ஆம்பிளைங்க அழ கூடாதுனு எதுனா இருக்கா? கவனம் ஈர்க்கும் வெப்பம் குளிர் மழை டிரைலர்

இந்த பாடலை ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார்.வெப்பம் குளிர் மழை படத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ளார்.
ஆம்பிளைங்க அழ கூடாதுனு எதுனா இருக்கா? கவனம் ஈர்க்கும் வெப்பம் குளிர் மழை டிரைலர்
Published on

அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்குகிறார். புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடல் "டமக்கு டமக்கா" வெளியிடப்பட்டது. இந்த பாடலை சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடலை தொடர்ந்து இந்த படத்தின் முதல் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக நடிகர்களான திரவ் மற்றும் இஸ்மத் பானு இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெப்பம் குளிர் மழை படத்தில் எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகள் பற்றிய கதையம்சம் கொண்டிருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com