ஹோலி கொண்டாடிய திரை உலக பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார்
ஹோலி கொண்டாடிய திரை உலக பிரபலங்கள்
Published on

ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி இந்திய திரை பிரபலங்கள் பலர் ஒருவருக் கொருவர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரன்களுடன் 'ஹோலி' கொண்டாடினார்.

ரஜினி முகத்தில் அவரது பேரன்கள் மகிழ்ச்சியாக கலர் பொடிகளை பூசினர். பதிலுக்கு ரஜினியும் பேரன்கள் முகத்தில் வர்ணங்களை பூசி மகிழ்ந்தார்.

இதுபோன்று நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், ராய்லட்சுமி, கியாரா அத்வானி, ரித்திகாசிங், நிமிஷா சஜயன், திஷா பதானி, ரவீனா தாண்டன், அவரது மகள் ராஷா உள்பட பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனாஸ் மகள் மால்டி மேரியுடன் இணைந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த பண்டிகையை கொண்டாட பிரியங்கா சோப்ரா கணவரும், ஹாலிவுட் பாடகருமான நிக்ஜோனாஸ் வெளிநாட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்பே மும்பை வந்திருந்தார்.

நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார். இதுபோன்று அமிதாp பச்சன், சிரஞ்சீவி, சித்தார்த் மல்கோத்ரா, அக்ஷய்குமார், டைகர் ஷெராப், விஜய் தேவரகொண்டா உள்பட பலர் ஹோலி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com