search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badminton Coach"

    • டாப்ஸி காதல் திருமணம் கடந்த 23-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது
    • நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்

    நடிகர் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதை தொடர்ந்து 'ஆரம்பம்', 'காஞ்சனா 2' உள்பட பல படங்களில் அவர் நடித்து உள்ளார்.

    தற்போது இந்தி படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார். பிரபல நடிகர் ஷாருக்கானுடன் ஜோடியாக நடித்த 'டங்கி' படம் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில் 'டென்மார்க்' நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் என்பவரை பல ஆண்டுகளாக டாப்ஸி காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் இந்த மாதம் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.





    இந்நிலையில் டாப்ஸி காதல் திருமணம் கடந்த 23-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது.

    இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். இதையடுத்து நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பூப்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் கேலோ இந்திய மையம் அமைத்து செயல்படுத்துவதற்கு இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதன்படி, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கேலோ இந்திய விளையாட்டு மையம் அமைக்க பூப்பந்து விளையாட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது,

    ஆகையால் முன்னாள் சாம்பியன் விளையாட்டு வீரர் பயிற்றுநராக நியமிக்கும் வகையில் பூப்பந்து விளையாட்டு பிரிவில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர் பயிற்றுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

    விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 30-ந் தேதி வரை வழங்கப்படும். தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×