நண்பர்களுக்காக பிரியாணி செய்து கொடுத்த நடிகர் அஜித்

அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மிக ஆர்வம் உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்' அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது
நண்பர்களுக்காக பிரியாணி  செய்து கொடுத்த நடிகர் அஜித்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார்.'தல' என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மற்றும் சமையல் உள்ளிட்டசெயல்பாடுகளில் மிக ஆர்வம்உள்ளவர். மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்' . அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது மத்திய பிரதேசத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார்.'விடாமுயற்சி' நட்பால் நடிகர் ஆரவும் இந்த சுற்றுப் பயணத்தில் அவருடன் இணைந்து உள்ளார்.

ஒரு அடர்ந்த காட்டில் நடிகர் அஜித் கேஸ் அடுப்பில் ஒரு அண்டாவில் சிக்கன் பிரியாணி சமைத்து அவரது நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்து உள்ளார். தற்போது அந்த பிரியாணி சமையல் வீடியோ, புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதனை ரசிகர்கள் பார்த்து வியப்படைந்து வருகின்றனர்

நடிகர் அஜித் சிக்கன் பிரியாணி தயாரிப்பதில் வல்லவர். அவர் தயாரித்த பிரியாணியை சாப்பிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதனை பாராட்டி  உள்ளனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com