செய்திகள்

வேப்பம்பட்டு அருகே சிக்னல் கோளாறு: மின்சார ரெயில்கள் தாமதம்

Published On 2017-05-19 07:14 GMT   |   Update On 2017-05-19 07:14 GMT
வேப்பம்பட்டு ரெயில் நிலையம் - திருநின்றவூர் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் அனைத்து மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டு ரெயில் நிலையம் - திருநின்றவூர் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை நோக்கி வந்த அனைத்து மின்சார ரெயில்களும் வரும் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்ததும் ஆவடி, திருவள்ளூரில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நடுவழியில் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர். சிலர் ரெயிலில் இருந்து குதித்து பஸ், ஷேர் ஆட்டோக்களில் ஏறிச் சென்றனர். வயதானவர்களும், பெண்களும் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.

இதற்கிடையே சென்னை நோக்கி வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜோலார்பேட்டை எக்ஸ் பிரஸ் ரெயிலும் வேப்பம்பட்டு அருகே நிறுத்தப்பட்டது. அதில் மின்சார ரெயிலில் இருந்த பயணிகள் ஏறிச் சென்றனர்.

காலை 10 மணி அளவில் சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து சென்னைக்கு மின்சார ரெயில் சேவை சீரானது.

சிக்னல் கோளாறால் சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையிலும் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையிலும் எந்த பாதிப்பும் இல்லை.

Tags:    

Similar News