என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
    • கிளைமேக்ஸ் காட்சியில் இயக்குநர் லோகேஷ் நடித்திருந்தார்.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' மற்றும் லியோ போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். இந்த பாடலுக்கான போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த பாடலின் டீசர் நாளை (மார்ச் 21) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

     


    முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கமல்ஹாசன் நிறுவனம் சார்பில் உருவாகும் பாடலில் லோகேஷ் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த பாடலை ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார்.
    • வெப்பம் குளிர் மழை படத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்குகிறார். புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடல் "டமக்கு டமக்கா" வெளியிடப்பட்டது. இந்த பாடலை சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார்.

     


    ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடலை தொடர்ந்து இந்த படத்தின் முதல் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக நடிகர்களான திரவ் மற்றும் இஸ்மத் பானு இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வெப்பம் குளிர் மழை படத்தில் எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகள் பற்றிய கதையம்சம் கொண்டிருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
    • இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இந்த நிலையில், இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படத்திற்கு "மனுசி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரிக்கிறார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

     


    இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்
    • ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன

    இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் - ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ஆர்.சி. 16 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

    இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில், ராம் சரண், ஜான்வி கபூர், சிரஞ்சீவி, ராம் சரண் மனைவி உபாசனா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன.

    இப்படத்தின் பூஜை தொடர்பான படங்கள் மற்றும் வீடியோவை படக்குழு எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    தற்போது ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • .படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.
    • வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது

    மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். இவர் 'தி கோட் லைப்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அமலாபால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது.

    இந்த படத்திற்காக பிருத்விராஜ்31 கிலோ எடை குறைத்து இருந்தார். துரதிருஷ்டவசமாக 1.5 வருடங்களாக கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல் எடையும் அதிகரித்து.

    அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.





    இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் அளிப்பதாக அமைந்து உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.

    சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த  எதிர்பார்ப்புகளை அதிகரித்தது.பிருத்விராஜ்க்கு இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

    பிருத்வி சிறந்த நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பயணித்து வருகிறார் இவர் 'ஆகஸ்ட் சினிமா' என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் அண்மையில் வெளியான மலையாளப் படங்கள்  தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து உள்ளது. மேலும் நடிகர் பிருத்விராஜின் 'தி கோட் லைப்' படத்தின் மீது ரசிகர்கள் பார்வை குவிந்து உள்ளது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
    • நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன்.

    இசைத் துறையில் 47 வருடங்களாக யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

    இளையராஜாவை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேதை இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர்.





    இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய 'பயோபிக்' உருவாகிறது.இந்தபடத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கை குறித்த சம்பவங்கள் இடம்பெறுகிறது.

    இந்தப்படத்தை சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய தனுஷ், "நான் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இசைஞானி இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாஹித் கபூர் நடிக்கும் புதிய பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    • புதிய படத்தை சச்சின் ரவி இயக்கி உள்ளார்.

    தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள பான்-இந்தியா படைப்பாக உருவாகி இருக்கும் படம் 'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்'. இந்த படம், மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமனின் கதையை ஆராய்கிறது.

    தற்போதைய காலகட்டத்தில் அஸ்வத்தாமன் நவீன சவால்களையும் வலிமைமிக்க எதிரிகளையும் எதிர்கொள்கிறார். இதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை அதிரடி காட்சிகள் மற்றும் திருப்பங்களுடன் சொல்லும் படம் இது.

     


    படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த காலமும் நிகழ் காலமும் மோதும் பிரம்மாண்ட களத்தை கண் முன்னே கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இப்படம் அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    பூஜா என்டர்டெயின்மென்ட் பேனரில் வாசு பாக்னானி, ஜக்கி பாக்னானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். சச்சின் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் 'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்', உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • "நோ டைம் டு டை" என்ற பாண்ட் திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது.
    • அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஹாலிவுட்டில் எடுக்கப்படம் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதுவரை ஏராளமான பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. எனினும், ஒவ்வொரு முறை புதிய ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாகும் போதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறியதில்லை. கடைசியாக "நோ டைம் டு டை" என்ற பாண்ட் திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது.

