அறம் இயக்குநரின் அடுத்த படத்தை தயாரிக்கும் வெற்றி மாறன்

நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
அறம் இயக்குநரின் அடுத்த படத்தை தயாரிக்கும் வெற்றி மாறன்
Published on

தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படத்திற்கு "மனுசி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரிக்கிறார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com