அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆகும் மார்வல் நடிகர் - அவரே சொன்ன பதில்

"நோ டைம் டு டை" என்ற பாண்ட் திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆகும் மார்வல் நடிகர் - அவரே சொன்ன பதில்
Published on

ஹாலிவுட்டில் எடுக்கப்படம் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதுவரை ஏராளமான பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. எனினும், ஒவ்வொரு முறை புதிய ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாகும் போதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறியதில்லை. கடைசியாக "நோ டைம் டு டை" என்ற பாண்ட் திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தில் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார். நோ டைம் டு டை படத்தை சேர்த்து இவர் 16 ஆண்டுகளில் ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டுடன் பாண்ட் படத்தில் நடிப்பதை டேனியல் கிரேக் நிறுத்திக் கொண்டார். இவர் விலகியதை தொடர்ந்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்பது உலகம் முழுக்க கேள்விக்குறியாகவே உள்ளது.

இன்றுவரை இந்த கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவர் தான் என கூறும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மார்வல் படங்களில் நடித்து புகழ் பெற்ற ஆரோன் டெய்லர் ஜான்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஜேம்ஸ் பாண்ட் படங்களை எடுக்கும் இயான் ப்ரோடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் அடுத்த பாண்ட் நடிகர் பற்றி கேள்வி எழுப்பியது. அதற்கு யூகங்களுக்கு பதில் அளிப்பதில்லை என்று படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், படத்தயாரிப்பு நிறுவனம் சார்ந்த தகவல்களில் அடுத்த பாண்ட் நடிகர் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக கூறப்படுவது பற்றி டெய்லர் ஜான்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "மக்கள் என்னை அந்த பாத்திரத்தில் பார்ப்பது அருமையாக இருக்கிறது. இவற்றை நான் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com