என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
- பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும் .
பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, ஜெயம் ரவி, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கமல் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.

இப்படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி கமல் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்
இந்நிலையில், செர்பியாவில் 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வௌியாகி வைரலாகின.
இந்தபடத்தில் நடிகர் கமல் தற்காப்பு கலைதிறன்களை வெளிப்படுத்துகிறார்,பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வு ஏற்படுத்தும் வகையில் அமையும் எனக் கூறப்படுகிறது
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
- திடுக்கிடும் சம்பவங்கள் கதையாக உருவாகி இருக்கிறது.
கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்". பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர். மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த். ந மேற்கொண்டுள்ளார். நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
- இப்பாடல் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஆக்ஷன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ஆக்ஷன் திரைப்படத்தை தனக்கு என ஒரு பாணி வைத்து இயக்குவதில் லோகேஷ் கனகராஜ் திறமை பெற்றவர்.
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவை அவரின் LCU யூனிவர்ஸ் என்ற கான்சப்டில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் பெரும் அளவுக்கு மக்களால் கொண்டாடப்பட்டது. 500 கோடி ரூபாய் வசூலையும் குவித்தது.
இதனால் பல முன்னணி நாயகர்கள் தனக்கு படம் இயக்கி தருமாறு லைனில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ளார்.
கமல்ஹாசன் தயாரித்து ஸ்ருதிஹாசன் இசையில் ஒரு இண்டிபெண்டன்ட் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கின்றனர். அதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க, பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.இப்பாடலுக்கு "இனிமேல்" என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் நடிகராக பார்ப்பத்தில் புதிதாக இருக்கிறது. டீசரில் பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசனின் காதல் காட்சிகளே இடம்பெற்று இருக்கிறது. காதலில் இருந்து அவர்கள் கல்யாணம் செய்துக் கொள்ளும் வரை காட்சிகள் அமைந்துள்ளன.
இப்பாடல் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்பாடலின் டீசரின் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்
- தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.
நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் செய்திகளை பற்றியும், தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.
இந்நிலையில் ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் "ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? என்று ஒரு ரசிகை வினவினார் .
சில்லுனு ஒரு காதல் படத்தில் எப்படி நீங்கள் ஐஷுவுக்காக செய்தீர்களோ அதே போல் எனக்கும் உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்" என்ற கமண்ட்டை அப்புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா அந்த கம்மண்டிற்கு "ஊப்ஸ், நாட் அலோவ்டு" என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
என். கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் சில்லுனு ஒரு காதல். {ஐஷூ} என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து இருப்பார். சூர்யா அவரின் கல்லூரி பருவத்தில் பூமிகாவை காதலித்து இருப்பார், ஆனால் அக்காதல் கைக்கூடாமல் போய்விடும். அடுத்து வேண்டா வெறுப்பாக ஜோதிகாவை மணம் முடிப்பார். அடுத்து அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
இப்படத்தில் தன் பழைய காதலியான பூமிகாவை ஒரு நாள் சந்திப்பதற்கான சூழ்நிலை அமையும் சூர்யாவுக்கு. இதை மையப்படுத்தியே அந்த ரசிகை கமண்ட் செய்து இருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரேமலு படம் தமிழிலும், தெலுங்கு மொழியிலும் டப் செய்து வெளியிட்டனர்.
- மலையாள சினிமாவில் 100 கோடி வசூலித்த படங்களில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது பிரேமலு.
பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் பிரேமலு படம் வெளியானது. மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்து இருந்தனர்.
மலையாள பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 100 கோடியை தாண்டிய நிலையில்மலையாள சினிமாவில் 100 கோடி வசூலித்த படங்களில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது பிரேமலு.மலையாள சினிமாவில் 100 கோடி வசூலித்த படங்களில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது பிரேமலு.
மலையாள படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரேமலு படம் தமிழிலும், தெலுங்கு மொழியிலும் டப் செய்து வெளியிட்டனர்.. தெலுங்கு மற்றும் தமிழ் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரேமலு படத்தின் படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார். "இப்படி ஒரு அழகான, காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்த படக்குழுவிர்கு எனது வாழ்த்துக்கள்" என பாராட்டியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.
- இணைய தொடர் யூடியூப் தளத்தில் வெளியானது.
தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவரின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், லைகா மியூசிக் நிறுவனம் "நடுவுல கொஞ்சம் இசைய காணோம்" என்ற தலைப்பில் இசை சார்ந்த இணைய தொடரை யூடியூப் தளத்தில் வெளியிட்டு இருக்கிறது.
