கேரளாவில் அதகளம் செய்த ரசிகர்கள் - மீண்டும் தன் ஸ்டைலில் செல்ஃபி எடுத்துக் கொண்ட விஜய்

கோட் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய் கேரளா சென்றுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
கேரளாவில் அதகளம் செய்த ரசிகர்கள் - மீண்டும் தன் ஸ்டைலில் செல்ஃபி எடுத்துக் கொண்ட விஜய்
Published on

லியோ வெற்றியை தொடர்ந்து விஜய் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றுள்ளார். கேரளா சென்ற நடிகர் விஜய்க்கு அம்மாநில ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை காண ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் கூடியது. இதை அறிந்து ரசிகர்களை சந்திக்க விஜய் படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் ஒன்றின் மீது ஏறினார்.

பிறகு ரசிகர்களை நோக்கி கை அசைத்த விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com