷன் திரைப்படங்களை தனக்கு என ஒரு ஸ்டைலில் எடுப்பதில் திறமை கொண்டவர் லோகேஷ் கனகராஜ். இவர் எடுக்கும் படங்களில் நிறைய ஆக்ஷன் காட்சிகளே நிறைந்திருக்கும். இவர் படங்களில் காதல் காட்சிகளுக்கு பஞ்சமே. இவர் படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் பாவம், ஏதோ ஒரு வகையில் இறந்து விடுவார்கள்.
சமீபத்தில் கமல்ஹாசன் தயாரித்து ஸ்ருதிஹாசன் இசையில் ஒரு இண்டிபெண்டண்ட் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கின்றனர். அதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க,பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு 'இனிமேல்' என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்பாடலின் டீசர் நேற்று மாலை வெளியானது. டீசரில் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதி ஹாசனும் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றது. இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படப்புகழ் நடிகை காயத்திரி 'இனிமேல்' டீசரில் கமண்ட்டை பதிவு செய்து இருக்கிறார்.
கமல் நடிப்பில் வெளிவந்த 'விக்ரம்' படத்தில் காயத்திரி ஃபஹத் ஃபாஸிலை காதலிப்பார், ஆனால் கடைசியில் அவரின் தலையை வெட்டி கொன்று விடுவார்கள். இதை கருத்தில் கொண்டு காயத்திரி எக்ஸ் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.

அதில் " உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு ..... வாட் இஸ் திஸ் மா லோகேஷ்?" என்ற கமெண்டை அவரின் எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவு செய்து இருக்கிறார். இந்த கமெண்ட் எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
- ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் நரேன். தற்போதும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நரேன் இன்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார். அப்போது நீங்கள் நடிக்கும் படங்கள் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். அதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
- 'அமரன்' படம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதன் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் 30 நாள் தொடர்ச்சியாக நடந்தது.
- இந்த படத்தில் எதிரிகளுடன் சிவகார்த்திகேயன் மோதும் துப்பாக்கி சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 21 - வது படமாக 'அமரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது.
கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்த்' என்கிற ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய, 'ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் ராஜ்புத் ரெஜிமெண்ட்'பிரிவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார்.அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டைத் தாக்கி, அது தீப்பற்றி எரிந்ததும் தப்பியோடிய பயங்கரவாதிகளில் இருவரை முகுந்த் கொன்றார்.
இதைத் தொடர்ந்து, தப்பியோடி வேறு வீட்டில் பதுங்கிய மற்ற பயங்கரவாதிகள் மீதும் முகுந்த் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி சுட்டதில் முகுந்த் உடலில் குண்டு பாய்ந்தது.

இதில் வீர தீரத்துடன் போராடி 3- வது பயங்கரவாதியை அவர் சுட்டுக் கொன்றார். அதை தொடர்ந்து காயம் அடைந்த முகுந்த் வரதராஜனும் உயிரிழந்தார். அவரது வீர மரணத்தை போற்றும் வகையில் அவருக்கு 'அசோக சக்ரா விருது' வழங்கப்பட்டது.
எனவே இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு'அமரன்' படம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதன் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் 30 நாள் தொடர்ச்சியாக நடந்தது. மீதி படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்நிலையில் 'பிரேமலு' மலையாள படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஷியாம் மோகன் (ஜேகே ஆதி) தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அமரன்' படத்தில் இணைந்து உள்ளார். அவர் ஒரு முக்கிய சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார்.
இதை தொடர்ந்து 'அமரன்' படம் கூடுதல் பலம் பெற்று வருகிறது. இந்த படத்தில் எதிரிகளுடன் சிவகார்த்திகேயன் மோதும் துப்பாக்கி சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் விஜய்.
- பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டு இருக்கும் படம் GOAT. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
தற்பொழுது படக்குழுவினர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்ட் ஸ்டேடியத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். கேரள படப்பிடிப்பை அடுத்து ரஷ்யாவின் தலை நகரமான மாஸ்கோ நகரத்தில் இறுதிக் கட்ட படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர்.
9 வருடங்களுக்கு பிறகு விஜய் கேரள மண்ணில் படப்பிடிபிற்காக காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கேரள விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்தே ரசிகர்கள் அவரின் காரை சூழ்ந்து அன்பை வெளிப்படுத்தினர். அவர் படப்பிடிப்புத்தளம் செல்லும் வரை அவர் காரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
நேற்று ரசிகர்களை காண சென்ற விஜையை காண்பதற்கு கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரண்டனர். பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்பலர் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். விஜய் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் மாற்றுதிறனாளி ரசிகருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் விஜய்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