இந்த தொடரில், சிறு வயதில் இருந்து, இளையராஜா அருகில் தான் ரசித்த பல அனுபவங்கள், கோடிகணக்கான ரசிகர்கள் ரசிக்கும் பாடலுக்கு பின் நடந்த சுவையான சம்பவங்கள், ரசிகர்கள் கேட்டிராத இளையராஜா பாடல் பதிவின் போது, நடந்த பல்வேறு ஆச்சர்ய நிகழ்வுகளை பற்றி ஜான் மகேந்திரன் பகிர்கிறார்.
இதுவரை இளையராஜாவின் பாடல்கள் பற்றியும், பின்னணி இசை பற்றியும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தும், லைகா மியூசிக்கில் வரும் இந்த தொடரில், பலர் கவனிக்க தவறிய இளையராஜாவின் இசை பக்கத்தை பற்றியும், அது ஒரு திரைப்படத்தில் செய்த மாற்றத்தை பற்றியும் ஜான் மகேந்திரன், இளையராஜா ரசிகராக பகிர்கிறார்.
இத்தொடர், இளையராஜா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் , இளையராஜாவை பற்றி, அவர் இசையை பற்றிய ஒரு பரிமாணத்தை காட்டும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.
- மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ரஜினி முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.
இவர், 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'பட்டதாரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.
பின் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளிவந்த 'பிக் பிரதர்'படத்தில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு க்ரேசி ஃபெல்லோ' மற்றும் உக்ரம் போன்ற படத்திலும் நடித்தார் மிர்னா மேனன்.
இந்நிலையில் இன்று மிர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி செய்வதுப் போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஓடுவதும், குதிப்பதும், தலை கீழாக சுழலுவதும் பிரமிக்க வைக்கின்றது.
தற்போது இப்பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்
ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது.
இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றார்.அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.
இநிலையில் தற்போது விஜய்யின் 'கோட்' படப்பிடிப்புகேரளாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.ரசிகர்கள் மத்தியில் விஜய் மலையாளத்தில் பேசி அசத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
மேலும் அந்த குழந்தையிடம் 'அங்கிளுக்கு' ஒரு 'உம்மா' கொடுங்க என நடிகர் விஜய் கேட்பது போன்ற காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து உள்ளது.
கேரள குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சிய போது அந்த குழந்தையின் அம்மா, " அங்கிளுக்கு உம்மா ஒன்னு கொடு" என சொன்னதும் அந்த குழந்தை க்யூட்டாக விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மிக ஆர்வம் உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்'
- அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார்.'தல' என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மற்றும் சமையல் உள்ளிட்டசெயல்பாடுகளில் மிக ஆர்வம்உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்' . அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது மத்திய பிரதேசத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார்.'விடாமுயற்சி' நட்பால் நடிகர் ஆரவும் இந்த சுற்றுப் பயணத்தில் அவருடன் இணைந்து உள்ளார்.
ஒரு அடர்ந்த காட்டில் நடிகர் அஜித் கேஸ் அடுப்பில் ஒரு அண்டாவில் சிக்கன் பிரியாணி சமைத்து அவரது நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்து உள்ளார். தற்போது அந்த பிரியாணி சமையல் வீடியோ, புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதனை ரசிகர்கள் பார்த்து வியப்படைந்து வருகின்றனர்
நடிகர் அஜித் சிக்கன் பிரியாணி தயாரிப்பதில் வல்லவர். அவர் தயாரித்த பிரியாணியை சாப்பிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதனை பாராட்டி உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
- இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.
தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர். இந்த படம் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அமோசன் பிரைம் தளத்தில் வெளியானது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.
நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான "கேப்டன் மில்லர்" திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது
- நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.
நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.
அதில், "சேச்சி... சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.
விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆடுஜீவிதம் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
- இந்த படம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகால பயணம்.
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள படம் தி கோட் லைஃப் ஆடுஜீவிதம். பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள இந்த படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான 'ஆடுஜீவிதம்' கதையை பிளெஸ்ஸி படமாக இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசிய பிருத்விராஜ், "இந்தப் படம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகால பயணம். 2008-ல் இயக்குநர் பிளெஸ்ஸி என்னிடம் வந்து, 'நஜீப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும்' எனக் கூறினார்."
"2009 ல் இந்தப் படம் செய்யலாம் என முடிவெடுத்து அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்ல பத்து வருடங்கள் ஆனது. 2022 இல் இருந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு ஒன்றரை வருடம் ஆனது. மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல நிலைமை. இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி."
"படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்ய ஒப்புக்கொண்ட உதயநிதி சாருக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் நன்றி. இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