    இந்த படத்தில் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார். நோ டைம் டு டை படத்தை சேர்த்து இவர் 16 ஆண்டுகளில் ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டுடன் பாண்ட் படத்தில் நடிப்பதை டேனியல் கிரேக் நிறுத்திக் கொண்டார். இவர் விலகியதை தொடர்ந்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்பது உலகம் முழுக்க கேள்விக்குறியாகவே உள்ளது.

     


    இன்றுவரை இந்த கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவர் தான் என கூறும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மார்வல் படங்களில் நடித்து புகழ் பெற்ற ஆரோன் டெய்லர் ஜான்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஜேம்ஸ் பாண்ட் படங்களை எடுக்கும் இயான் ப்ரோடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் அடுத்த பாண்ட் நடிகர் பற்றி கேள்வி எழுப்பியது. அதற்கு யூகங்களுக்கு பதில் அளிப்பதில்லை என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், படத்தயாரிப்பு நிறுவனம் சார்ந்த தகவல்களில் அடுத்த பாண்ட் நடிகர் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக கூறப்படுவது பற்றி டெய்லர் ஜான்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "மக்கள் என்னை அந்த பாத்திரத்தில் பார்ப்பது அருமையாக இருக்கிறது. இவற்றை நான் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • கடந்தாண்டு இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்
    • மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இதனையடுத்து கடந்தாண்டு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இதனையடுத்து மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

    இந்நிலையில் தற்போது இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் காதி என்கிற படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
    • அஜித் நடித்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். இவர் சினிமா மட்டுமின்றி பைக் ரேசிங், புகைப்படம் எடுப்பது மற்றும் டிரோன்களை இயக்குவது என பலதுறைகளில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    பைக் ரைடிங் மோகம் அதிகரித்த போதிலும், சினிமாவிலும் அஜித் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

     


    இந்த நிலையில், நடிகர் அஜித் மீண்டும் பைக் பயணத்தை துவங்குவதை உணர்த்தும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பைக் பயணத்திற்கு ஏற்ற உடையில் காணப்பட்டார்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அஜித் பைக் ரைடிங் செய்பவருக்கு டிப்ஸ் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவின் படி நடிகர் அஜித் பைக் ரைடர் ஒருவருக்கு பாடம் எடுக்கும் காட்சிகளும், டிப்ஸ் கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.
    • அமீர்கான் - ஜெனிலியா படப்பிடிப்பின் போது உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    பிரபல இந்தி நடிகர் அமீர்கான்- ஜெனிலியா தேஷ்முக் ஜோடியாக நடிக்கும் இந்தி படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்த படத்தை இயக்குனர் பிஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வருகிறார்.

    'லால் சிங் சதா' படத்தை தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்கு பின் தற்போது இந்த புதிய படத்தில்  அமீர்கான் நடிக்க தொடங்கி உள்ளார்.மேலும் இந்த படத்தின் நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட வில்லை.அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.

    இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படுகிறது.இந்நிலையில் அமீர்கான் - ஜெனிலியா இருவரும் படப்பிடிப்பின் போது செட்டில் உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    அந்த புகைப்படத்தில் ஜெனிலியா வெள்ளை நிற மேலாடை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிக உற்சாகமாக சிரிப்பது போன்றும் அமீர்கான் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து அருகில் அமர்ந்து இருப்பது போன்றும் காணப்படுகிறது.இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    2008 -ல், ஜெனிலியா இம்ரான் கானுடன் 'ஜானே து...யா ஜானே' படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அமீர்கானுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்               

        உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய் கேரளா சென்றுள்ளார்.
    • இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

    லியோ வெற்றியை தொடர்ந்து விஜய் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றுள்ளார். கேரளா சென்ற நடிகர் விஜய்க்கு அம்மாநில ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்தனர்.



    இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் கூடியது. இதை அறிந்து ரசிகர்களை சந்திக்க விஜய் படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் ஒன்றின் மீது ஏறினார்.

    பிறகு ரசிகர்களை நோக்கி கை அசைத்த விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    ×