ராம் சரண் - ஜான்வி கபூர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன
ராம் சரண் - ஜான்வி கபூர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
Published on

இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் - ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ஆர்.சி. 16 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில், ராம் சரண், ஜான்வி கபூர், சிரஞ்சீவி, ராம் சரண் மனைவி உபாசனா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்தின் பூஜை தொடர்பான படங்கள் மற்றும் வீடியோவை படக்குழு எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தற்போது ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com